அலை பாயும் கண்கள் சாதாரணமாய் அடங்குவதில்லை.... பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் சட்டென்று ஊமையாவதில்லை.... தேடிக்கொண்டிருக்கும் மனங்கள் தேடலை நிறுத்துவதில்லை... தொடரும் தேடல்கள் நம்மை தொலைக்காமல் விடுவதில்லை... அடக்கம் இல்லா வாழ்க்கை அமைதியை தருவதில்லை..... துரத்தும் மனசாட்சிகள் நம்மை கொல்லாமல் விடுவதில்லை... உண்மையில்லாத பொய்கள் உறங்கவிடுவதில்லை... கண்ணீரால் நம் பாவங்கள் கழுவப் படுவதுமில்லை.... நிமிர்ந்து நேர்மையாய் இருப்பதால் புன்னகை பூக்கள் பூக்காமலும் போவதில்லை....