ஞாபகத்தின் பின்னல்கள் சுழற்சி முறையில் வந்து போகும் மனிதர்கள் சுற்றும் கடிகாரத்தில் சுகமான கனவு முட்கள் மனதின் மூலையில் மறைந்த மனித முகங்கள் யாசித்த வாசகத்தில் சுவாசத்தின் உயிர் மூச்சுகள் நான் என்றும் நீ என்றும் இருக்கிறதா…. எதுவும் இல்லாத நிலை என்றும் இருக்கிறதா…. இல்லாத நிலையில் உயிர் உலவுகிறதா…. இருக்கும் நிலையில் மட்டும் ஏதாவது இருக்கிறதா…. புதிரான இந்த உலகில் புரியாத பார்வைகள் மெய் என்றும் பொய் என்றும் இரு வேறு அர்த்தங்கள் ஏற்பதா வேண்டாமா என்று சஞ்சலங்கள் முடிவில் தோற்கும் நம் மனக்குதிரைகள்…..