Skip to main content

விஸ்வரூபம்




இந்த படம் பண்ணிய பிரச்னை எல்லோரும் அறிந்ததே. அப்படி ஒன்றும் இதில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. 

வெறும் பேப்பரில், டிவியில் மற்ற மீடியாக்களில் வந்த ஆப்கானிஸ்தான் பற்றிய விவரங்களை சேகரித்து கோடிக் கணக்கில் கொட்டியதாக(?) சொல்லி படம் பண்ணி வியாபாரம் செய்ய வழி தேடி கடைசியில் அம்மாவுடன் under table dealing பண்ணி சமர்த்தாக படத்தை விற்றுவிட்ட சந்தோஷம் கமலஹாசனின் முகத்தில் தெரிந்தால் அது ஆச்சிரியபடுவதற்கு இல்லை. 



இதில் ஏமாந்தவர்கள் கமலின் ரசிகர்கள் தான். படத்தை பார்க்க ப்ளைட் பிடித்து ட்ரெயின் பிடித்து அடுத்த மாநிலத்துக்கு எல்லாம் போய் காசை செலவழித்து இந்த ஒன்றுமே இல்லாத டாகுமெண்டரி படத்தை பார்க்க போன அவர்களை சொல்லணும். படத்தில் ஒன்றுமில்லை என்பது தெரிந்தவுடன் ஆஹா..ஓஹோ ...என்று பொய்யாய் பிரசாரம் செய்து மனச் சமாதானப்பட்டுக் கொண்டார்கள். பாவம் தான்....அடுத்த முறை சூடு போட்டுக் கொள்ளமாட்டார்கள். நம்புவோம்.....



நான் இப்படி எழுதுவதற்காக, 'அறிவு ஜீவிகளுக்கு தான் புரியும் இந்த கதை' என்கிற கதையெல்லாம் இங்கு வேண்டாம். நாலு இங்கிலீஷ் படத்தையும் ஐந்து சத்யஜித் ரே படத்தையும் பார்த்தவன் தான் அறிவுஜீவி என்றால் நாங்களும்  அந்த மாதிரி நாற்பது படம் பார்த்துவிட்டுதான் இதை எழுதுகிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

கமல் முத்திரையுடன் ஒரு படம் வந்தால் அது அறிவுஜீவிகளுக்கானது தான் என்று யார் சொன்னது?.... 

எடுத்தவுடன் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் பிராமண பாஷையை பேசி மற்ற தமிழர்கள் யாரும்  அமெரிக்காவில் வசிக்கவே தகுதியில்லாதவர்கள் என்பது மாதிரி காட்டியிருக்கிறார்கள். வன்மையாக கண்டிக்கதக்க ஒரு விஷயம் இது. சொல்லப் போனால் இந்த படத்தை எதிர்த்து இதுக்கு தான் போராடியிருக்கணும்.

ஒரு படத்துல காசு வாங்காம, இல்ல.. கொஞ்ச சீனுல மட்டும் வந்து போறவங்களை ஏதோ சொல்லுவாங்களே....ஆங்...Guest Appearance... அந்த மாதிரி கமல் இந்த படத்துல....சுத்தமா நடிக்கவே இல்லை...

ஒரு போராளி கூட்டத்துக்குள்ளே வேவு பார்க்க போகிறவன் எந்த மாதிரி இருப்பான்னு தெரியாத அளவுக்கு நம்ம பொது ஜனத்துக்கு அறிவில்லாம இல்ல. ஏதோ நம்ம ஊரு ஜனாதிபதி வெளிநாடு சுற்று பயணம் போவாருல்ல அந்த மாதிரி கமல் அங்கே போனவுடன் அந்த கூட்டத்தில இருக்கிறவங்க இவரை வரவேற்கிறதென்ன சுத்தி காமிக்கிறதென்ன....ரொம்ப காதுல பூ சுத்தாதீங்க கமல் சார்......




ஒரே விஷயத்தை மட்டும் கமல் இந்த படத்தில மீண்டும் நிருபிச்சிருக்கார். அது என்னன்னா டான்ஸ்...பிஜூ மகாராஜ் அவர்களின் துணையோடு அழகாக ஆடியிருக்கிறார். அதுக்காக இவ்வளவுவுவுவு.....நீள பாட்டு வேணுமா....




இந்த படத்துல கொஞ்சம் வித்தியாசப்படுவது ஆண்ட்ரியா மட்டுமே. அழகாகவும் இருக்கிறார். அளவாகவும் நடித்திருக்கிறார். 

வேற எதுவும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை...

இந்த மாதிரி ஒரு சாதாரண படத்துக்கு இனி யாராவது பந்தா பண்ணினா அதுக்கு எதிரா நாம தான் விஸ்வரூபம் எடுக்கணும்...


Comments

  1. அப்படிப் போடுங்க அரிவாளை... பாத்தவங்க எல்லாரும் இதைத்தான் சொல்றாங்க. ஆனாலும் என்ன பண்ண, கமல் இல்லியா.... அதனால பிரமாண்டம் அது இதுன்னு கீழே விழுந்தாலும் மண்ணு ஒட்டலைங்கற கதையா சமாளக்கிறாங்க.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு இந்த சமாளிப்பு வேலை எல்லாம் முடியாது ஷாஜஹான்...சொன்னா உண்மையை சொல்லணும்.

      Delete
    2. அப்படிப் போடுங்க அரிவாளை

      Delete
  2. Hi Mam i red ur full review about The VIswaroobam. so finally ur reviews says is nothing on the film. i don't know u r watched full movie or not.and also if u seen without Scene's Cut may b u 'll know (b'coz u said u seen more than 40 film's)how he was enter in this group and all.

    1) You said most of the People speaks in Brahmin's Language u should know the Only Persons Speak that Languagein this movie Kamal, and Heroines is the rest they are Spoke in farsi pashto , Urdhu. and impartant thing the Mulla Omar also speaking in Tamil some scene's he is not use that Langauge.

    2) The Next One is you Made Known about Dancing. in ur Point of view and by ur Experience How many movies , actress or dancers they showed the talent in past Indian cinema history (u r the person seen 40 movies) can u tell me at least 5 or 10 movies about that " kathak dance" ? if you could you can reply here.

    3) You said all of the story grabbed from "Just Papers" , TV ,and Internet pages. of-course not only for him every bodies heard by these ways only i hope even you too i don't know as you told b4 by Common sense u may be get thes all details directly. we are not GOD and Satellite to Direct Capture. u should know thats not an English Country and also atleast need a 200 Technician's to work that part.

    4) in-case in ur point of view the movie is not worth the part you can help him.

    I have a Lot of plus points i just Answerd wat u wrote for here.

    These all about in my Point of view. even if want to debate with me about this movie i 'll spent a time anytime. Tnx.

    ReplyDelete
    Replies
    1. Gobi,

      First of all, i had to clear one thing...i had seen this movie with and without scissors. k?

      Second, i mentioned the word 'எடுத்தவுடன்' which u missed to notice. After that whether they speak pashto/urdu/hindi, that doesnt matter to me....

      Third, i didnt underestimate kamal's talents overall. This movie is not worth to keep a feather on his hat. But he who made it big by his propaganda. And i praised his dancing abilities...but the song's length which makes to wriggle us in our seats.

      Maybe the money invested for the movie had bitten his hand. But while shooting for this one, he had sensed that the movie is a real time war story and it wont set its sail here. He went the other way to promote it. that part of it i hate. Unwanted strings were pulled by him and the people and the work that suffered in Law & Order and Judicial side due to his promotional work was not appreciable....

      if u have any other doubts i'll clarify it...

      Thanx....


      Delete
  3. Mam one of the Brother gave a comment b4 to me . if u seen into keen that line u 'll know. he said whoever seen this movies they said . that means he is not seen himself from now. Then How they Comments not only in this movie even other issue's too so word by Mouth is not that clear part of the common conversation.

    ReplyDelete
  4. //இதில் ஏமாந்தவர்கள் கமலின் ரசிகர்கள் தான். //

    அவங்க ஏமாந்தா ஏமாந்துட்டுப்போகட்டும்,அடுத்தவங்களையும் உலகப்படம் இதுனு சொல்லி ஏமாத்தப்பார்க்கிறாங்களே :-))

    நல்ல வேளை நீங்க அதெல்லாம் உண்மைனு நம்பி ஏமாறாம படத்தை சரியா புரிஞ்சுக்கிட்டிங்க.
    ------------

    கோபி ,

    என்னைப்போல பாமர சினிமா ரசிகனுக்கு படத்தின் மூலமா லோகநாயகர் என்ன சொல்ல வரார்? என் உலக அரசியல் அறிவு,அறிவு வளர்க்கவா செய்தார், இருக்கிற அறிவே மழுங்கிடும் போல இருக்கு படம் :-))

    ரா என்பது இந்திய அரசு நிறுவனம் ,அதில் வேலை செய்றவங்களுக்கு எல்லாம் அரசு பணம் செலவழிக்குது,எல்லாம் இந்திய மக்கள் பணம், ஆனால் ரா ஏஜன்ட் அமெரிக்காவில அமெரிக்க அரசுக்கு கூட தெரியாம ,அமெரிக்காவை காப்பாற்ற வேலை செய்துக்கிட்டு இருக்காராம் :-))

    இந்தியாவில மும்பைக்கு குண்டு வைக்க வராங்க ,அதை உளவுப்பார்க்க வேண்டாமா? இல்லை அதைவிட அமெரிக்காவின் பாதுகாப்பு முக்கியம்னு அரசாங்கம் நினைக்குதுனு காட்டுறாரா, ரா என்ன அமெரிக்காவின் BPO உளவு நிறுவனமா? என்னத்துக்கு அநியாத்துக்கு அமெரிககாவிற்கு காவடி தூக்கி இருக்கார்?

    சீசியம்-137 க்கு தான் கதிரியக்க சக்தியுண்டு,ஆனால் படத்தில சீசியம் 132.09னு சாதாரன வகைக்கு அட்டாமிக் வெயிட் சொல்லிக்கிட்டு இருப்பாங்க"ஜீனியஸ் ஆன்காலஜிஸ்ட்" :-))

    ஒரு தனிமத்துக்கு ஐசோடோப்கள் இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு ,உலக அறிவு,பொது அறிவு பத்திலாம் பேசட்டும்!

    இன்னும் நிறையா டைனோசர் போற அளவுக்கு ஓட்டை எல்லாம் படத்தில் இருக்கு, அதை எல்லாம் என்னோட பதிவில் சொல்லி இருக்கேன்,முடிஞ்சாப்பாருங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பதிவை படித்தேன். அருமை. படம் சரியில்லை என்பதை ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்....நன்றி...

      Delete
  5. பொதுவாக படங்கள் ஏதும் பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது ,தரம் குறைந்து விட்டது என்பதற்காக இல்லை என் தரம் இந்த அவசர சண்டை அவசர காதல் அவசர வன்முறை அளவுக்கு உயரவில்லை ...அவுளவுதான்

    ஆனால் இந்தப்படத்தையும் எப்ப வாவது டிவி- ல் போடும்போது பார்த்து கொள்ளலாம் ,ஆனால் இதற்காக எத்தனை இஸ்லாமிய சகோதர்களிடம் facebook ல் வாக்குவாதம் சண்டை உங்கள் மதம் ஏன் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்று பெரிய வாக்கு வாதம் நான் பகைத்து கொண்டது ஏன் லிஸ்ட் ல் உள்ள முஸ்லிம் சகோதரர்களை கடைசியில் பார்த்தல் படம் எடுத்தவர்களும் ,எதிர்த்தவர்களும் திடிர்னு சமாதானமாகி போக விஸ்வரூபம் வாமன ரூபமாகி போக நான் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிர வாதியானது தான் மிச்சம்

    அதைவிட சில விசயங்களை தைரியமாக வெளியுட்டுள்ள உங்கள் துணிவு பாராட்ட தக்கது .

    ReplyDelete
  6. ***Hi Mam i red ur full review about The VIswaroobam. ***

    ***so finally ur reviews says is nothing on the film.***

    ***also if u seen without Scene's Cut may b u 'll know (b'coz u said u seen more than 40 film's)how he was enter in this group and all.***

    Why do you write in English if you are making these many mistakes?

    I want you guys to understand one simple thing clearly. Just because you appreciate any KH's trash as great that will never make you a "genius"!

    ReplyDelete
  7. Aklia: My observation is that this movie is not for women and children. Some KH fans do enjoy this movie but they fall in a "small percentage"!

    Just like KH has freedom of expression in showing anything he wants, you have all the right criticize the movie!

    Why cant these people appreciate your freedom of expression? They can not. Because they are also hypocrites just like their idol! :)

    ReplyDelete
    Replies
    1. thanx varun...

      He who directs a film is voluntarily paletting the movie to the society. Every individual has his/her own opinion to comment upon.

      Delete
  8. Keep Anonymous option, you will get more comments.

    I watched the film in a theatre with the much-popularised modern acoustics.

    As Varun said, the film is for those who like to enjoy such high pitch sounds.

    Unless one has already watched and enjoyed Hollywood movies popular for special effects, Vishwaroopam will strike him with awe and wonder.

    In my opinion, or in general opinion, the first part is better as the element of surprise is kept taut. The second part falls apart. Tedius repetitious. Convoluted science - as one said here - non science passing for genuine science! Characters walk, run and jump. Beyond that, nothing happens. Kamalahasan is a not a good story teller.

    About Brahminical dialect, it is your prejudice against Brahmins that make you squirm at it. U need not. Keep ur mind clean. There are variety of dialects there; of which it is one. And an artist can bank upon it to bring authenticity if he so desires: it is called freedom of exhibition (isn't it the context of films?)

    When we watch a film of a popular star, we need not bother about what his fans have thought or wd think. As a reader of blogs, I care only what you say.

    Ur review suffers from strong prejudices. It is a good review and wd have convinced many but for the prejudices. U have wasted the chance!

    ReplyDelete
    Replies
    1. கொல சேகரன்,

      ஹய்யோ...ஹய்யோ... அப்போ சான்ஸ் வேஸ்ட் செய்யாம பதிவு எழுதி இருந்தா ஆஸ்கார் வாங்கியுருக்கலாம்ல?

      என்ன எழுதி இருக்கோ அதுக்கு கருத்து சொல்லுங்க,எப்படி எழுதியிருக்கலாம்னு சொல்வது தேவையற்றது,ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்பிரஸ்ஸன்னு சொல்லிட்டு,இப்படி தான் சொல்லணும்னு லெக்சர் கொடுக்கிறாரே :-))

      Delete
    2. My comments r for Akila

      Delete
  9. KH fans nay not be willing to accept facts, but the film has huge logical errors. I was also a KH fan, but unless we tell him that he is feeding crap, he wouldnt mend his ways. He used to say he wanted to 'uplift' the tamil population's taste in films, but SORRY MR.KH, you are degrading us!. Give us films like Anbe sivam( though you had lifted the story line from Hollywood!, the content was good).
    What you narrated in that film " the Tea business" is happening now in the country!

    ReplyDelete
  10. உங்க கும்கி விமர்சனம் மாதிரி இன்னும் விளக்கமா படத்தை பத்தி எழுதி இருக்கலாம். படத்தை பத்தி ஏதோ நாலு வரி எழுதின மாதிரி இருக்கு.
    இப்ப நீங்க உங்க சினிமா தளத்தை "http://vannathiraigal.blogspot.in/" உபயோகிக்கபது இல்லை போல இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. அதிலும் பதிவு போட்டுவிட்டேன்...

      Delete
  11. @varun

    //"these many" mistakes?//

    ha ha ha. check your back first, dimwit.

    ReplyDelete
  12. இந்த படம் கண்டிப்பாக பெண்களுக்கு பிடிக்காதுதான்..எவ்ளோ குறைகள் இருந்தாலும் படத்தினுள் நம்மை ஒன்ற செய்கிறது காட்சிகள்...எனக்கு பிடித்து இருக்கிறது.

    ReplyDelete
  13. உங்களுக்கு படம் புரியலைன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  14. Dear Mam,
    I read your review, just to know how far the film
    could have attracted a women. Your review didn't
    disappoint me.
    Thank you.

    ReplyDelete
  15. நான் இந்த பதிவுல கும்கி படம் அளவுக்கு முழுசா விமர்சனம் பண்ணவில்லை என்பது நிஜம்தான். படமும் என்னை மனம் ஒன்றி பார்க்கவிடவில்லை.

    அது என்ன பெண்களுக்கு என்றும் ஆண்களுக்கு என்றும் ஏதாவது படம் இருக்க என்ன. சாதரணமாய் பெண்கள் என்றாலே குடும்ப படம் பார்ப்பவர்கள், பாப்பா படம் பார்ப்பவர்கள் என்ற எண்ணம இந்த ஆண்களுக்கு சற்று அதிகம் தான். உங்கள் வீட்டில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். நான் அப்படி இல்லை. i keep my head up always...

    படத்தின் தரம் பற்றி பேச பெண் என்றும் ஆண் என்றும் இருக்க வேண்டும் என்ற பாகுபாடு இல்லை. பெண் உலகம் ஆண் உலகம் என்ற பிரிவினை காரணமாகத்தான் எங்களின் கருத்துக்கள் அடிபட்டு போகிறது. அனைவருமே இந்த பூமியில் ஒன்றுதான். உடல் கூறுகளில் வேறுபட்டிருக்கலாம். அதற்காக எங்களின் அறிவை ஆண்களிடம் அடகு வைக்க தயாராக இல்லை.....

    ReplyDelete
    Replies
    1. Well, men and women are equal and there is no doubt about it. But there are big differences in their taste in our society..There are exceptions, of course.

      Let us look at few statistics..

      * In India, How many women smoke compared to men? There is a huge difference in the "PERCENTAGE".

      * In India, How many women drink when compared to Men? There is a huge difference in the "PERCENTAGE"

      * Women DO NOT enjoy seeing violence as much as men do.

      I am talking about the Indian society, today. It might change in 20 years..

      So, you dont need to take that comment "offensively". இன்றைய உலக நடப்பு வைத்து ஆண் பெண் ரசனைனு பொதுப்படையாகப் பேசுறோம்.

      Delete
    2. Varun,
      welcome...
      Taste differs i accept, but its not exceptions. we are in 50-50 ratio...

      Still in India the womenfolk enjoy seeing the family oriented, non-violence movies. But the percentage of that population had reduced as we are also educated think heads....so i never like this "Generalising Type" of comments about women...

      இது பெண்ணீயம் என்று எண்ணி விடவேண்டாம். நாங்கள் தலை நிமிர்ந்து கொண்டிருக்கும் காலம் இது. இந்த காலகட்டத்தில் நாங்கள் பொதுவான கருத்துகளுக்கு கொஞ்சம் செவிசாய்க்காமல் இருப்பதே நல்லது என்று எண்ணுகிறோம்....

      நன்றி....

      Delete
    3. Generalising comments r made by psychologists and philosophers also. Psychologists, while treating human beings in general, also treat the sexes on gender basis. According to them, nature, attitudes, behaviour patterns r markedly gender-specific. This s a necessary knowledge for them because this leads them to devise different kinds of cures for the sexes. Psychoanalysis fully bases itself on this. There r certain mental maladies like hysteria which r specific to females. There r generalistation and specialisation at once - a point we ignore to our peril. The religions too treat them differently. It prescribes different rituals and expect differently. Attainment of highest spiritual level is not possible for women. Even if they do, it is difficult to get rid of their body consciousness. Till she becomes an old hag of 70 and more, she is conscious of her body whereas men loses it when they pass their prime.

      Hence, every sphere of knowledge or human activity, even in science, treats the sexes differently. Science? Ya, medical science. You have gynos, don't u? Fem, Forty, Fetalie - s the French medical proverb. Diseases too strike her differently - s the meaning of this proverb. About their thinking, the female way is to go extreme. Look at Mamata, or Arundati, or Petkar. A woman personalises everything. Objectivity is impossible for her.

      From birth to death, men and women are different. What we should make of that difference is the only question. A good society uses it positively; a talibanistic society negatively.

      If u don't believe it, it is better to read your own blog posts more than once. They all can have flowed only from a female mind.

      Delete
  16. There is nothing in the film that speaks against muslim community at large.
    Even this film did not vehemently oppose terrorist. It just lightly criticize them thats all. Hence there will be of no use.
    This film is NOTHING to do with Indian muslim community. It speaks only afghan muslim and their life in the troubled land. Even that too not taken in depth.
    Becoz kamal has limitation. He takes film in Tamil.
    After seeing the movie, one should WONDER why such a hue and cry was made against this film

    ReplyDelete
  17. IF YOU WATCH THIS MOVIE IN CINEMA THEN YOU WILL UNDERSTAND THE STORY. YOUR POST IS JUST A JOKE.

    ReplyDelete
    Replies
    1. FYI
      I watched this movie in theatre.....

      Delete
  18. ஏங்க.வன்முறைக்காட்சிகள் பிடிக்காது என்கிற அர்த்ததில் சொன்னது.அதுக்குன்னு இப்படியா..
    சரி.ஓகே..நான் இப்படித்தான் என்று சொல்லிவிட்டீர்கள்..
    இனி..
    மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்..
    அப்படித்தான் எழுதனும் போல..

    ReplyDelete
    Replies
    1. ஜீவா...பெண்களின் முன்னேற்றம் என்பது மச்சியிலும் குவார்ட்டரிலும் இல்லை....
      ஆண்களின் பார்வையில் நாங்களும் சம உயிர்தான் என்ற மதிப்பீடு கிடைக்கதான் போராடுகிறோம்...
      பார்ப்போம்...

      Delete
    2. ஆனா ஊனா பெண்ணியம் பத்தி பேச கிளம்பிடறாங்கப்பா....

      Delete
  19. நம்ம ஊர்க்காரர் எழுதினது..
    http://www.worldcinemafan.blogspot.in/2013/02/viswaroopam_20.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன்....நம்ம தலைவர் உலக சினிமா ரசிகன் அவர்கள் பெரிய கமல் ரசிகர். எல்லாருக்கும் தெரியும் அது. அவர் அதை ரசிச்சு ருசிச்சுதான் பார்த்திருப்பார்...
      சீன் பை சீன், பிரேம் பை பிரேம் ஆகா கூட எழுதுவார்.

      நான் கமலின் ரசிகையும் கிடையாது. கொஞ்சம் அறிவாய் யோசிக்கிற பொதுஜனவாதி. தவறாக எழுதவில்லை...எனக்கு சரியெனத் தோன்றியதைதான் எழுதியுள்ளேன்...

      நன்றி....

      Delete
  20. http://worldcinemafan.blogspot.com/2013/02/viswaroopam_20.html

    ReplyDelete
  21. //ஒரு போராளி கூட்டத்துக்குள்ளே வேவு பார்க்க போகிறவன் எந்த மாதிரி இருப்பான்னு தெரியாத அளவுக்கு நம்ம பொது ஜனத்துக்கு அறிவில்லாம இல்ல.//
    மேசமான பயங்கரவாதிங்கள தமிழிலே போராளி என்று தான் சொல்வாங்க என்று ஒரு சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்தது.இப்போ தலிபான்களை பற்றி நீங்க அப்படி சொல்கிறபடியால் அது சரி தான்

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...