பெண்களை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு நம் வீட்டில் இருக்கும் ஆண்களை பற்றி எழுதலாமே. நாம் ஆண்களை சார்ந்தும் அவர்கள் நம்மை நம்பியும் தானே வாழவேண்டியிருக்கிறது. அதனால் இன்று என் பேனா மையில் ஆண்கள். பெண்களை வன்முறையில் அடிமைபடுத்தும் ஆண்களை பற்றி இங்கே எழுதவரவில்லை. அது அடுத்த வலையில். ஆண்கள் இரண்டு வகைப்படுவார்கள். முதல் வகை, கால்கட்டு போட்டாதான் சரியாவான் என்று பெரியவங்க சொன்னதிற்கு ஏற்ப கல்யாணம் முடிந்தவுடன் கட்டுபட்டியாகி மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவன். உண்மையா இல்ல வெளிவேஷமா என்பதை அவங்கவங்க விட்டுக்கார அம்மாகிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். இன்னொரு வகை ஆண்கள் கல்யாணத்திற்கு பிறகுதான் ரொம்ப முறுக்கிக் கொள்வார்கள். தொட்டதுக்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கிறது, திட்டுறது, குடும்பத்து ஆளுங்க முன்னாடியே நக்கலடிகிறது, இப்படின்னு எல்லாம் செய்வாங்க. ஆனால் உள்ளே பாசமா தான் இருப்பாங்க. அதனால் அந்த பெண்களும் இவங்க வெளியே செய்கிற அலம்பல்களை சகிச்சுக்குவாங்க. முதல் வகை ஆண்கள் பார்க்க பாவமா பொறுப்பான குடும்ப த...