நாங்கள்…. நம் நாட்டில் வாழும் பெண்களில் பலர் மனதில் இருக்கும் பல விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. ஆண் வர்க்கம் செய்யும் வக்கிரமான சில செயல்களை வெளியே பெண்களால் சொல்லமுடிவதில்லை. படிக்கும் போது கூட பெண்கள் தங்களுக்கு நடக்கும் சில அநியாயங்களை வெளிபடையாக தோழிகளிடமும் சகோதரிகளிடமும் பேச முடிகிறது. திருமணம் ஆகிவிட்டால் மனம் விட்டு பேசுவது நின்று போய்விடுகிறது. யாரையும் (கணவரையும் சேர்த்துதான் ) நம்பி சொல்லமுடியாது. பெண்களின் மனது ஓர் ஆழ்கிணறு. என்ன துன்பத்தை அவர்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆண்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அந்த வர்க்கத்தில் பல பேருக்கு மென்மையான, மனதை பாதிக்ககூடிய சின்ன சின்ன சமாச்சராங்களை புரிந்து கொள்ள முடியாது. வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்தாலே போதும், தெருவில் நடப்பவர்கள் உரசுவதும், பேருந்தில் அல்லது ரயிலில் அவர்கள் கைகள் பெண்களில் மேல் மேய்வதும், சுரங்க பாதையில் ஒரு கண நேரத்தில் என்ன நடக்கும் என்று வெளியே சொல்லவே முடியாத சில விஷமங்...