நேற்று ஒரு பெரிய வீட்டு திருமணம்...
மண்டபம் பெருசு...அவங்க மனசும் பெருசு...
பெரிய பெரிய ஸ்டேஜ் decoration லட்ச கணக்கில் பணம் செலவழித்து...
buffet சாப்பாடு ஒரு பக்கம், இலை சாப்பாடு ஒரு பக்கம், அதிலும் சைவம், அசைவம் என தனித்தனியாக....
கார் காராய் ஆசாமிகள், அவர்களின் டிரைவர்களுக்கு என்று தனி சாப்பாடு....
உள்ளுரிலிருக்கும் ஒரு அரசியல்வாதி தன் படை பட்டாளத்துடன்...அவருக்கென்று தனி வீடியோ coverage வேற...நல்ல வேளை பொண்ணு மாப்பிள்ளை காலில் விழாமல் இருந்தார்....
கழுத்திலிருந்து இடுப்பு வரை அடுக்கடுக்காய் நகை அணிந்த பெண்கள்...
இதுக்கேன்றே hairdresser வைத்து ஸ்பெஷல் கொண்டை எல்லாம் போட்டு மெல்லிசாக ஒரு பட்டு கட்டி, அதில் பாதி உடம்பை காட்டி, யார் திருமணத்திற்கு ரெடியாக இருக்கிறார்கள் என்று வயது வித்தியாசம் தெரியாத அளவுக்கு மேக் அப் போட்டு மின்மினிகள்....
எவ்வளவு தான் காசை கொட்டி கல்யாணம் செய்தாலும் அதே தாலிதான் கழுத்தில், அதே சாந்தி முகூர்த்தம் தான் கட்டிலில், அதே குப்பை கொட்டல் தான் வாழ்க்கையில்....
எல்லோரும் ஒரே மாதிரிதானே வாழ்கிறோம்...பின் எதற்கு இந்த வீண்செலவும் படாடோபமும்....புரியவில்லை...
என் தோழியின் மகள் திருமணம் என்பதால் நானும் அதில் ஒரு பகுதியாய் நடித்து முடித்து வெளியே வந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்....
நம் மனதுக்கு ஒவ்வாத, கொள்கைக்கு மாறுபட்ட சில விழாக்களில் கலந்து கொள்ள வேண்டிய சந்தர்பங்களை தவிர்க்கலாம் என்று மனதில் தோன்றுகிறது....ஆனால் நடைமுறையில் சாத்தியபடுவதில்லை.....
திருமணங்களை கூட வியாபாரமாக்கி விற்றுவிடுகிறார்கள்.
ம்ம்ம்....ஒன்றும் சொல்வதற்கு இல்லை....
//ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கு இல்லை.//
ReplyDeleteஅதே..........
\\எல்லோரும் ஒரே மாதிரிதானே வாழ்கிறோம்...பின் எதற்கு இந்த வீண்செலவும் படாடோபமும்.\\ நீங்க கேட்பது போன்ற திருமனகள் கேரளத்தில் நடக்கின்றன, வீண் செலவு என்று எதுவுமே இருக்காது, ஆனால் இங்கே வறட்டு கவுரவம் பார்க்கிறார்கள், இந்நிலை மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
ReplyDeleteஇங்கே யாரும் மாறப் போவதில்லை...
Deleteவியாபாரம் ஆகி பல காலம் ஆகி விட்டதே...!
ReplyDeleteஇப்போது மனங்கள் சேருவதில்லை... பணங்கள் தான் சேருகின்றன...
வாழ்வும் Use and Throw போல் ஆகி விட்டது... கொடுமை...
சொல்வதற்கு பல உள்ளன...
பணம் மட்டுமே வாழ்க்கை என்கிற முறையில் தான் மாப்பிள்ளையே தேடுகிறார்கள்....
Delete//எவ்வளவு தான் காசை கொட்டி கல்யாணம் செய்தாலும் அதே தாலிதான் கழுத்தில், அதே சாந்தி முகூர்த்தம் தான் கட்டிலில், அதே குப்பை கொட்டல் தான் வாழ்க்கையில்....//
ReplyDeleteஅவரவர்களுக்கு அது புதிதாக உள்ளதால் இருக்கலாம்.
அனுபவித்து உணர்ந்தவர்களால் மட்டுமே இதுபோல நினைக்கத்தோன்றுகிறது.
இன்று புதிதாகத்திருமணம் செய்து கொள்பவ்ர்களும் பிற்காலத்தில் ஏதோ ஒரு நாள் இது போல நினைக்கலாம்.
ஆனாலும் அதே ஆடம்பரத்துடன் தங்கள் குழந்தைகள் திருமணத்தையும் அவர்கள் நடத்தலாம்.
//எல்லோரும் ஒரே மாதிரிதானே வாழ்கிறோம்...பின் எதற்கு இந்த வீண்செலவும் படாடோபமும்....புரியவில்லை...//
அது தான் புரியாத புதிர். தொடர்ந்து காலம் காலமாக நடந்து கொண்டே தான் வருகிறது. நாளுக்கு நாள் இதில் பல்வேறு புதுமைகளும், பல்வேறு நவீனங்களும் வந்து திருமணச் செலவினை லட்சங்களிலிருந்து கோடிகளாக மாற்றித்தான் வருகிறது.
சிலர் ஆடம்பரமாக அச்சடிக்கும் பத்திரிகைகளே மிகவும் விசித்திரமாக அழகாக உள்ளன. ஒவ்வொரு அழைப்பிதழும் ரூபாய் 50 முதல் 500 வரை கூட அடக்கம் ஆகிறது. ஆனால் அழைப்பிதழின் நோக்கம் என்ன? எந்த இடத்தில் திருமணம்? எந்த நாளில் திருமணம்? எத்தனை மணிக்குத்திருமணம்? யாருக்கும் யாருக்கும் திருமணம்? என்பது மட்டும் தானே! இதற்கு இவ்வளவு விலையில் அழைப்பிதழ் தேவையா?
தேவை தானாம். ஏனெனில் அந்த ஜோடிக்கு வாழ்க்கையில் முதன்முதலாக நடக்கும் ஓர் சுபமாக சுகமான புது அனுபவம்.
நாம் இதைப்பற்றி எடுத்துச்சொன்னால் யாரும் கேட்கப்போவது இல்லை.
நல்லதொரு ஆதங்கத்தை அழகாக எடூத்துச்சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்
VGK
அழைப்பிதழ் விஷயத்தில் எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு....எதை சொல்லவருகிறோமோ அது மட்டும் போதுமே...அதற்கு ஏன் அவ்வளவு செலுவு செய்து பந்தாவாக அழைப்பிதழ் அடிக்க வேண்டும்....
Deleteநன்றி உங்களின் பகிர்தலுக்கு...
திருமண அழைப்பு மற்றும் அழைப்பிதழ் பற்றி நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். சற்றே நகைச்சுவையாகவும் அதே சமயம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும்.
ReplyDeleteநேரமும் விருப்பமும் இருந்தால் படித்து விட்டு கருத்துக்கூறுங்கள்.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html [அழைப்பு பகுதி 1 of 2]
அன்புடன்
VGK
கண்டிப்பாக படிக்கிறேன்...
Deleteநானும் நேற்று இதே போன்ற அசத்தலான திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன்! அசைவம் அங்கு இல்லை..மற்றபடி வாணவேடிக்கை முதற்கொண்டு அனைத்து கொண்ட்டாட்டங்கள்..!
ReplyDeleteசேர்த்த செல்வம் பலருக்கு சென்றடையுமே என்று ஆறுதல் அடைந்தேன்...! உழைத்து சேர்த்த பணத்தில் இப்படி செலவு செய்ய மனசு வராது..அதிர்ஷ்டக் காசாகத்தான் இருக்கும் என்றுத் தெளிவடைந்தேன்!
நன்று..வாழ்த்துக்கள்!
அப்படிஎன்றும் இல்லை....அவர்களின் மனம் இந்த ஆடம்பரத்தை தான் விரும்பியிருக்க வேண்டும்....அதனாலும் செலவு செய்கிறார்கள் போலும்...
Deleteநிதர்சனமான விமர்சனம்!
ReplyDeleteநன்றி கவிப்ரியன்...
Deleteசமீபத்தில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த எனது நண்பர் இப்போதுதான்
ReplyDeleteஒரு மூச்சு அழாத குறையாக மனக்குறையை இறக்கி வைத்து விட்டுப்போனார்.
மணமகனும்,மணமகன் வீட்டாரும் பத்து பைசா வரதட்சணை வேண்டாம் எனச்சொல்லி விட்டார்கள்.
எல்லா ஆடம்பரச்செலவையும் இழுத்து வைத்தது என் நண்பரின் மனைவி.
திருமணம் நடக்கும் இடத்தில் ‘இன்கம்டேக்ஸ்காரர்கள்’ இருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும்.
பெண்களுக்கு இது ஒரு crazeஆக போய்விட்டது....என்ன செய்ய....
Deleteincome tax ஆட்கள் இருந்தால் மட்டும் திருந்தவா போகிறார்கள்....அவர்களுக்கும் சேர்த்து போஜனம் படைப்பார்கள் நம்மவர்கள்....
எத்தனை முறை, எத்தனை பேர் சொன்னாலும், இந்த விஷயம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் அகிலா!
ReplyDeleteஆனால் நமக்கு ஒரு சின்ன திருப்தி மனதில் உள்ளதைக் கொட்டி விட்டோம் என்று. அவ்வளவுதான்!
அதுவும் சரிதான் மேம்...
Deleteஎன்ன செய்ய சகோதரி...
ReplyDeleteஎல்லாம் தலைகீழ் விகிதங்கள் தான்...
நாம் எந்த நிலையில் இருக்க விரும்புகிறோமோ
அதன் சாயலில் கூட நம்மால்
வாழ முடிவதில்லை...
சில நேரங்களில்
நம்முடன் இருப்போரின்
மனம் சங்கடப்படும் என்றே
நிறைய விஷயங்களை
ஓதுக்கியே வைத்திருக்கிறோம்...
உண்மையே மகேந்திரன்...
Deleteசார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் மிக்க நம் சமுதாயத்தில் உறவுகளுக்காக சில சமயங்களில் நம் சுயம் சற்று சரிவடைகிறது....
கல்யாணத்துக்கு போனமா வந்தமா அப்ப்டின்னு இருக்கணும்...ரொம்ப யோசிச்சா இப்படிதான்....
ReplyDeleteநீங்க அப்படித்தானா ஜீவா?....
Deleteநாமளும் சமுதாயத்திற்காக யோசிக்க வேண்டாமா....
//எவ்வளவு தான் காசை கொட்டி கல்யாணம் செய்தாலும் அதே தாலிதான் கழுத்தில், அதே சாந்தி முகூர்த்தம் தான் கட்டிலில், அதே குப்பை கொட்டல் தான் வாழ்க்கையில்....
ReplyDelete//உண்மைதான் ஆனாலும் ஒரு விளம்பரம் செய்தல் என்பது இயல்பாகிப்போனது இதில் நாமும் விதிவிலக்கல்ல தோழி ஊரோடு ஒத்து வாழ்
ம்ம்ம்....ஏதோ என் ஆதங்கம்ப்பா...
Delete