Skip to main content

Posts

Showing posts from August 26, 2012

தூரந்தோ எக்ஸ்பிரஸ்.....

உள்ளே வெளியே.... கார்போரெட் பேச்சுகளும் தமிழை தொலைத்த ஆங்கில சொற்களும் செல்லின் சினுங்கல்களும் லேப்டாப்பில் அலுவலும் தோழமையில் போலிதனங்களும் சத்தமான சிரிப்புகளும் சில சமயங்களில் மௌனங்களும் அமுல் பட்டரும் சூப் ஸ்டிக்குகளும் ரயிலின் உள்ளே..... இணையாய் ஓடும் ரயில்கோடுகளும் நம்மை கடக்கும் புகைவண்டி நிலையங்களும் மொட்டை பனைமரங்களும் சின்ன சின்ன வீடுகளும் சிவப்பாய் ஒரு சூரியனும் நம் காயங்களுக்கெல்லாம் கட்டு போடும் வெளிச்சமாய் ஒரு வானமும் ரயிலின் வெளியே..... நான் உள்ளே என் மனம் வெளியே.....

எனக்கு எண்பத்தியிரண்டு

  உனக்கு எழுபத்தியாறு... ஆட்டோக்காரரின் துணையோடு உன் கைபிடித்து இறக்கி ஆஸ்பத்திரியின் நாற்காலியில் அமரவைக்கும் போது காலையில் வீட்டில் கேட்ட குரல்கள் ஞாபகத்தில் ‘இதுங்கல்லாம் வாழலைன்னு யார் அழுதா’  சீட்டு எடுத்துவிட்டு திரும்பினால் நாற்காலிகள் நிரம்பியிருந்தன.... ஒரு சுவற்றில் சாய்ந்து நின்று உன்னையே பார்த்து கொண்டிருந்தேன் இளவயதில் உன் சேலை முந்தானை என் கையில் ஆனாலும் பம்பரமாய் நீ..... நடுவயதில் உன் சேலை முந்தானை என் பிள்ளைகளின் கையில் அப்போதும் பம்பரமாய் நீ..... மத்திம வயதில் உன் சேலை முந்தானை உன் இடுப்பில் சொருகப்பட்டு அதில் உன் பேரப்பிள்ளை அப்போதும் முடியாமல் பம்பரமாய் நீ...... வயது போன காலத்தில் உன் சேலை முந்தானை மீண்டும் என் கைகளில் உன் கை எலும்புகள் முறுகிய நிலையில் உன் சேலையே நான்தானே இப்போது பம்பரம் நீ இல்லை நான்தான் உன்னை சுற்றி பம்பரமாய்.... எத்தனையோ இரவுகளை பார்த்துவிட்டோம் கடந்தும்விட்டோம் சேர்ந்து சிரித்திருக்கிறோம் சண்டையிட்டிருக்கிறோம் அழுதும்கூட இருக்கிறோம் நோயின் அழுத்தம் தா...