Skip to main content

Posts

Showing posts from April 15, 2012

காணாமல் போன....

என் தனிமை.... என்னுடனே உண்டு உறங்கி பேசி பழகி பாட்டு பாடி படம் பார்த்து என்னுடனே நடந்து வந்து -சில சமயங்களில் என்னையே ஆழம் பார்த்து என் துணையாய் இருந்த என் தனிமையை தொலைத்துவிட்டேன்.... என் செவிகளில் விழும் சல சல பேச்சுகளில் என் தனிமையை தேடுகிறேன்.... அமைதியை கூட வைத்தே இருந்தேன் அதையும் காணவில்லை.... பேசிக்கொண்டே இருக்கும் உறவுகளுக்கு இடையில் பேசாமலே என்னை விட்டு நீ போனதெங்கே? கல்யாண வீடுகளில் கடைத் தெருக்களில் வாகன இரைச்சல்களில் சினிமா தியேட்டர்களில் - எங்குமே உன்னை நான் தொலைத்ததில்லையே என் மனதின் நண்பன் நீ என் நிழலும் நிஜமும் நீ என்னுடன் நீ இல்லாமல் நான் நானாக இல்லை என்றுதான் திரும்பி என்னிடம் வருவாய் தொலைந்தது நீயா அல்லது நானா...