அக்கா...
அன்று ஒரு நாள் எங்கள் தெருவில் ஒருவன் குடித்துவிட்டு சத்தமாக பேசிக் கொண்டு தள்ளாட்டத்தில் வருவது பார்த்து கையில் கேமரா வைத்திருந்ததால் அவனை வீடியோ எடுத்து கொண்டிருந்தேன். அருகில் நெருங்கி வந்து கொண்டிருந்தான். என்னையும் பார்த்துவிட்டான்.
உடனே 'அக்கா.....என்னை மன்னிச்சிடு அக்கா' என்று கும்பிட்டு கொண்டே அருகே வர, சட்டென்று கேமராவை ஆப் பண்ணினேன்.
எனக்கு அவனுக்கும் இடையில் காம்பௌண்ட் சுவர் இருந்ததால் தப்பித்தேன். அவனோ புலம்பிக் கொண்டிருந்தான். ' உனக்கே தெரியும் அக்கா....நான் முன்னாடி குடிச்சிருக்கேனா....அந்த பாவி எங்க அப்பன்(!) இருக்கானே என் பாட்டன் சேர்த்து வைச்ச எல்லா சொத்தையும்(!) குடிச்சே அழிச்சிட்டான்...ஒரு பைசா கூட எனக்கு வைக்கல்லை...என் பொண்டாட்டியும் இப்போ அவ அம்மா வீட்டுக்கு போய்ட்டா ..உலகத்தில எல்லோருமே மோசம்கா....யார்கிட்டேயும் உண்மை இல்ல....பொறுப்பு இல்ல....' என்னமோ இவன் கிட்டே மட்டும் இருக்கிற மாதிரி....
இப்படி அவன் டயலாக் மேல டயலாக்கா ஒப்பிச்சிகிட்டே இருக்க, நான் என்ன செய்ய, என்ன சொல்ல என்று தெரியாம அவனையே பார்த்துகிட்டு அவன் சோக கதையை கேட்டுகிட்டு இருந்தேன்....
ஓரிரு நிமிடங்களில் தெளிந்தேன்....'குரைக்கிற நாய் கடிக்காது' என்ற தைரியத்துடன், அவனிடம், 'சரி, உன் பாட்டன் சேர்த்து வைச்சது எல்லாம் போயாச்சு...நீயும் இப்படி குடிச்சிக்கிட்டு இருந்தா, உன் பையனுக்கு என்ன சேர்த்து வைப்பே....அவனும் நாளைக்கு எங்க அப்பன் குடிச்சு குடிச்சே ஒரு பைசா கூட எனக்கு சேர்த்து வைக்கலைன்னு மனசு ஒடிஞ்சு உன்னை மாதிரியே அவன் அப்பனை ...அதான்...உன்னை இதே மாதிரி தண்ணி போட்டுக்கிட்டு ரோடு முழுவதும் திட்டிகிட்டே போவான்....அவன் உன்னை கரிச்சி கொட்டாம இருக்கணும்னா தண்ணி போடாம கொஞ்சம் காசை அவனுக்கு சேர்த்து வை....அப்போவாவது உன் பொண்டாட்டி உன்கிட்டே வருவா...' என்று சொல்ல, ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டான்.....
எனக்கு என்னடா இது என்றாகிவிட்டது.....ரெண்டு நிமிஷம் கழித்து தானே கண்ணை துடைத்து கொண்டு எழுந்தான்.....'இனி பாருக்கா....நிறைய காசு என் பையங்களுக்கு சேத்து வைக்கேன்....அப்புறம் நீ கேளு....உன் சத்தியமா சொல்றேன் இதை மட்டும் நான் செய்யலேன்னா என் பேரு குமாரு இல்ல...' அப்படின்னு சபதம் பண்ணிட்டு போய் ஒரு பத்து நாள் ஆச்சு....இன்னும் ஆளை காணும்....
திருந்திருப்பானா இல்ல குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு நிருபிச்சிருப்பானான்னு தெரியலை....எங்கேயாவது இவனை பார்த்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா.....
இவனெல்லாம் திருந்துற ஜென்மமே இல்லை...
ReplyDeleteரொம்ப தெளிவா சொல்லியிருக்கான் தனபாலன்...பார்க்கலாம்...
DeleteNaam samuthayathai kurai solla vendum
ReplyDeleteகஷ்டம் வந்தா தண்ணி அடின்னு சொல்லி வச்சது இந்த சமுதாயத்தில இருக்கிற இவன மாதிரி ஆளுங்கதானே....
Deleteநெஞ்சை தொடும் நிகழ்வு அல்லது கற்பனை !!!!!! அருமை
ReplyDeleteகற்பனை அல்ல நிஜம் தாங்க....
Deleteநன்றி
நான் நேத்து தான் அவனைப் பார்த்தேன் அகிலா மேடாம்.
ReplyDelete“என் அப்பன் எனக்கு எதுவுமே சேத்து வைக்கலை...
நான் ஏன் எம்மவனுக்குச் சேர்க்கனுத்ன்னு...“ சொல்லி ஓ... வென்று அழுதிட்டு போனான் மேடாம்...
என்ன செய்யலாம்...?
அடடா, எங்க? உங்க ஊரிலா?....திருப்பியும் பார்த்தா flight பிடிச்சி வரசொல்லுங்க அருணா...குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு நிருபிச்சிட்டானே..
Deleteவீடியோவை சாட்சிக்கு போட்டும் யாரும் நம்பமாட்டேன்கிறாங்க...என்ன பண்ண...
//எனக்கு அவனுக்கும் இடையில் காம்பௌண்ட் சுவர் இருந்ததால் தப்பித்தேன்.//
ReplyDeleteநீங்களே பயந்தால் எங்க நிலைமை
நான் பயந்தது கேமராவை என்கிட்டே இருந்து பிடுங்கிருவான்னு தான் முத்தரசு....
Delete//எங்கேயாவது இவனை பார்த்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா.....//
ReplyDeleteஊருக்குள்ள கொள்ள பேரு திரியுரானுங்கோ இதுல நீங்க சொன்ன ஆளு ஆரு? எப்பூடி?
//கழித்து தானே கண்ணை துடைத்து கொண்டு எழுந்தான்.....'இனி பாருக்கா....நிறைய காசு என் பையங்களுக்கு சேத்து வைக்கேன்....அப்புறம் நீ கேளு....உன் சத்தியமா சொல்றேன் இதை மட்டும் நான் செய்யலேன்னா என் பேரு குமாரு இல்ல...//
ReplyDeleteசொல்லீட்டு எழுந்து நடந்து போய் இருக்காரு....(மரியாதை) - நிச்சயம் நம்பலாம் அக்கா...
அப்போ கண்டிப்பா வருவாரு...(அதே மரியாதைதான் )...வந்தா ஒரு போட்டோ எடுத்து போடுறேன்...
Deleteவீடியோ பார்க்கவில்லை , அதனால் கற்பனையோ என குறிப்பிட்டேன் , எப்படியாயினும் உங்கள் எதிர்பார்ப்பு , அவர் திருந்தியிருக்கலாம் என்பதுதான் !!!!!! புரிகிறது
Deleteஓகே....ஓகே...பரவாயில்லை சுகுமாரன்....
DeleteYou made a sincere attempt. I admire you for it.
ReplyDeletethanks mam
Deleteரொம்ப நன்றி அகிலா. குடிக்கிறவங்களைப் பாத்து எதிர்க்குரல் கொடுத்து நாளாச்சு. வாய்ப்பிற்கு நன்றி. நீங்கள் கூறிய வரிகளில் திருந்துகிறவனென்றால் குடும்பம் சிதையும் வரை காத்திருந்திருப்பானா. பாவம் அகிலா நீங்கள் அவன் ஏதோ குடித்துவிட்டு உளறிப் போயிருக்கிறான் அவனைப் போய் நம்பிக் கொண்டு....இருந்தாலும் உங்கள் தன்னம்பிக்கைக்காக அவன் வரணும்.
ReplyDeleteஹாஹா....எழில், ஒரு சின்ன ஆசைதான்.....
Deleteதிரும்பி , திருந்தி வரணும்
ReplyDeleteஒரு நாள் கண்ணில்படுவான்...பார்க்கலாம்...
Deleteஹா ஹா ஹா !!!
ReplyDeleteஇனி உங்க பக்கமே திரும்பிக்கூட பார்க்கமாட்டான், உங்க மேல சத்தியம் செய்துருக்கனே அதுக்குதான்ன்தேடுரீங்களா???:-))))))))
ஆகாஷ்....ஒரு நம்பிக்கைதான். இதுக்கு முன்னாடி எத்தனை சத்தியம் பண்ணி காற்றில் பறக்கவிட்டானோ யாருக்கு தெரியும்....
Deleteமது பாட்டில்களில் எழுதப்பட்டுள்ள "" குடி குடியால் கெடும் "" என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் பலர் வாழ்வில் கண்டவன் நான் .அவன் திருந்த ஒரு சந்தப்பம் ,மூளையில் சிறு மணி ஒலித்தமைக்கு மிக்க நன்றி அகிலா சகோ !நம் எதிர்பார்பிற்க்காகவாவது அவன் திருந்தி இருக்க நான் வேண்டுகிறேன் .
ReplyDeleteகுடிப்பதற்கு நிறைய காரணங்கள்...காரணம் இல்லாமலும் குடிக்கிறார்கள்...
Deleteமனம் மாறினால் நல்லதுதானே....
இப்படி ஒருவர் திருந்தினால்
ReplyDeleteநீங்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
முத்துக்களாய் பிரகாசிக்கும் அவன்
வாழ்வில்...
.............................
இல்லையென்றால்
நீரோடு கலந்த உப்பென்று
நினைச்சுக்க வேண்டியதுதான்..
ரொம்ப தெளிவா சொல்லிட்டு போயிருக்கான் மகேந்திரன்....பார்ப்போம்...
Deleteஇதுபோல எத்தனை உறுதிமொழியோ ,ம்ம்ம் திருந்தட்டும்
ReplyDeleteஇது எத்தனாவது உறுதி மொழியோ?
Deleteநல்ல தைரியம்தான் உங்களுக்கு. நிஜமாகவே நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். அவன் மனதில் நல்ல மாற்றம் வரட்டும்.
ReplyDeleteஒருநாள், அவன் உங்களைத் தேடி நிச்சயம் வந்து நன்றி சொல்வார், இறைநாடினால்.
நானும் அதை எதிர்பார்க்கிறேன் ஹுசைனம்மா....
Delete