Fridge என் கணவருக்கு சென்னைக்கு மாற்றலான போது, அங்கே குடித்தனத்திற்கு தேவையான சில பொருட்கள் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு போனது. அதில் ஒன்றுதான் எங்கள் பிரிட்ஜ். எப்போவாவது இங்கு வரும்போது தானே தேவைப்படும், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு இருந்துட்டேன். அது எனக்கு ஒரு அவசியமான விஷயமாக தோணவில்லை. இங்கு அடிக்கடி வரவேண்டிய அவசியம் வந்தபோது தான் இந்த பிரிட்ஜை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம்னு தெரிஞ்சுது. ஏறக்குறைய நம் பாட்டி வாழ்ந்த பழைய காலத்திற்கே திரும்பி போய்விட்டேன். எவ்வளவுதான் நம்ம கணவர், குழந்தைகள், எல்லோரும் 'தினசரி இட்லி, இல்லைன்னா தோசை' ன்னு முணுமுணுத்தாலும் அதை காதில் வாங்காமல் ஞாயிற்றுகிழமை தோசைக்கு அரைத்து திங்கள் கிழமை தோசை மாவை பிரிட்ஜ்க்குள் திணிக்கும் நம் பழக்கத்தை நம்மால் மாற்றிக்கொள்ள முடியாது. நானும் மாவை வைக்க பிரிட்ஜை தேடினால் அது இல்லை. அப்புறம் மேலே loft இல் இருந்த எங்க அம்மாவோட பெரிய பாத்திரத்தை எடுத்து தண்ணீர் ஊற்றி அதற்குள் மாவை உள்ளே வைத்து அந்த தண்ணியை தினமும் மாற்றி... போதும்....போதும்.... தயிருக்கும் இதே கதைதான்...ஆனாலும் புளித்துவ...