Skip to main content

Posts

Showing posts from May 20, 2012

பெண்கள் பலவிதம் 2....

திருமணத்திற்கு பின் பெண்... பெண்கள்...... ரொம்ப வித்தியாசமானவர்கள். எதையும் 90% குறுக்கு புத்தியுடன் தான் யோசிப்பார்கள்...அதுதாங்க Critical Reasoning .. இதையெல்லாம் நீங்க கேம்பஸ் இன்டர்வியூக்கோ , CAT எக்ஸாமுக்கோ தான் இதை படிப்பீர்கள்.....படித்த பெண்களை விட படிக்காத பெண்களின் மூளை ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும். தன் கணவரை எப்போதும் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிறைய காமெடி செய்வார்கள் வீட்டில். கல்யாணம் முடிந்து வரும் போதே ரொம்ப தெளிவா வருவாங்க. அவங்கம்மா நாலு தங்க வளையல் போட்டு அனுப்பிச்சா இவங்க கூட ஒரு நாலு கண்ணாடி வளையலையாவது வாங்கி மாட்டிக்குவாங்க....அப்போதானே வீட்டுக்காரர் பைக் ஸ்டார்ட் பண்ற சத்தத்தை மீறி இவங்க டாட்டா சொல்ற சத்தம் கேட்கும். இல்லேன்னா அவன் திரும்பிபார்க்காம போயிருவானே.... அவன் என்ன செய்வான்னா, அவனோட எல்லா பிரெண்ட்சையும் இவ கண்ணுலே காட்டமாட்டான். ஒண்ணு இவன் ஹிஸ்டரி அவன்கிட்டே இருக்கும், இல்லை இவன் பொண்டாட்டி கொஞ்சம் அழகா இருப்பாள். ஆனா அவ பயங்கர சமர்த்தியசாலியா இருப்பா. இவனோட அவ்வளவு பிரண்ட்ஸ் பேரையும் தெரிஞ்சி வச்சிருப்பா....

உன் சின்ன விழியில்...

மலங்க மலங்க முழிக்கும் உன் சின்ன விழியில் என் விழி தெரியுதடி..... தெருவில் அக்கா கைப்பிடித்து நடக்கும் போது என்னை புறாவாக்கி, கடிதத்தை கையில் திணித்து அத்தான் முன் என்னை தள்ளிய போதும்...... பள்ளிவிட்டு வரும் வழியில் குடித்த சுக்குக்காபிக்காக வீட்டுவாசலில் காசு கேட்டு கடைப்பையன் வந்து நின்ற போதும்... தமிழ் வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து சினிமா பாட்டுபாடி டீச்சர் வாசலில் நிறுத்திய போதும்... இறுக தலை வார காத்திருக்கும் அம்மா முன் தலை நனைத்து ஈரம் சொட்ட சொட்ட நின்ற போதும்... அறை முழுவதும் காய வைத்திருக்கும் நெல்லை ஒதுக்கி, மூலையில் கதை புத்தகத்துடன் ஒதுங்கி சித்தியிடம் பிடிபட்ட போதும்.... காலேஜ் கட் அடித்து ஊர் சுற்றி மினி டிராப்டரை தொலைத்துவிட்டு அப்பா முன் நின்ற போதும்... சேலையை யாரோ உடுத்தி கொடுக்க மணமேடையில் தடுக்கி ஏறும் போதும்... இப்படிதானே கண்ணே நானும் முழித்திருந்தேன்... என் விழியின் கதைதானே கண்ணே நாளை உன் விழியில்....

நம்ம ஊரு BSNL.....

நம்ம ஊரில இருக்கிற கவர்மென்ட் ஆபீஸ் பக்கம் கொஞ்சம் போனீங்கன்னா தெரியும், தினமும் வேலைக்கு போய்வருகிற அலுவலகத்தை ( அந்த ஆபிஸ் இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடிதான் நம்ம வரிப்பணத்தில கட்டினதா இருக்கும் ) எப்படி கேவலமாக வைத்திருப்பது, உட்கார்ந்திருக்கிற நாற்காலிக்கு பக்கத்தில் ஒரு மலை மாதிரி குவியலா, குப்பை மாதிரி பைல்களை எப்படி சேர்த்து வைக்கிறது, கரண்ட் போச்சுனா அதுலேருந்து ஒன்றை உருவி எப்படி விசிறியா பயன்படுத்திறது, வேலையே பார்க்காம, customer வந்ததைக் கூட கவனிக்காம எப்படி ஆபீசுக்குள்ளேயே சுத்துறது அப்படின்னு எல்லாம் நமக்கு சொல்லிக் கொடுப்பாங்க... நம்ம ஊரு BSNL ஆபீசுக்கு போகிற நிலைமை எனக்கு வந்துச்சு....என்னன்னா....நான் ஒரு புது செல் வாங்கி அதுல என்னோட BSNL சிம் கார்டு ஒண்ணை போட்டேன். அதுக்கு இந்த GPRS, WAP, MMS.....இப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் சேர்க்க வேண்டுமே. நானே நெட்லே இருந்து செட்டிங்க்ஸ் எல்லாம் சேர்த்துவிட்டேன். ( http://forumz.in/174-cellone-excel-gprs-edge-settings-all-major-handsets/ ). வேலை முடிஞ்சுதுன்னு பார்த்தா, மெயில் update ஆகுது ஆனா நெட் மட்டும் வேலை ...