Skip to main content

Posts

Showing posts from December 2, 2012

ஆண்டியாய்...

சும்மாவா சொன்னார்கள்  வீட்டை கட்டி பார் கல்யாணத்தை முடித்து பார் என்று... முதல் வேலையை கையில் எடுத்து கொண்டு  அதை கனக்கச்சிதமாக முடித்து,    தினமும் காலையில் எழுந்ததும்  இன்று என்ன மெனு என்று ஹோட்டல் ரேஞ்சில்    தலையில் ஓடிக்கொண்டிருந்த  சக்கரத்தை நிறுத்தி, மனமும்   மத்தாப்பாய் மழையில் நனைந்து, மரநிழல் தேடி ஒதுங்கி, விட்டால்போதும் என்று பட்டம்பூச்சியாய் பறந்து, கரையை அடைந்த நிறைவில்  காவி ஆடை போர்த்திக் கொண்டுவிட்டது.... இல்லற துறவறத்திற்கே   மனம் தன்னை மறந்து ஆடுகிறதே... உலகத்தையே துறந்த ஆண்டி கூத்தாட மாட்டானா என்ன...

நானும் என் பென்சிலும்...

எப்போதும் என் கைவசத்தில்  இருக்கும் என் எழுதுகோல் வேறு என்ன...என் பென்சில்தான்   காணவில்லை... மேஜையின் மேலும் கீழும் என்று தேடியும்  கிடைக்கவில்லை.... சமைக்க உள்ளே சென்றால்  மிக்ஸியின் அருகே  அழகாய் சுவற்றில் சாய்ந்து நின்று  என்னை பார்த்து சிரித்தது... நிமிர்ந்து பார்த்தால்  காலண்டரில் பால் கணக்கு....  உம்ம்ம்... நீ இருக்கிறாய்  என் ஞாபகங்களை பதிவு செய்ய...  என் மறதி இருக்கிறது    உன்னை வைத்த இடத்தை ஞாபகமாய் மறக்க... 

தமிழும் தமிழ் பெண்களும்...

இன்று கணவரின் Batchmate மகளின் திருமணம் திருப்பூரில். அவரை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாது. சமாளிப்போம் என்று அழகாக போய் அமர்ந்தாச்சு... இப்படிப்பட்ட கல்யாணங்களுக்கு போவதில் நிறைய சௌகரியம் இருக்கு... வாய் வலிக்க பேச வேண்டியதில்லை... போலித்தனமாய் சிரித்து வைக்க வேண்டியதில்லை... நல்ல வேடிக்கை பார்க்கலாம்... நிறைய பேர் வெட்டியாக சுற்றி கொண்டிருந்தார்கள். நாமளும் அப்படி வெட்டியாக உட்கார்ந்து பார்த்தால் தானே தெரிகிறது.   ஒரே கலரில் பட்டு கட்டி நாங்கள் சாகும்வரை சகோதரிகள் என்று மூன்று பெண்மணிகள் காட்டிக் கொண்டிருந்தார்கள். saree யை flaot விட்டுக்கொண்டு ஒரு பெண் சுற்றி கொண்டிருந்தாள். நாமளும் இனி float ல் saree கட்டி பழகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  என்னை மாதிரியே தனியாக அமர்ந்து ஒருவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் போர் அடிக்க ஆரம்பித்தது.... சரி...போய் கிப்ட் கொடுத்துட்டு வரலாம் என்று எழுந்து போனேன்...கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவரையும் காணும்...நாமலே intro கொடுதுக்க்கலாம்னு போனேன்... பெண்ணிடம் போய் நான்தா...