இதை பார்த்து கொள்ளென்று
ஆந்தை தன் குஞ்சொன்றை கொடுத்து சென்றது...
பத்திரப்படுத்திக் கொள்ளென
பழங்களை போட்டுச் சென்றது கிளியொன்று...
உன்னால் காப்பாற்ற முடியும் என
முத்துமாலை ஒன்றை அணிவித்து சென்றது காகமொன்று...
இதையும் பெற்றுக் கொள்ளென்று
வழிப்போக்கன் ஒருவன் பிச்சையிட்டுச் சென்றான்...
வழியறியா வனாந்தரத்தில் சூனியம் நோக்கையில்
பொக்கிஷமாய் பாரங்களை கொள்ளமுடியாமல்
மடி உதறி எழுந்து நடையின் கனம் உணர்ந்து
நாட்டரசனாய் மேனி மீது தழுவியதெல்லாம் நழுவவிட்டு
லேகுவாகி பின் உச்சியின் வரம்பு தழுவினேன்....
வர வர உங்கள் ஒவ்வரு கவிதையும் சித்தர்கள் பாடல்கள் போல் பரிபாஷைகள் நிறைந்தவைகளாக உள்ளன.ஒரு பாடலுக்குள் ஓராயிரம் அர்த்தங்கள்.
ReplyDeleteதடைகற்கள் படிகற்களாய் கொண்டு வீறு நடை போடு எனபது மட்டும் சாரம்சமாக தெரிகிறது.வரிகள் அருமை
பொறுப்பை உதறி செல்வது நியாயமா? தர்மமா?
ReplyDeleteசம்சாரியாய் இருப்பவன் உதறமுடியது...அரசனாய் இருப்பவனால் முடியும்...
Deleteஎல்லோரும் உதறலாம் - மனப் பக்குவம் இருந்தால்!
ReplyDelete