Skip to main content

Posts

Showing posts from September 2, 2012

மௌன மோகம்...

உன் ஆசை காமம் என்றேன்  இல்லை காதல் என்கிறாய்  ஆசை அறுபது நாள் என்றேன்  அதற்கும் மேல் என்கிறாய்... மோகம் முப்பது நாள் என்றேன்  அதுவும் பொய் என்கிறாய்.. தொலைவில் இருக்கும்வரை  தொடத்தோன்றும் தான் உனக்கு...  தொட்டுவிட்டால்  தொடர தோன்றும் தானே... தொடரும் போது  சற்று இடரும்தானே...  மறுபடியும்  போய் நிற்கும்  முன்னுரையில்தானே...   நீ தள்ளியே இரு  உன் மனம் தள்ளாடும் வரை.... 

ஆசைகள் மாறுமடி..

உனக்கு அடிக்கடி  பிடித்து படிக்கும் புத்தகம்  ரசித்து போடும் கோலம்  விரும்பி அணியும் ஆடை  தினசரி போகும் பாதை  திரையில் தோன்றும் கதாநாயகன்  தலையில் சூடும் பூக்கள்  காதில் ஆடும் வளையம்  இவையெல்லாம் மாறும்போது  ரசிக்க தோன்றியது... மனதில் குடிக்கொண்டிருந்த  என் காதலையும் அதில் சேர்த்தபோது உன்னை வினவத் தோன்றியது  என்று தூக்கியேறிவாய்  உன் சலிப்பை...

நீ என்

நீ என்... நிலவென நினைத்து எட்டிப் பார்த்தேன் தென்றலென நினைத்து தொட்டு பார்த்தேன் பூவென்று நினைத்து பறித்து பார்த்தேன் சங்கீதமென நினைத்து பாடி பார்த்தேன் பசியென நினைத்து சாப்பிட்டு பார்த்தேன் மௌனமென நினைத்து பேசிப் பார்த்தேன் சந்தொஷமென நினைத்து சிரித்து பார்த்தேன் ஒவ்வொன்றாக நினைத்தும் ஒன்றுக்குள்ளும் இல்லை நீ உன்னிடமே கேட்டேன் காதலென நினைத்து பார் கச்சிதமாய் பொருந்துவேன் என்றாய் காதலாய் நினைத்து பார்த்தேன் சில்லென்ற காற்றை உன் சிலிர்க்கும் கூந்தலை அதில் சிரிக்கும் ஒற்றை ரோஜாவை சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை குடையாய் நனையும் மரங்களை நெடுமரமாய் நிற்கும் ஒளிவிளக்குகளை அவசரமாய் கரையை தொடும் அலைகளை நிலவை பார்த்து கண்சிமிட்டும் நட்சத்திரங்களை உறக்கம் கலையாதிருக்கும் படகுகளை கால்களை உள்ளிழுக்கும் மணற்பரப்பை காதலுடன் நினைத்து பார்த்தேன் உன்னைத்தவிர அணைத்தையும் காதலாய் பார்த்தேன் உன்னிடம் காதல் வரவில்லை கண்ணே....