நாளை இதே நேரம் தூங்கி எழுந்தா
புது வருஷம்....
இப்போதான் போன வருஷம்
தூங்கி எழுந்த மாதிரி இருக்கு...
இவ்வளவு வேகமா நாள் எல்லாம் ஓடினா நாம ஒண்ணாங்கிளாஸ் படிக்கும் போதுலே இருந்து எடுத்த resolutions எல்லாம் எப்போ நிறைவேத்துறது....
டைம்மே பத்தலை...
எட்டாம் கிளாஸ் படிக்கும் போது ஸ்கூலுக்கு ஒரு நாளாவது சேலை கட்டிரனும்னு உறுதி எடுக்கிறதுதான்....
அம்மா புண்ணியத்துல அதை பதிமூணாம் கிளாசில தான் நிறைவேத்த முடிஞ்சுது...
ஊர் ஊரா வேலை பார்க்காம ஒரே இடத்துல வேலை பாக்கணும்னு ஒவ்வொரு வருஷமும் உறுதி மொழி எடுக்கிறதுதான்....
ஆனா வீட்டுக்காரர் புண்ணியத்துல அது நடக்காம போயாச்சு....
ரோட்டில போகும் போது வரும் போது
கண்ணில படுற அநியாயத்தை விஜயசாந்தி ஸ்டைல்ல
தட்டி கேட்கனும்னு உறுதி எடுக்கிறதுதான்....
சரி போகட்டும், சமுதாயம்னா இப்படிதான் இருக்கும்
அப்படின்னு பெரிய ஞானி கணக்கா மனசு சமாதானம் ஆயிடுது...
நாய்க்குட்டி ஒண்ணு வளர்க்கணும்னு போன வருஷம் உறுதி எடுத்தேன்...
நாய்க்குட்டி கூடவே என்னையும் சேர்த்து
வெளியவே கட்டிப் போட்டுருவேன்னு பயம் காமிச்சாங்க...
அதனாலே அதுவும் நடக்கலை...
ஆனா லைப்ல நாம எடுக்காத resolutions எல்லாம் ஒழுங்கா நடக்கும்.
நல்ல மாப்பிள்ளை வேணும்னு கேட்டோமா...ஆனா வசமா எங்கிருந்தோ வந்து சிக்கிட்டாங்க....
அதனாலே இந்த வருஷம் முடிவு பண்ணிட்டேன் உறுதி எடுக்கிறதில்லைன்னு...எடுத்தாலும் அடுத்த வருஷம் இதே தான் ரிபீட்டு...
புலம்பல்கள்.....
ReplyDeleteஅட உறுதி எடுங்க..... நம்ம எடுக்கிற உறுதி நிறைவேறியது எப்போ ?
அதுக்காக சலைச்சிடுவோமா என்ன அடுத்த வருடமும் உறுதி உறுதிதான்
இப்படிதான் நீங்க ஓட்டிகிட்டு இருக்கீங்களா....
Deleteசரிங்க....
ReplyDeleteஇவ்வளவு நல்ல பிள்ளையா நீங்க...
Deleteஎந்த உறுதியும் எடுக்கமாட்டேன் என்பது தான் இந்தவருட உறுதியா ? கான்பிடண்ட் ??
ReplyDeleteஉறுதி எடுத்து எழுதி எழுதி டைரி நிறைஞ்சதுதான் மிச்சம்...
DeleteWISH U ALL A HAPPY NEW YEAR.
ReplyDeletethanx pa...and wish u the same...
Deleteஎடுக்கற resolution நிறைவேறாமலும், நாம் எடுக்காத resolution நிறைவேறுவதும் தான் வாழ்க்கை! இல்லையா?
ReplyDeleteஅருமையாக எழுதி உள்ளீர்கள் அகிலா,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நன்றி ரஞ்சனி மேம்...புத்தாண்டு வாழ்த்துக்கள்....
Deleteஅழகான வார்ப்பு !
ReplyDeleteவளமும் நலமும்
பெற்று உயர்வாய்
தோழியே !
வாழ்த்துக்கள் !
நன்றி ஸ்ரவானி...
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு நன்றி வை கோ....
Delete