Skip to main content

Posts

Showing posts from November 18, 2012

பாதை

பயணத்தின் நடுவில்... பாலத்தின் அடியில் பாதை  தன்னிருட்டை சுமந்து  வழிக்காட்டியாய்... __________ காதல்... ரோஜா பூக்களின் நடுவில்  எத்தனை எத்தனை வண்ணத்துப்பூச்சிகள் காதல்  ரோஜாவுக்கா... வண்ணத்துப்பூச்சிக்கா...

ஆண்கள் பாவம்தான்....

பெண்ணின் நியாயங்கள்.... தோசைக்கு அரைத்திருப்பாள்  ஆனால் சப்பாத்தி சுடுவாள் - கேட்டால்  மருமகளுக்கு பிடிக்கும் என்பாள்... மருமகளை பிடிக்காவிட்டால் அவளையே  கேட்டுக்கு வெளியே நிறுத்திவிடுவாள்...  உங்க தங்கச்சிக்கு வரன் பார்த்து  கட்டி வச்சது போதாதா  அவ பெண்ணுக்குமா என்பாள்  'அண்ணி' என்ற அன்பு குரலில்  அவளுக்கு நம்மளை விட்டா யாரு என்று  இவளே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாள்... தங்கம் விக்கிற விலைக்கு  இனி தங்கமே வாங்க மாட்டேன்  இருப்பதே போதுமென்பாள்  மறுநாளே டிவியில் பார்த்த தள்ளுபடிக்காக  ஒரு காது தோடாவது எடுத்து வருவாள்  'மூட்டுவலி யார் காதில் விழுது' என்பாள்  டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி வந்தால்  'நேத்துதானே எண்ணெய் போட்டேன்  ஒன்னையும் கவனிக்கிறதில்லை' என்பாள்  ஆண்கள் பாவம்தான்... தனக்குத்தானே அவள் பேசிக்கொள்வதை எல்லாம்  தன்னிடம்தான் சொல்கிறாள் போல என்றெண்ணி  அவளை அசத்த முயற்சி செய்ய,  அவளோ அவ மனசில...

மமதை....

மனிதனின் மமதை... இருவருமே வலியை விதைத்து கொண்டோம்  அதை தாங்கும் வலிமையும் கொண்டோம் சமயங்களில் உடைந்தும் போயிருக்கிறோம்   மாயக் கண்ணாடித் திரைதான் நடுவில்   உளி தேவையில்லை உடைக்க... முதலடி யார் என்பதில்தான்  மனதின் ஆட்டம் மமதையாய்...  வாதங்கள்... கோபமான வாதங்கள் தாக்கும் போது உடைந்து போகிறோம்  யோசிக்க முடியாத அளவுக்கு...  மறுதரப்பு வாதமும் உறைக்கும் பொழுது  உடைந்து சிதறி போகிறோம் யோசித்து தெளிந்த அளவுக்கு....

மன்னிச்சிக்கோ

அக்கா... அன்று ஒரு நாள் எங்கள் தெருவில் ஒருவன் குடித்துவிட்டு சத்தமாக பேசிக் கொண்டு தள்ளாட்டத்தில் வருவது பார்த்து கையில் கேமரா வைத்திருந்ததால் அவனை வீடியோ எடுத்து கொண்டிருந்தேன். அருகில் நெருங்கி வந்து கொண்டிருந்தான். என்னையும்  பார்த்துவிட்டான். உடனே 'அக்கா.....என்னை மன்னிச்சிடு அக்கா' என்று கும்பிட்டு கொண்டே அருகே வர, சட்டென்று கேமராவை ஆப் பண்ணினேன்.  எனக்கு அவனுக்கும் இடையில் காம்பௌண்ட் சுவர் இருந்ததால் தப்பித்தேன். அவனோ புலம்பிக் கொண்டிருந்தான். ' உனக்கே தெரியும் அக்கா....நான் முன்னாடி குடிச்சிருக்கேனா....அந்த பாவி எங்க அப்பன்(!) இருக்கானே என் பாட்டன் சேர்த்து வைச்ச எல்லா சொத்தையும்(!) குடிச்சே அழிச்சிட்டான்...ஒரு பைசா கூட எனக்கு வைக்கல்லை...என் பொண்டாட்டியும் இப்போ அவ அம்மா வீட்டுக்கு போய்ட்டா ..உலகத்தில எல்லோருமே மோசம்கா....யார்கிட்டேயும் உண்மை இல்ல....பொறுப்பு இல்ல....' என்னமோ இவன் கிட்டே மட்டும் இருக்கிற மாதிரி.... இப்படி அவன் டயலாக் மேல டயலாக்கா ஒப்பிச்சிகிட்டே இருக்க, நான் என்ன செய்ய, என்ன சொல்ல என்று தெரியாம அவனையே பார்த்துகிட்டு அவன...

திருமணம் ஒரு வியாபாரம்....

நேற்று ஒரு பெரிய வீட்டு திருமணம்... மண்டபம் பெருசு...அவங்க மனசும் பெருசு... பெரிய பெரிய ஸ்டேஜ் decoration லட்ச கணக்கில் பணம் செலவழித்து... buffet சாப்பாடு ஒரு பக்கம், இலை சாப்பாடு ஒரு பக்கம், அதிலும் சைவம், அசைவம் என தனித்தனியாக.... கார் காராய் ஆசாமிகள், அவர்களின் டிரைவர்களுக்கு என்று தனி சாப்பாடு.... உள்ளுரிலிருக்கும் ஒரு அரசியல்வாதி தன் படை பட்டாளத்துடன்...அவருக்கென்று தனி வீடியோ coverage வேற...நல்ல வேளை பொண்ணு மாப்பிள்ளை காலில் விழாமல் இருந்தார்.... கழுத்திலிருந்து இடுப்பு வரை அடுக்கடுக்காய் நகை அணிந்த பெண்கள்... இதுக்கேன்றே hairdresser வைத்து ஸ்பெஷல் கொண்டை  எல்லாம் போட்டு மெல்லிசாக ஒரு பட்டு கட்டி, அதில் பாதி உடம்பை காட்டி, யார் திருமணத்திற்கு ரெடியாக இருக்கிறார்கள் என்று வயது வித்தியாசம் தெரியாத அளவுக்கு மேக் அப் போட்டு மின்மினிகள்.... எவ்வளவு தான் காசை கொட்டி கல்யாணம் செய்தாலும் அதே தாலிதான் கழுத்தில், அதே சாந்தி முகூர்த்தம் தான் கட்டிலில், அதே குப்பை கொட்டல் தான் வாழ்க்கையில்.... எல்லோரும் ஒரே மாதிரிதானே வாழ்கிறோம்...ப...