உறவுகள்... எனக்கு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடமாக ரொம்ப பழக்கமான ஒரு குடும்பம். தன் பேரனுக்காக ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க அந்த பாட்டி. அப்படியே எங்க கூட பழக்கமாகிட்டாங்க. அவங்க வீட்டுல என்ன நடந்தாலும் நாங்க இல்லாம இல்ல. அதே மாதிரிதான் இங்கேயும். அம்மா என்கிற வார்த்தையை தவிர நானும் என் கணவரும் வேறு வார்த்தை சொல்லி அவங்களை கூப்பிட்டதில்லை. எத்தனையோ குடும்ப விசேஷங்களுக்கு பத்திரிகைகள் பரிமாறிக் கொண்டதுண்டு. ஆனால் அவங்க பெயரை தெரிந்து கொள்ளவும் இல்லை. அதைப் பற்றி யோசித்ததும் இல்லை. நேற்று அவங்க பேரனின் திருமண பத்திரிகை வைத்தார்கள். அப்போதுதான் பார்த்தேன் அவனின் இரண்டு பாட்டிகளின் பெயரும் இருந்தது. இதில் எது இவர்களின் பெயர் என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன். பாப்பநாயக்கன்பாளையம் என்ற ஊரின் பெயரை வைத்து அம்மாவின் பெயர் காந்தாமணி என்றும், ஐயனின் பெயர் சுப்பையன் என்றும் கண்டுபிடித்தேன். அவங்க பெயரை எதற்கு எழுதுகிறேன் என்றால், இப்படி எழுதினாலாவது நம்ம மூளைக்குள்ளே ஏறும்னுதான். அவனின் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அவர்களின் குழந்த...