சிவப்பும் மஞ்சளும் பச்சையுமான பட்டில்
தலை நிறைய பூவோடு
பெரிய குங்கும பொட்டோடு
பெண்களும்.....
வெள்ளை பூ வேட்டியுமாக
சின்ன கீற்றாய் விபூதியுமாக
ஆண்களும்.....
பெரிய கண்களோடு குலசாமியும்
மீசை முறுக்கோடு பூசாரியும்
எலுமிச்சை தலையோடு அரிவாளும்
எல்லாமே பக்தி முத்திப் போய் இருக்க
ஆடு மட்டும்
மணமேடையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப்போல
தலை குனிந்து கண் நிறைய பயத்தோடு....
வாயில்லா ஜீவனை வெட்டி
சாமிக்கு படையலிட்டு
அவரின் பெயரால்
இவர்கள் சாப்பிட்டு
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று
ஜீவகாருண்யத்துடன் வள்ளலாரையும்
சேர்த்து புதைத்து
சந்தோஷமாய் காது குத்தி திரும்புவார்கள்
இந்த புண்ணியவான்கள்......
உங்களுக்கு ஐந்தறிவு ஜீவன்கள் மேலுள்ள பாசம் புரிந்து கொள்ள முடிகின்றது சகோதரியே தாவரங்களும் சுவாசிகின்றனவே அதன் இல்லை தழை காய் கனிகளை கொய்து மனிதன் பசி தேவைகளைபூர்த்தி செய்து கொள்கின்றானே அது கூட பாவம் தானே அதற்கு வள்ளலார் மட்டும் என்ன விதி விலக்கா என்ன ?
ReplyDeleteதாவரங்கள் நம் கண் பார்த்து அதன் அன்பை வெளிப்படுத்துவதில்லை....நாம் சற்று வாடினால் கூட நம் வீட்டு செல்ல நாயும் வாடிவிடுமே. அன்பை பகிரும் உயிர்களை கொல்வது பாவம் இல்லையா...
Deleteஇதுவும் பண்பாடு கலாசாரம் ?
ReplyDeleteஅப்படி சொல்ல மாட்டேன். அடுத்த உயிர்களையும் தன் உயிர் போல் இவர்கள் நினைக்க வேண்டும். வலி போதுதானே கண்ணதாசன்...
Deleteஇல்ல ஒரு வரி எனக்கு புரிய வில்லை
ReplyDelete//ஆடு மட்டும்
மணமேடையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப்போல
தலை குனிந்து கண் நிறைய பயத்தோடு....//
பெண்ணை போலவா இல்லை ஆணை போலவா ...
கொஞ்சம் டவுட் அதுதான் கேட்டேன் ...
வள்ளலார் பத்தி சொல்லும்போதுதான் அவங்க செய்கிற சில விசங்களிலும் தெளிவு வேண்டும் வள்ளலாரை போல அவர் அவதார நோக்கம் பத்தி வாதம் செய்து கொண்டு இருந்தேன் ..பலர் என்னைவிட வயதில் பெரியவர்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடிந்த எனக்கு அதில் ஒரு சிறுவயது பையன் நீங்கள் முதலில் மாமிச உணவு உட் கொள்வீர்களா என்றார் ஆமாம் ..என்றேன் ..நீங்கள் ஆன்மிகம் பேசவே லாயக்கு இல்லை என்று என் ஒட்டு மொத்தமா அவுட் ஆகிட்டான் ...அதுமாதிரி உயிர் வதை செய்கிரவங்களை ..உங்கள் கவிதை மூலம் அவுட் ..ஆகிவிடீங்க ...பாராட்டுக்கள் ...
ReplyDeleteநன்றி ராஜன்....
Deleteபிராணி வதையை இதைவிட யாரும் சிறப்பாக சொல்ல முடியாது, அகிலா!
ReplyDeleteபாராட்டுக்கள்!
நன்றி ரஞ்சனி மேம்.....
Delete