ஒரு முத்தம்....
கர்ப்பக்குளத்தில் எதிர்நீச்சலாய்
முதல் முத்தம்
பதினாறு வயதில் பருவத்தின்
யுத்தமாய் ஒரு முத்தம்
இருபதுகளில் மழலையின் பிஞ்சு முத்தம்
நாற்பதுகளில் வளர்ந்த பிள்ளைகளின்
அவசர முத்தம்
ஐம்பதுகளில் மாமியாரின் அன்பு
முத்தம்
என்றென தெரியாத மண்ணின் கடைசி முத்தம்
சுவாசமாய் தொடங்கும் பயணத்தில்
சுவாரசியமாய் சிலிர்ப்பாய்
அன்பாய் அனாயாசமாய்
அர்த்தமாய் ஆசையாய்
என்று எத்தனையோ முத்தங்கள்.....
எத்தனை எத்தனை முத்தங்கள்
உன்னை முத்தமிட்டாலும்
உன்னை உயிராக்கிய உன் தாயின்
முதலும் முடிவுமான முத்தத்திற்கு
சிலிர்ப்பாய் உன் முகம் தொடும்
வானின் நீர்த்துளி கூட ஈடாகாதே...
அன்னைக்கு இணையாக எதுவும் இல்லையே..சிறப்புங்க.
ReplyDeleteதங்கள் கவிதைத் தொகுப்பையும் புத்தக கண்காட்சியில் வாங்கிவிட்டேன்.
சசி...ரொம்ப நன்றி....போடோஸ் பார்த்தேன்....நன்றாக இருந்தது...
Deleteதாயின் முதல் முத்தத்தின் அருமை சேய்க்கு தெரிய வாய்ப்பு இல்லை ஆனால் சேய் வாலிப பருவம் வரும்போது பெரும் "உன்தையும் எந்தையும் யார்யாரோ ,ஆனால் உன் முத்தமும் என் முத்தமும் வேறரோ"என்று சந்தோஷிக்கும் கணங்களை விட அவர்கள் தாயாகவோ தந்தையாகவோ மாறும்போது தன சேய்க்கு கொடுக்கும் முதல் முத்தத்தில் தான் தனுடைய தாயின் முத்தத்தின் அருமையை உணருகின்றனர்
ReplyDeleteஆனாலும் தாயன்பினை பட்டினத்துஅடிகள் போல மழலை பருவம் விடலை பருவம் மட்டும் இல்லாது அவர்களின் ஒவ்வாரு நிகழ்விலும் உங்கள் கவிதைகள் பிரதிபலிகின்றன ..அருமையான உணர்வு மிக்க தொகுப்பு பாராட்டுக்கள்