Skip to main content

Posts

Showing posts from September 16, 2012

தாஜ்மஹால்....

உன்னோட ஆன  என் வார்த்தைகளை அடுக்கினால்  தாஜ்மஹால் கட்டலாம்  உன் வார்த்தைகளை அடுக்கினால்  ஈபில் கோபுரமே கட்டலாம்  ஆனால்  காதல் கட்டியது  தாஜ்மஹாலை தானே..... 

என்ன காதல் இது?....

என் சம்மதம் இல்லாமலே என்னை உனக்குள் கொண்டு சென்றாய் ஏன் என்று கேட்க எனக்கு அதிகாரம் மறுக்கிறாய் உன்னுள் இருப்பது நானில்லையா இல்லை என்னின் உன் உருவமா? என் வார்த்தையை உன் வாக்கியமாக்கிக் கொள்கிறாய் என் சொல்லை உன் முற்றுப்புள்ளியாக்கிக் கொள்கிறாய் என்னை விடுத்து வேறு உலகம் பார் என்றால் மேலுலகமா என்கிறாய்.... என் முடிவை உன் முடிவாக்கி கொள்கிறாய் நான்தான் உன் முடிவென்று நீ கொள்வதால் என் உயிர் உனக்கு என்கிறாய் எனக்கு வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம் என்கிறாய் உன்னை கொன்று உணவாக்கிக் கொள்ள நான் பூலான்தேவி அல்ல உன்னையும் உன் காதலையும் ஒருசேர என்னால் உதறமுடியும்   என்னுள் நீ பூஜ்யமாய் இருப்பதால்   இன்னும் ஒரு அவகாசம் கேட்கிறாய் என்னை நீ மறப்பதற்கு அல்ல உன்னை நான் நினைப்பதற்கு... முடியாது என்ற என் மறுப்பை கேட்க மறுக்கிறாய் உனக்கு மறுப்பு சொல்ல வைத்து என் பாவத்தின் எண்ணிக்கையை கூட்டிவிட்டாயே... நீ நாளை மாறலாம் உன்னை தூக்கியெறிந்த   என் மனசாட்சி   என் கடைசி விறகு எரியும் வரை உறுத்தும...

பிள்ளையாரின் பிறந்தநாள்.....

தெருக்கோடியில் என் நண்பன் தொந்தியும் தொப்பையுமாக சாப்பிட்டது போதாதென்று எப்போதும் கையில் ஒரு கொழுக்கட்டையுடன் உட்கார்ந்திருப்பான்... நான் கும்பிடுகிற ஜாதியில்லை என்று அவனுக்கு தெரியும் ஆனாலும் அவனை தாண்டும்போது தும்பிக்கையை ஆட்டி தொந்தி குலுங்க சிரிப்பான் நானும் அவனருகில் சென்று எனக்கும் அவனுக்குமான சங்கேத பாஷையில் பேசிவிட்டு நகருவேன்... இன்று அவனின் பிறந்தநாள் இன்று அவனின் சிரிப்பும் சற்று அதிகம்தான் அவனை கடக்கும் போது எட்டிப் பார்த்தேன் கூட்டம் அதிகம்.... வாழ்த்து சொல்ல வந்தவர்கள்... என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி மற்றவர்களின் உபசரிப்பில் லயித்திருந்தான் மாலையும் மோதகமும் கொழுக்கட்டையுமாக நிறைய தின்று தொப்பை பெருத்து சந்தோஷமாக இருந்தான் ‘என்ன அதிகமான சிரிப்பு... பலகாரங்கள் நிறையவோ’ என்றேன் ‘இல்லை...இல்லை... தினமும் என்னை தெருவில் மழையிலும், வெயிலிலும் காய வைத்துவிட்டு எல்லோரும் வீட்டுக்குள்ளே போய் பூட்டிக்குவாங்க... இன்று மட்டும்தான் எனக்கு குடை எல்லாம் கொடுத்து வெயில்படாம வச்சிருக்காங்க... அந்த மகிழ்ச்சிதான்‘ என்றான்.... ம்ம்ம்.... குடைக்குள் என் நண்பன்.... சந்தோஷமாய்.......

பிள்ளையாரின் பிறந்தநாள்.....

தெருக்கோடியில்  என் நண்பன்  தொந்தியும் தொப்பையுமாக  சாப்பிட்டது போதாதென்று  எப்போதும் கையில் ஒரு கொழுக்கட்டையுடன் உட்கார்ந்திருப்பான்... நான் கும்பிடுகிற ஜாதியில்லை  என்று அவனுக்கு தெரியும்  ஆனாலும் அவனை தாண்டும்போது  தும்பிக்கையை ஆட்டி  தொந்தி குலுங்க சிரிப்பான்  நானும் அவனருகில் சென்று  எனக்கும் அவனுக்குமான  சங்கேத பாஷையில்  பேசிவிட்டு நகருவேன்... இன்று அவனின் பிறந்தநாள்  இன்று அவனின் சிரிப்பும் சற்று அதிகம்தான்  அவனை கடக்கும் போது எட்டிப் பார்த்தேன்  கூட்டம் அதிகம்.... வாழ்த்து சொல்ல வந்தவர்கள்... என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி மற்றவர்களின் உபசரிப்பில் லயித்திருந்தான்  மாலையும் மோதகமும்  கொழுக்கட்டையுமாக நிறைய தின்று  தொப்பை பெருத்து  சந்தோஷமாக இருந்தான்  ‘என்ன அதிகமான சிரிப்பு... பலகாரங்கள் நிறையவோ’ என்றேன் ‘இல்லை...இல்லை... தினமும் என்னை தெருவில்  மழையிலும், வெயிலிலும்  காய வைத்துவிட்டு  எல்லோரும் வீட்டுக்குள்ளே  போய் பூட்டிக்குவாங்க... இன்று மட்டும்தான்  ...

கனவில்....

காதல்.... கண்களால் சிரித்தாய் கைகளால் அணைத்தாய் இதழால் கவ்வினாய் ஏதேதோ செய்தாய்.. காதல் கிறக்கத்தில் கணநேரம் சென்றிருக்குமா காமத்தீயில் தள்ளிவிட்டு கண்ணடித்து சென்றாய்.. கனவில்லையென ஆசைப்பட்டு கண்விழித்தேன் கனவில்தான் என்று சொல்லி என்னருகில் நீ....