Skip to main content

ரயில் பயணங்களில் 2....

பெண்களின் உடை....



இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென்னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. 

நம்ம ஊரு மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. அவ்வளவு நேரம் அமைதியா ட்ரெயின்ல உட்கார்ந்திருப்பாங்க. இறங்கும் ஸ்டேஷன் நெருங்கும் முன்னரே எல்லோரும் மூட்டை முடிச்சுடன் கதவு கிட்டே போய் நிப்பாங்க. 

இந்த நல்ல பழக்கம் ட்ரெயின் மட்டுமில்ல, சின்னதா வானத்தில பறக்குமே ஏரோப்ளேன் அதுல கூட அப்படிதான். லேண்ட் ஆகிட்டோம்னு பைலட் சொன்ன உடனே கதவை கூட ஏர் ஹோஸ்டஸ் திறக்கவிடாம க்யூ கட்டி நிப்பாங்க....



ரயில் வண்டி நின்ற கொண்டிருந்த அந்த பதினைந்து நிமிடத்தில் நடந்த விஷயம் தான் இது. இருபதுகளில் ஒரு பெண் தன் இரண்டு வயது குழந்தையுடன், அறுபதுகளில் ஒரு மனிதர் அவளின் மாமனார். 

என் சீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தாள் குழந்தையுடன். அருகில் நிற்பவர்களிடம் எல்லாம் அந்த குழந்தை பேசி சிரித்துக் கொண்டிருக்க அவளும் பேசிக் கொண்டிருந்தாள். இளைஞன் ஒருவனும் அதனிடம் பேசி சிரிக்க குழந்தையும் அவன் சட்டையை பிடித்து இழுக்க இவளும் சிரித்து பேச....அவளின் மாமனாரின் முகம் மாறிக் கொண்டிருந்ததை கவனித்தேன். 



அவர் என்னருகில் காலியாய் இருந்த இருக்கையில் அவளை அமரச் சொல்லி திரும்ப திரும்ப சொன்ன பிறகு அமர்ந்தாள். அதன்பிறகு நானும் அந்த குழந்தையும் பேசி பேசி ஒருவழியா சென்ட்ரல் வந்து பிரிந்தோம்....

வரும் போதும் இப்படிதான் ஒரு பெண் தன் குழந்தை தன் மேல் செய்யும் விளையாட்டுகளை ரசித்துக் கொண்டிருந்தாள். அருகில் இருந்த ஒரு விடலை பையன் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். 



இதில் நான் கவனித்த ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும். 

இப்போதிருக்கும் பெண்கள் யாரும் ஷால், துப்பட்டா என்று எதையும் மேலே போடுவதில்லை. லோ-கட் டாப்ஸ் வேற. 

குழந்தையை குரங்கு மாதிரி மேலே போட்டுக் கொள்கிறார்கள். அது சாய்வதே இவர்களின் மார்பில்தான். அது கை வைக்கவும் முகம் வைத்து தேய்க்கவும் செய்ய இவர்களின் மார்பு மேடுகள் எல்லோருக்கும் விருந்தாக..... 

மிக கேவலமாக உணர்கிறேன் நானும் ஒரு பெண் என்பதால்.... குனியும் போது தெரிவது வேறு. இப்படி குழந்தையை வைத்து அசிங்கபடுத்துவது வேறு.

இனியாவது வீட்டிலிருக்கும் பெரியவர்கள் மகள், மருமகள் என்று யாராக இருந்தாலும் கொஞ்சம் பார்த்து உடை அணிந்து கூட்டிவாருங்கள் பொது இடங்களுக்கு வரும் போது.  



குழந்தையை பெற்றுவிட்டால் கிழவி வேஷம் போட சொல்லவில்லை. குழந்தையை வைத்திருப்பதால் உடை கொஞ்சம் சரியாக அணிய வேண்டும் என்றுதான் சொல்கிறேன். அது ஒவ்வொரு பக்கமும் நம் உடையை இழுக்கும் என்பதை நாம் உணர வேண்டும். 

அதன் கைகள் அலையும் இடங்களை சற்று கண்ட்ரோலில் வைத்தால் நல்லது. பெண்களே. நீங்களும் உங்கள் செல்ல குழந்தையும் மட்டும் ட்ரெயின்னில் இல்லை. உடன் நிறைய பேர் இருக்கிறார்கள். விளம்பரங்களில் காண்பிப்பது போல் கட்டிபிடித்து கொஞ்சுவதேல்லாம் வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளலாம். யாருக்கும் எந்த objection னும் இல்லை. 

இதை படிக்கும் ஆண்கள் தன் வீட்டு பெண்களிடம் சொல்லவும். நெருடலான விஷயம் தான் இது. ஆனாலும் யாராவது எடுத்து சொல்லத்தானே வேண்டும்......




Comments

  1. உண்மையான வார்த்தைகள்.. ஆனால் உங்களை பிற்போக்குவாதி லிஸ்டில் சேர்த்து விடப்போகிறார்கள் இன்றைய முற்போக்கு பெண்கள்..

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை....நானும் சுடிதான் போடுகிறேன். பெண் என்பதால் அவர்கள் செய்யும் தப்பை சொல்ல கூடாதா என்ன....

      Delete
  2. "குழந்தையை குரங்கு மாதிரி மேலே போட்டுக் கொள்கிறார்கள். அது சாய்வதே இவர்களின் மார்பில்தான். அது கை வைக்கவும் முகம் வைத்து தேய்க்கவும் செய்ய இவர்களின் மார்பு மேடுகள் எல்லோருக்கும் விருந்தாக..... "

    சரியாக தான் சொல்லியிருக்கீங்க.....
    ஆனா கொஞ்சம் open ஆக சொல்லீட்டிங்க.
    படிச்சு திருத்திக்கிட்டாங்கன்னா மகிழ்ச்சி தான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையைத்தான் சொன்னேன்.....ஆண்களால் எழுத முடியாது. என்னால் முடிந்ததை செய்தேன். திருந்தினால் சந்தோஷம் தான்...

      Delete
  3. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் அகிலா மேடம்.
    உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  4. உண்மைதான் அகிலா. உடைகளில் கவனமாகத்தான் இருக்கணும் கழுகுக்கண்களில் இருந்து தப்பிக்கணும் என்றால்.

    ஆனால் இங்கே எங்கூரில் இளம்பெண்கள் உடையழகைப் பார்த்தால்......
    ப்ச். வேணாம். விட்டுடறேன்:(

    நம் உடம்பு நமக்கு ப்ரெஷ்யஸ் என்ற எண்ணம் இருந்தால் நல்லது. வயசான கிழவியின் புலம்பலென்று மக்கள்ஸ் நினைக்கலாம்:(

    ReplyDelete
    Replies
    1. இப்போ பெண்கள் ஏதோ குழந்தையை பெத்துட்டா எல்லாமே to be exposed அப்படின்ன்கிற thought க்கு போயிட்டாங்க...மேல் பாதியை காண்பிப்பது என்பது மானம் இல்லாத ஒரு செயல் என்றாகிவிட்டது....நம்ம சமுதாயம் எங்கு நோக்கி போகிறது என்றே தெரியவில்லை துளசி...

      Delete
  5. ஏம்மா, நீங்க பெண்ணாயிருக்கிறதுனால இதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டீர்கள். இதையே யாராவது ஆண், ஏன் மதுரை ஆதீனம் சொல்லியதற்கு பெண்கள் அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு போராடவில்லையா? அவரவர்களுக்கு ஆடை உணர்வு வேண்டும். இல்லாமல் திரிபவர்களை என்ன பண்ண முடியும். நான் இப்படித்தான் இருப்பேன், நீ ஏன் அதைப் பார்க்கிறாய். உன் மீதுதான் தப்பு என்பதுதான் இன்றைய பெண்களின் வாதம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வதும் சரிதான். நான் பெண்ணாய் இருப்பதால் எழுத முடிகிறது...

      ஆடை உடுப்பதில் சுதந்திரம் உண்டுதான். நாங்க எல்லாம் கூட சுடிதார் தான் போடுகிறோம். அதை கண்ணியமாக உடுத்தலாமே என்பதுதான் என் வாதம். அதுவும் குழந்தை கையில் இருந்தால் இன்னும் கவனம் அதிகம் தேவை என்பதை கணவனும் வீட்டில் இருப்பவர்களும் இந்த பெண்களுக்கு சொல்லி கொடுக்கத்தான் வேண்டும்.....

      Delete
  6. மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லிய உங்கள் நேர்த்தியை பாராட்டுகிறேன். உடல் முழுவதும் மூடி இருந்தாலும் மேயும் கண்களுக்கு இப்படிபட்ட நிகழ்ச்சி இலவச விருந்தாகவே இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...பெண்ணான என்னாலே தாங்க முடியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆடையில் கண்டிப்பாக கண்ணியம் தேவை...

      Delete
  7. உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை வரவேற்க பட வேண்டிய விஷயங்கள் ..சில தவறுகள் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்ய கூடிய நிலைமைக்கு கொண்டு சென்று விடும் பார்ப்பதை வெளியில் பகிர்ந்து சமுதாய விழிப்ணர்வு செய்வது நிச்சயமாக பாராட்ட படுகின்ற விஷயம் ..இரண்டாவது நீங்கள் கடந்து வந்த பாதையின் நல்லவைகளையும் கெட்டவைகளையும் அடுத்த சமுதாயத்திற்கு கொண்டுசெல்வதில் எல்லோரும் உங்களை போல் முன் வரவேண்டும் ஒரு சமுதாய விழிப்புணர்வு கிடைக்கும் ..ஆனால் அதே சமயம் அந்த குழந்தையின் மலழை தன்மைகளை மட்டும் ரசிக்கும் எங்களை போன்றவர்களும் ..இந்த கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்க வேண்டாம் என்பது தாழ்மையான வேண்டுகோளும் கூட ...

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பக்கமும் தவறு இருக்கிறதை சொல்லி இருக்கீங்க. ஒத்து கொள்கிறேன். ஆனாலும் முதலில் ஒரு பக்கம் ஒரு தவறை சரி செய்யலாமே என்றுதான் நான் நினைக்கிறேன்.

      Delete
    2. மழலை எனபது என்று தவறாக மலழை type பண்ணிவிட்டேன் தவறுகளை சுட்டிக்காட்டும் போது என்னுடைய தவறை நான் கவனிக்க தவறிவிட்டேன் ..தமிழ் அறிஞர்கள் மன்னித்துகொள்ளவும்.

      Delete
    3. இங்கு யாரும் தமிழ் அறிஞர்கள் என்று கிடையாது ராஜன். அவரவர் கருத்தை எடுத்து சொல்கிறோம் தாய் மொழியில். அவ்வளவுதான்.எல்லோருமே சமம்தான்.

      Delete
  8. Wonderful writeup. Hats off to Ahila Puhal Madam. Each and every word echoes your heart beat. I could sense the angst, anguish and kavalai over the decaying cultural norms. It shows that you cannot just tolerate anything which is not proper being done knowingly and unknowingly. This sense of samuga akkarai is what which makes a writer. Your words are testimony for it.

    ReplyDelete
    Replies
    1. thanx a lot....i had put upon my thoughts in an appropriate way. if it helps people to consider the matter a little, then my writeup is worth and i am proud of that....
      thanq again...

      Delete
    2. Truly said Ahila madam..

      Delete
  9. its 100% true, great Ms.Ahila

    ReplyDelete
  10. Well done அகிலா! ரொம்பவும் வெளிப்படையாகவும் நெத்தியடி மாதிரியும் உண்மைகளைச் சொல்லியிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே இது பற்றி நொந்து போய் பதிவு எழுதியிருக்கிறேன் இன்றைக்கு இளம் பெண்களிலிருந்து மத்திய வயது வரை நிறைய பெண்கள் நைட்டி போட்டுக்கொண்டு கடைத்தெருவிற்கு கூட வந்து போவதை! எப்படி ஆடை அணிகிறோம் என்பதைப்பொறுத்துத் தான் ஒரு பெண்ணுக்கு மரியாதை கூடுவதும் குறைவதும் என்பது நிறைய பெண்களுக்குத் தெரியவில்லை. உங்களது இந்த அருமையான பதிவு நிறைய பேருக்குச் சென்றடைய வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆசையில் தானே பெண்களாகிய நாம் பதிவிடுகிறோம் மனோ...சுதந்திரத்தை தவறாக புரிந்துக்கொள்ளும் பெண்களை திருத்துவது கடினம்....
      நன்றி மனோ...

      Delete
  11. நல்ல அறிவுரை . ஏற்றுக் கொள்ளவேண்டியது .நன்றி

    ReplyDelete
  12. தமிழகத்தைத் தாண்டி ரயிலில் பயணித்துப் பாருங்கள்...., பயணச் சீட்டே வாங்காதப் பெண்கள் (ஆண்களும்), முன்பதிவு செய்து பயணிக்கும் உங்களை நகர்ந்து அமரச் சொல்லுவார்கள்(அதிகாரமானத் தொனியில்..). மூன்று பேர் இருக்கையில், ஆறு பேர் அமர்வார்கள்.

    உடை, மற்றும் ஒப்பனைகள் மோசமாக இருக்கும்...

    நல்லக் கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  13. தாமதமாகத்தான் படித்தேன்... இருந்தாலும் உண்மையான ஒன்று.. கிட்டத்தட்ட பத்துவருடம் ரயிலில் பயணிக்கும் தினசரி பயணியான எனக்கும் இந்த மாதிரி அனுபங்கள் உண்டு... சொல்லத்தயங்கியே புழுங்கியிருக்கேன். சொல்லி விட்டப்பின் அவர் முகங்கள் பார்க்க தயங்கியிருக்கேன். சில நெருடல்கள் இருப்பினும் சகோதரியைப்போல் எண்ணும்போது சொல்லாமல் இருக்க இயலவில்லை.

    ReplyDelete
  14. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா...இந்த பதிவின் பயனை எல்லோருக்கும் கிடைக்க செய்துவிட்டீர்கள்...

      Delete
  15. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. Hey there would you mind stating which blog platform you're working with? I'm looking to start my own blog in the near future but I'm having a tough time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your layout seems different then most blogs and I'm looking for something unique. P.S Apologies for being off-topic but I had to ask! facebook login in

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...