டைரக்டர் : விக்னேஷ் மேனன் ஒளிப்பதிவாளர் : ஆனந்த் ஜீவா கண்ணில் பட்ட விண்மீன்கள் : ராகுல், அனுஜா, விஷ்வா, ஷிகா, பாண்டியராஜன் 'விண்மீன்கள்' திரையில் பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பெயரின் காரணம்தான் தெரியவில்லை. விதவிதமான கதாபாத்திரங்கள் இருந்து ஒவ்வொருவருடைய செயல்களும் படத்தின் கதையில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் பெயர் ஒகே ஆகியிருக்கும். சரி, தலைப்பை விடுவோம்.... செரிபரல் பால்சி ( cerebral palsy ) இந்த நோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்ற ஒரு மாற்று திறனாளியின் கதைதான் இது.புதிதான ஒரு முயற்சிதான்.முற்றிலும் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே 'அஞ்சலி' திரைக்கு வந்து 22 வருடங்கள் உருண்டோடிவிட்டது. அந்த திரைப்படம் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையை பற்றியது. அக்கால கட்டத்தில் அந்த திரைப்படம் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியது. ஆனால் இப்போது ஏதாவது ஒரு நோயை வைத்துகொண்டு படம் பண்ணுவது சகஜமாகிப் போனது. நம் நடைமுறை வாழ்க்கையில், அக்கம் பக்கங்களில், உறவினர் வீடுகளில் என்று இந்த மாத...