சென்னையில்...
ஒய் எம் சி ஏ மைதானம்
36வது சென்னை புத்தக கண்காட்சிக்கு
இந்த முறை மூன்று முறை போய் வந்தேன் (என் புத்தகம் ஒன்றும் அங்கு
வைக்கபட்டிருந்ததால்...)....நிறைய புத்தகம் வாங்கினேன். அதைவிட நிறைய பராக்கு
பார்த்தேன்னு உண்மையை சொல்லணும்.
அங்கு கவனித்த நிறைய விஷயங்களை சொல்ல
வேண்டும்.
பார்வைகள்...
o புத்தக கண்காட்சி என்பது மக்களால் ஒரு
பெரிய பொருட்காட்சியாய் பார்க்கப்படுகிறது. குடும்பம் குட்டியுடன் வந்து
சலிக்காமல் புத்தகங்களை சலித்து எடுத்து அதன் பிறகு சாப்பாட்டு கடையில் சாப்பிட்டு
வீக்எண்டை கொண்டாடி செல்கிறார்கள்.
o புத்தக பிரியர்கள் மற்ற நாட்களில் சமாதானமாய்
வந்து மெதுவாய் புத்தகங்களை அனுபவித்து செல்கிறார்கள்.
o
பதிப்பகங்கள், வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவர்களின்
பார்வையே வேறு. வியாபார நோக்கில் மட்டுமில்லாமல் படிக்கும் மக்களின் நாடியை
பிடித்து பார்க்கவும் இந்த திருவிழாவை பயன்படுத்துகிறார்கள்.
காரணங்கள்....
o நிறைய விதம் விதமான புத்தகங்கள்
ஒருசேர ஒரே இடத்தில் கிடைப்பதால்....
o அதுவும் டிஸ்கவுண்ட்டுடன்
கிடைப்பதால்...
o புதுப்புது அறிமுக எழுத்துக்களை
படிக்க முடியும் என்பதால்....(திருக்குறள் சைஸில் கவிதை இருந்தா புத்தகம் முழுவதையும்
அங்கேயே படிச்சிட்டு மூடிவச்சிட்டு போயிருவாங்க..)
o நானும் புத்தக கண்காட்சிக்கு போயிட்டு
வந்துட்டேன்னு பக்கத்து வீட்டிலிருந்து ஆபீஸ் வரைக்கும் சொல்றதுக்காக...
o எந்த வயசில பெண்கள் வந்தாலும் கடலை
போட...(சத்தியமா இடிக்க மாட்டாங்க. இது படிப்பு சொல்ற இடம்....நம்ம பய
பிள்ளைகளுக்கு படிப்பு மேல பயபக்தி ஜாஸ்தி...)
நானும் மூணு நாளாய் பார்க்கிறேன். எல்லோரும்
அவசரம் அவசரமாய் எதையோ தொலைச்சிட்டு தேடுற மாதிரி புத்தக கண்காட்சி முழுவதும் தேடிக்கிட்டே
இருக்காங்க. அவ்வளவு அறிவு தாகம் நம்ம
மக்களுக்கு. வருஷத்திற்கு ரெண்டு தடவை கண்காட்சியை திறந்துவிடுங்கப்பா....
அதுவும் நம் தாய்க்குலங்களை கேட்கவே
வேண்டாம். ரெண்டு குட்டிஸ் கூட வச்சிக்கிட்டு இருக்கிற அவ்வளவு குழந்தைங்க புத்தகங்களையும்
வாங்கி குவிச்சிகிட்டே இருக்காங்க.
கொஞ்சம் பெரிய பிள்ளைகள் கூட்டிட்டு
வந்தா, அம்மாக்களை விட அப்பாக்கள் தான் 9th std கைடு, +2 physics, chemistry, maths formula புக் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு மனிதர் கால் வலியில் மேற்கொண்டு
நடக்க முடியாமல் ஓரமாய் அமர்ந்திருந்த தன் மனைவிக்கு காப்பி வாங்கி கொடுத்துவிட்டு,
‘உன்னை போய் கூட்டிட்டு வந்தேனே’ என்று பல்லையும் கடித்துக் கொண்டிருந்தார்.
இன்னொருவர் ஒரு புத்தக ஸ்டாலில் தன்
மகளிடம், IIT Coaching புக்கை தேடு என்று சொல்லிக்
கொண்டிருக்க அவளோ Nancy
Drew கதை புக்கை கையில் வைத்து கொண்டு கண்ணால் plzzzz என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்
தகப்பனிடம்.
INFO Maps கடை ஒரு மினி ஸ்கூலாக
மாறிப் போயிருந்தது.
சிறு குழந்தைகளின் பெற்றோர்களிடம் தன்
குழந்தையை பாடப் புத்தகம் தவிர மற்றவற்றை படிக்க வைக்கும் ஆர்வத்தை காண முடிந்தது.
ஆனால் குழந்தைகள் பெரிதாகும் போது பெற்றோர்களின் பார்வை அவர்களின் படிப்பு
தொடர்பான புத்தகங்களின் மீது இருக்கிறதே தவிர, பொதுவான புத்தகங்களின் பக்கம்
பார்வை பதியவேயில்லை.
பெரிய பரிட்சைக்கு படிக்கும் போது
தான் பிள்ளைகளுக்கு காமிக்ஸ் புக் படிக்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். மனசும்
லேசாகும். தூய்மையாகும்.
நிறைய குடும்பஸ்தர்கள் மூலிகை
மருத்துவம், இயற்கை மருத்துவம் புத்தகங்களை புரட்டி கொண்டிருந்தார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கடலை
போட என்றும் ஒரு கும்பல் அலைந்துக் கொண்டிருந்தது. தனியாகவே புத்தகங்களை புரட்டிக்
கொண்டிருந்த என்னை சிநேகமாய் பார்த்து சிரித்து வைத்த ஒருவன், அடுத்த ஸ்டாலில்
நிற்கும் போது TNPSC Group IV எக்ஸாம் புக் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று பேச்சு
துணைக்கு வந்துவிட்டான். கொஞ்சம் கவனம்...
இதையும்
கேளுங்க....
மரத்தாலான பலகையில் நடக்கும் தளம்
போடபட்டிருப்பதால் நிறைய பேருக்கு நாலைந்து சுற்று வருவதற்குள் கால் வலி வந்துவிடுகிறது.
சாப்பிட வாங்க என்று போர்டு மாட்டி
அழைக்கிறார்கள்...சரி...கை அலம்ப வைத்திருக்கும் இடமோ சற்று
தொலைவில்...குழந்தையுடன் சாப்பிட்டு முடிக்கும் பெண்கள் அங்கு வரை செல்லும் பொறுமை
இழந்து கடையின் வாயிலின் ஓரமாகவே கை அலம்புகிறார்கள்.
முடிப்போமா...
ஆக மொத்தம், உங்களுக்கு யார் எந்த
புத்தகம் வெளியிட்டாங்க, யார் யாரெல்லாம் வந்திருந்தாங்க இப்படிப்பட்ட நமக்கு
வேண்டாத விஷயத்தை எல்லாம் விட்டுட்டு உங்களுக்கு புத்தக கண்காட்சியை ஓசிக்கு
சுத்தி காமிச்சிருக்கேன்....இது போதும்னு நினைக்கிறேன்....
இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ....
போங்க...போய் என்ஜாய் பண்ணுங்க...
நல்லா சுத்தி காட்டினிங்க. அப்படியே அங்க யார் யார் என்ன பண்றங்கன்னும் சொல்லி இருக்கிறது நல்லா இருக்கு. அமாம், இதையெல்லாம் கவனித்த உங்களுக்கு புத்தகங்களை கவனிக்க நேரம் இருந்ததா?
ReplyDeleteநிறைய புத்தகம் வாங்கினேன். பார்க்கவும் செய்தேன். நன்றி குமார்...
Deleteபல்வேறு தலைப்புகளில் கொட்டிக் கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
ReplyDeleteவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி
உண்மைதான்...உங்களின் பதிவையும் படித்தேன்...முதல் நாளை கண்மண் கொண்டு வந்துவிட்டீர்கள்...
Deleteஎல்லாத்தையும் கவனிசீங்க எனது புத்தகம் இருக்குதான்னு பார்த்தீங்களா?
ReplyDeleteரெண்டாவது நாளே பார்த்தேன் நண்பரே....திரும்பி வரும் போது வாங்க நினைத்து மறந்தேன்...நாளை வாங்கிவிடுவேன்...
Deleteஅழகா சுத்தி காமிச்சிட்டீங்க. காரணங்கள்தான் ரசிக்க வைத்தது.
ReplyDelete//தனியாகவே புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த என்னை சிநேகமாய் பார்த்து சிரித்து வைத்த ஒருவன், அடுத்த ஸ்டாலில் நிற்கும் போது TNPSC Group IV எக்ஸாம் புக் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று பேச்சு துணைக்கு வந்துவிட்டான். கொஞ்சம் கவனம்...// ஓ! இப்படியும் ஐடியா இருக்கோ! ஹாஹா...ஹா.. நல்ல நகைச்சுவையாகவும் விசயத்தோடும்தான் எழுதியிருக்கீங்க..
ஐடியா வொர்க் அவுட் பண்ணி பாருங்க....அடி வாங்காம தப்பிச்சா சரி....
Deleteஅதுக்கு புத்தக கண்காட்சிக்கு வரணும்.. தனியா ஒரு பொண்ணு வரணும்.. நான்
DeleteTNPSC Group IV பிரிப்பேர் பண்ணனும். இவ்வளவும் தாண்டி அவங்க என்னை அடிக்காம இருக்கனும். ஐய்யோ சாமி.. இப்பவே கண்ணை கட்டுது..
//36வது சென்னை புத்தக கண்காட்சிக்கு இந்த முறை மூன்று முறை போய் வந்தேன் (என் புத்தகம் ஒன்றும் அங்கு வைக்கபட்டிருந்ததால்...).// உங்ககிட்ட பிடிச்சதே இதுதான். உண்மையை போட்டு உடைச்சிருவீங்க..
ReplyDeleteஎன்ன தப்பு இதுலே....எல்லோருக்குள்ளும் சுயநலங்கள் உண்டுதானே...
Deleteதப்பேயில்லை..நிச்சயமாக சுயநலம் உண்டு..
Delete//ஆக மொத்தம், உங்களுக்கு யார் எந்த புத்தகம் வெளியிட்டாங்க, யார் யாரெல்லாம் வந்திருந்தாங்க இப்படிப்பட்ட நமக்கு வேண்டாத விஷயத்தை எல்லாம் விட்டுட்டு உங்களுக்கு புத்தக கண்காட்சியை ஓசிக்கு சுத்தி காமிச்சிருக்கேன்..// ஓசிக்கு சுத்தி காமிச்சதுக்கு நன்றி.
ReplyDeleteபொழைச்சு போங்க...நன்றி....
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் நன்றிதான சொன்னேன். பொழைச்சு போங்கன்னு சொல்லிட்டீங்க.. இதுக்கும் நன்றி.
Delete