பொதுவுடைமையாக... நான் இல்லாத இந்த ஒரு மாத இடைவெளியில் என் விட்டு முற்றத்தின் மேல் தட்டில் நீயும் உன் துணையும் குடியும் குடித்தனமுமாய் சுத்தப்படுத்த முடியாத அளவுக்கு சிறகுகளும் எச்சங்களும் மிச்சங்களுமுமாய் சரிசெய்ய ஒரு நாள் பொழுதாயிற்று எனக்கு பக்...பக்...என்ற சத்தத்துடன் மீண்டும் நீ நான் வந்தபிறகும் பயமில்லாமல் என் முன்னே கம்பியில் அமர்ந்து என்னையே உற்று நோக்கி 'இது உன் வீடும் அல்ல, என் வீடும் அல்ல அரசாங்கத்திற்கு சொந்தமானது.... இருவருமே வாழுவோம் சண்டை மறந்து சமாதானமாய்....' என்று சொல்லி நீ சென்ற பிறகுதான் புரிந்தது பொதுவுடைமை தத்துவம் என்னவென்று...