பகிர்வதில்தான் உள்ளது...... என் பதிவுலக நண்பரான ரமணி அவர்கள் தனக்கு கிடைத்த ' லீப்ச்டர்' என்கிற இளம் வலைபதிவர்களுக்கு வழங்கும் ஜெர்மானிய விருதினை ஒரு அங்கீகாரத்தை தனக்கு பிடித்த ஐந்து வலைப்பூக்களுக்கு பகிர்ந்து அளித்திருக்கிறார். அதில் என் வலைப்பூவும் ஓன்று என்பதில் மகிழ்ச்சிதான். நண்பர் ரமணிக்கு என் நன்றிகள்..... மேலும் இந்த விருதின் அடையாளமே இதை மேலும் ஐவருக்கு பகிர்ந்தளிப்பதுதான். எனக்கு பிடித்தமான ஐந்து இளம் வலைப்பூக்களுக்கு (200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைப்பூக்கள் ) பகிர்வதில் ஆனந்தம் அடைகிறேன்....அவர்களும் இதை ஐந்து பதிவர்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் அதிகமான வலைப்பூக்கள் அறிமுகபடுத்தபடுகிற வாய்ப்பும் அமைகிறது. இந்த விருதின் விதிக்கு ஏற்ப, ஐந்து இளம் பதிவர்களுக்கு வழங்கிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இவர்கள்தான் : திரு மயில்வாகனா அவர்களின் முல்லைவனம் ஆ...