எனக்கு கோபம்.... . பாரதி உன் மேல் எனக்கு கோபம் நீ தானே பெண்ணை படிக்க சொன்னாய் நீ தானே குடும்பத்தை உயர்த்த சொன்னாய் நீ தானே சமுதாயத்தை முன்னேற்ற சொன்னாய் படிக்கும் போது அவள் பெண் பிள்ளை குடும்பத்தை உயர்த்தும் போது அவள் பெண் தெய்வம் சமுதாயத்தை உயர்த்த போனாலே அவள் பெண்ணல்ல பேதையான மாதவி...... குற்றம் சாட்டப்படுவது பெண்தான் சாட்டுவதும் பெண்தான்.... கைப்பையுடன் வேலைக்கு போய் கவலையுடன் திரும்பும் பெண்ணை கைக்காட்டி சிரிக்கும் கூட்டம் ஆண் மட்டுமில்லை பாரதி...பெண்ணும்தான்.... ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே இந்த சமூக கூட்டம் தோழனாய் தோழியாய் சகோதரனாய் சகோதரியாய் சாதாரணமாய் பார்க்காத சிந்திக்காத புறம் பேசும் பெண்களின் புண்படுத்தும் பேச்சுகள்... இழிவான இந்த பெண்களின் இகழ்ச்சிக்கு பயந்து மாய்ந்து போன பெண்களை தெரியுமா பாரதி உனக்கு? உன் கனல் கக்கும் சாட்டையடியால் ஆண்களிடம் இருந்து எங்களை சற்று நிமிர செய்தாய் இன்று நீ இருந்தால் இப்படி பேசும் பெண்களை என் செய்வாய் சொல்.... வேண்டாம் பாரதி, நீ மறுபடியும் வேண்டாம்..... நீ மறுபடியும் பிறந்து வந்தால் உன் கவி...