இறக்கும் அக்கணமே... நீர் விட்ட மண்ணின் ரோஜா மலர்வதும் நிர்மலமான நீரில் நீர்க்குமிழி நீச்சலடிப்பதும் கனவுகளின் சுமைகளில் கவிதைகள் பிறப்பதும் மனம் பிடித்த மானுடத்தின் மையல் மலர்வதும் சாதலின் நொடி புரிதலின் சந்தோசம் நிச்சயிப்பதும் உயிரின் கலப்பு உண்மையின் வசம் இல்லாததும் உடலும் மனமும் வேறு என்பினும் உயிர்மை துளிர்ப்பதும் காதல் செத்து மணம் கைகூடின் உறுத்தும் பெண்ணின் ஆன்மா இறக்கும் அக்கணமே.....