தகப்பன்தான் சாமி..... காலையில் எழுந்ததும் மடங்கிய கை கால்களை நிமிர்த்த முடியாமல் வலி சன்னலின் வழி எப்போதும் ஒரே சம்மணத்தில் இல்லத்தின் வாயிலில் பிள்ளையார் 'வாங்க காப்பி சாப்பிட்டுட்டு வரலாம்' என்று மனைவி மூர்த்தியின் காப்பியுடனும் ஹிந்து பேப்பருடனும் முன் வாசல் நாற்காலியில்... 'என் article பேபரில் வந்திருக்கு..., படிங்க....' என்று போகிற போக்கில் கோபாலய்யர் 'வாக்கிங் வரலையா?....' என்று பாஸ்கரன் 'மனசு சரியில்லை...'பொத்தம் பொதுவான என் பதில் 'மகன் நினைப்பா....' இது பத்மாவதி அம்மாள் இந்த கேள்விகளுக்கு பிறகுதான் உள்ளே அழுத்திய மகனின் நினைப்பு வெளி வந்தது 'இந்தியாவுக்கே திரும்புவதில்லை' என்ற மருமகளின் தீர்மானமும் நிழலாடியது பசங்க அங்க பழகிட்டாங்க, படிப்பு இங்க சரியில்ல...என்ற மாதிரியான ஓட்டை காரணங்கள் 'ஏன் கிடைக்காதற்காக ஏங்குறீங்க?...இங்கே நம்மை மாதிரி எத்தனை பேர்....' மனைவியின் யோசனை பெண்களால் எப்படி தன்னை மாற்றி கொள்ள முடிகிறது இல்லை நாம்தான் பழமைவாதியாகவே இருக்கிறோமோ...தெரியவில்லை... மீண்டும் மகனி...