பெண்களும் தோழமையும்
இன்று காலையில் வேலையாய் வெளியே போய்விட்டு வரும்போது எனக்கு முன் திருமணமான இளவயது பெண்கள் இருவர் நடந்து கொண்டிருந்தார்கள். இருவருமே சித்தாள் வேலை பார்ப்பவர்கள் என்பது அவர்கள் பேச்சிலே தெரிந்தது.
ஒருத்தி இன்னொருத்தியை தூக்கி விளையாடிக் கொண்டும் கிள்ளி விளையாடிக்கொண்டும் பேசிக் கொண்டும் சிரித்து கொண்டும் சென்று கொண்டிருந்தார்கள்.
இவங்க ரெண்டு பேரும்தான் அவங்க...
'என் புள்ளையை என் மாமியாரை நம்பி விட்டுட்டு வந்திருக்கேன். அந்த அம்மா புள்ளையை என்ன பாடுபடுத்துதோ தெரியல' - இது ஒருத்தி....
'நானும்தான் விட்டுட்டு வந்துருக்கேன். என் புள்ளை என் மாமியாரை என்ன பாடுபடுத்துவானொன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். ' ன்னு இன்னொருத்தி.
இருவரின் சிரிப்பும் சந்தோஷமும் வழி முழுவதும்.
தோழமை என்பது படிக்கும் பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் மட்டும் வருவதில்லை. அக்கம்பக்கம் இருப்பவர்கள், உடன் வேலை செய்பவர்கள் இப்படி எத்தனையோ வழிகளில் ஏற்படலாம்.
மூன்று நாட்களுக்கு முன் ஒரு திருமண வீட்டில் என் தோழிகளை (உடன் படித்தவர்கள் அல்ல ) சந்தித்தேன். பேசுதலும் பகிர்தலும் கழுத்தில் கை போட்டு கொள்வதும் விளையாட்டாய் அடித்து கொள்வதுமாய் சந்தோஷமாய் கழிந்தது பொழுது.இந்த தோழமைகள் இல்லாமல் இருப்பவர்கள் வாழ்வில் நிறைய இழந்தவர்கள் ஆவார்கள்.
சில பெண்களை பார்த்திருக்கிறேன். மிகவும் இறுக்கமாக இருப்பார்கள். முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. இவர்கள் வீட்டு கதவு எப்போதும் பூட்டியே இருக்கும். அம்மா வீட்டு கேட் மாதிரி பெரிய இரும்பு கேட் போட்டு உள்ளே இருப்பார்கள்.
இவர்கள் மனம் திறந்து யாரிடமும் பேசி பழகி இருக்க மாட்டார்கள். இந்த மாதிரி பெண்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் தம் கீழ் அடிமைகளாய் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பாசத்தை எமனின் பாசக்கயிராக மாற்றிவிடுவார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி இப்படிதான் இருந்தார்கள். அவரின் மகள் வேலை பார்த்து கொண்டிருந்த ஊரில் ஒரு விபத்தில் மாட்டி ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டிருந்தாள்.
இந்த அம்மாவின் கணவரோ பரிதவித்து போய் கார் ஏற்பாடு பண்ண இங்கேயும் அங்கேயும் அழுக்கொண்டே ஓடிக்கொண்டிருக்க இந்த அம்மா மெதுவாக சௌரியமாக காய்ஞ்ச துணியை எல்லாம் மடிச்சி பிரோவுக்குள்ள அடுக்கி வச்சிக்கிட்டு இருந்தாங்க. மழை பெய்தா நனைஞ்சிருமாம். நல்லவேளை அவரின் பெண் உயிரோடு திரும்பி வந்தாள்.
எப்படி இவ்வளவு அழுத்தமாக அழாமல் கூட இருக்க முடிந்தது என்பதை நினைத்தால் இப்போதும் கூட எனக்கு ஆச்சிரியமாக இருக்கும். சில வீடுகளில் சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுப்பார்கள் ஆண் பிள்ளைகளுக்கு 'நீ ஆம்பளை, அழக்கூடாது' என்று. ஆண் என்றாலும் அவனும் ஒரு உயிர்தானே. அவனுக்கு மட்டும் ஏன் இயல்பாய் வரும் அழுகை மறுக்கபடுகிறது. சில பெண்கள் முரட்டுத்தனமான பால் பாகுபாடு பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களை பற்றி இன்னொரு சமயம் பார்ப்போம்.
அதனால் ஆணோ பெண்ணோ யாராயிருந்தாலும் இருக்கிற காலத்தில தோழமைகள் பாராட்டி சந்தோஷமா இருங்க... மனதின் இறுக்கங்கள் குறையும்.
அதுக்காக தோழிங்க சொல்றதை எல்லாம் கேட்டு குடும்பத்துக்குள்ளே குழப்பத்தை உண்டு பண்ணிவிடக் கூடாது. சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளலாம். துக்கங்களை ஓரளவுக்கு....அவர்களே மீண்டு வர உதவுங்கள். அதுதான் தோழமையின் அர்த்தமும் கூட....
எப்படியோ எல்லோரும் சந்தோஷமா இருந்தா சரிதான்....
இன்னும் எழுதுவேன்.........
/// எப்படியோ எல்லோரும் சந்தோஷமா இருந்தா சரிதான்... ///
ReplyDeleteஎல்லோருக்கும் அந்த எண்ணம் இருந்தாலே போதும்...
நன்றி...
உண்மைதான் தனபாலன்....
Deleteநல்ல பதிவு
ReplyDeleteஆனாலும் எல்லாத்தையுமே ஈசியாக எடுத்துக் கொல்ளும் தன்மை கொண்டவர்களில் அப்ப்ண்ணையும் உள்ளடக்கலாமே
புடவை மடித்த பெண்ணைச் சொன்னேன்
எதைதான் ஈஸியாக எடுத்து கொள்வது என்பதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறதே....நன்றி...
Deleteஆணோ பெண்ணோ யாராயிருந்தாலும் இருக்கிற காலத்தில தோழமைகள் பாராட்டி சந்தோஷமா இருங்க... மனதின் இறுக்கங்கள் குறையும்.“
ReplyDeleteநல்ல கருத்து மேடம்.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அருணா....
Deleteசந்தோசங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். வேதவாக்காக எடுக்ககூடாது. ஆமா.. இதுதான் உங்க ஏரியாவா?
ReplyDeleteரொம்ப புத்திசாலிதான் நீங்க....
Deleteஅருமை நன்றாக கணித்துள்ளீர்கள்
ReplyDeleteநன்றி நண்பா.....
Deleteஒரு பெண்ணாக இருந்தும் பெண்களின் நிறைகுறைகளை சமமாகப் பார்த்து எழுதுவது நன்றாக இருக்கிறது, அகிலா.
ReplyDeleteஎந்த நட்புமே ஒரு எல்லைக்குள் இருந்தால் தான் நல்லது. உங்களது அடுத்தவர் வட்டத்திற்குள்... நினைவுக்கு வருகிறது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தின வாழ்த்துக்கள்!
பெண்ணாக இருந்தாலும் உண்மையை தானே பேசுவோம்...நன்றி மேம்....
Deleteபகிர்வதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துக்கம் பாதியாகிறது. இருக்கும் ஒரு வாழ்க்கையை பாராமுகமாக இருந்து என்ன சாதிக்கப்போகிறோம் தோழி.பலர் உணர்வதில்லை.வாழ்தல் இனிது. நட்புடன் வாழ்தல் அதனினும் இனிது
ReplyDelete//வாழ்தல் இனிது. நட்புடன் வாழ்தல் அதனினும் இனிது//
Deleteநிஜம்தான் எழில்.....