Skip to main content

Posts

Showing posts from December 16, 2012

நீர்ப்பறவை - ஓர் அலசல்

Cast : Vishnu, Sunaina, Nanditha Das, Samuthra Kani Director : Seenu Ramasamy Producer : Uthayanidhi Stalin Music : N R Ragunanthan நீர்ப்பறவை என்பது Gull (Sea Gull) என்னும் பறவையை குறிக்கும். அந்த பறவை ரொம்ப அறிவாகவும் கூட்டமைப்பான வாழ்வு முறைகளையும் பின்பற்றக்கூடியது என்று கேள்விபட்டிருக்கிறேன்.  எனக்கு ரொம்ப பிடித்து போய் அதை படமாக கூட வரைந்திருக்கிறேன்.  Sea Gull ஆனால் இந்த படத்தில் அந்த பறவையின்  அறிவாளித்தனத்தை காணவில்லை. அந்த மீனவ மக்களின் வாழ்வியல் மட்டும் அழகாக காட்டப்பட்டுள்ளது.  இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு...சரியாகவே கதாபாத்திரத்துக்குள் ஒட்டவேயில்லை. இந்த மாதிரி படங்களில் யதார்த்தமாய் நடிக்கவேண்டும். வேறு நடிகரை தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குடிகாரனாய் வரும் காட்சிகளில் மனதில் நிற்கவேயில்லை. அவருடைய அம்மா, அப்பாவாக வருபவர்கள் மட்டுமே நம் கவனத்தில்.  நேர் எதிர்பதமாக நம் கதாநாயகி சுனைனா சூப்பர்.  சரியான தேர்வு.பெரும்பாலும் இந்த மாதிரி costume யில் ஹீரோயின்  அழகாக தெரியமாட்டார். ...