Skip to main content

Posts

Showing posts from November 4, 2012

சின்னதாய்....

தேடல்கள். .. அடையாளம் இல்லாத மனிதர்கள் அடையாளம் தொலைத்த மனிதர்கள் உணர்ச்சிகளின் உள் வாழ்பவர்கள் ஒட்டுதலற்ற உறவுகள்  இவர்களின் உரசலில் தேடல்கள் தொலைந்து போக  தொடங்கிய இடத்திலேயே நான்... குப்பைதான்... கண் மூடுதலும் வாய் மௌனித்தலும் இல்லாமல்  அனர்த்தங்களை அகற்றி அசையா பொருளாய் அமர்ந்து அதன்வழி புத்தனையும் சார்ந்து துறவின் திறவுகோலை ஏந்தி  தேடல்களை முற்றுப் பெறச் செய்து  குடும்ப சமுத்திரத்தில் காலமாய்  குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்....

சின்னதாய்....

இப்போவே பள்ளிக்கூடத்துக்கு குச்சியிலே கூடு கட்டி  இலையிலே பாய்மரம் பறக்கவிட்டு  அப்படியே துடுப்பு பாய்ச்சி  பிறக்கிறதுக்கு முன்னாலேயே  பறக்கவிட்டாளே எங்கம்மா,  பிரசவத்திற்கு முன்னமே  பள்ளிக்கூடத்தில சீட் போட்டுவச்சாப்பில... ~~~~~~~~~~~~*~~~~~~~~~~~ தாஜ்மஹால்  வருடங்களாய் மனதில் உறுத்திய  உன் காதலை மறக்க நினைத்து  நிறைய போலிகளை தயாரித்து  மேலும் மேலுமாக அடுக்கி  விழாமல் இருக்க  தாங்கும் தூண்களும் கொடுத்து  அப்படியும்  உன் நினைவுகளை மட்டுமே  தாங்கிக் கொண்டிருக்கும்  தாஜ்மஹாலாய் நான்....