இடம் பொருள் என்கிற சுயம் இல்லாமல்
உணவு உடை என்கிற சிரத்தை இல்லாமல்
உறவுகளின் உரசல்கள் இல்லாமல்
எல்லாம் துறந்து
தனியாய் யாருமில்லா வானாந்தரத்தில்
மனதுக்கு மட்டும் நெருக்கமாய்
காற்றோடு சேர்ந்து காணாமல் போய்
லேசாகி தொலைய நினைப்புதான்...
நினனவு கலைந்து
கண் திறந்தால்
கல்லும் மண்ணுமாய்
இந்த உலகம் கண்முன்னே
அட போங்கப்பா.....
நியாயமான வெறுப்புத்தான். சில சமயங்களில் என்னையும் ஆட்கொண்டதுண்டு. உணர்வுகளை எழுத்தில் கடத்திவிடும் உங்களுக்கு ஒரு சல்யூட்.
ReplyDeleteஎல்லோருக்கும் ஒரு கட்டத்தில் தோன்றும் பாலகணேஷ்....
Deleteசுவாரஸ்யமே இல்லை என்றால் இப்படி தான்...
ReplyDeleteநாமே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் - பலவற்றை...
இல்லை என்றால் அடப் போங்கப்பா...
எங்கே தனபாலன்...
Deleteஒரே வேலையை எப்படி மாற்றி செய்தாலும் அதே போர் அடிக்கிறதே...
சண்டை போட தயாராய் இருக்கிறீர்களா?
ReplyDeleteம்ம்ம்...
Delete//உறவுகளின் உரசல்கள் இல்லாமல்
Deleteஎல்லாம் துறந்து//
அப்படி ஏதாவது ஒரு நாள் கண்டிப்பாய் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.அப்போது தெரியும் எதற்காக வாழ்கிறோம் என்று.
//தனியாய் யாருமில்லா வானாந்தரத்தில்//
ஒரே ஒரு நாள் வானொலி,தொலைகாட்சி,நிலைபேசி,செல் பேசி என அனைத்தையும் அணைத்து விடுங்கள்(மின்சாரமின்றி அப்படிதானே இருக்கிறோம் என்பது கேட்கவில்லை எனக்கு). முதல் நாளே வீட்டிலுள்ள எல்லோரிடமும் "நாளை ஒருநாள் யாரிடமும் பேச மாட்டேன்.ஒருநாள் மட்டும் யாரும் உங்களிடமும்(அகிலா) பேச வேண்டாம்" என்றும் சொல்லி விடுங்கள்.தனியறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொள்ளுங்கள்.கழிவறையும் சேர்ந்தமைந்த தனியறை எனில் எதற்காகவும் மறுநாள் வரை கதவை திறக்காதீர்கள்.அப்புறம் வனாந்திரம் பற்றி யோசிக்கலாம்.
This comment has been removed by the author.
ReplyDeleteகல்லிலும் மண்ணிலும்
ReplyDeleteஇருந்து தான் உலகம் தோன்றியது
உலகம் தோன்ற்றியதனால் தான்
மனிதன் தோன்றினான்
மனிதன் தோன்றியதனால் தான்
உறவுகள் தோன்றியது
உறவுகள் தோன்றியதனால் தான்
அன்பு தோன்றியது
அந்த அன்பு ரசம் எத்தனை
பருகினாலும் சலிப்பு இல்லாதது ..
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ...
love can overcome quarrels, depression and even stress.
ReplyDeleteகாற்றோடு காற்றாக கலந்து போனாலும்
உறவுகளின் உரசல்கள் இல்லாமல் போனாலும்
நாம் பந்த பாசங்களால் பிணைக்க பட்டு இருகிறோம்
சிலவை சலிப்பாக தெரிந்தாலும் உண்மையில்
அவை சுகமான சுமைகளே ..
நல்ல கவிதை வரிகள் பாராட்டுக்கள் ..