மாமியாராய் பெண்கள்...
எனக்கு தெரிந்த அந்த பெண்மணி மெத்த படித்தவர். அவர் கணவரின் ரிடையர்மென்ட்டுக்கு பிறகு, தான் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டார். அவருடைய மகனுக்கு பெண் பார்க்கும் நேரம் வந்த போது, தோழிகளின் வட்டத்தில் அவரின் தத்துவங்கள் மிக பிரபலம்.
'நான் கண்டிப்பாக அவர்களை திருமணம் முடிந்த கையோடு வேறு வீடு பார்த்து வைத்துவிடுவேன். அவர்களின் விஷயங்களில் தலையிடமாட்டேன். '
'கேட்டால் செய்வேன்; கேட்காவிட்டால் செய்யமாட்டேன்'
'பிரசவம் எல்லாம் வந்தால், அவங்க அம்மாவையே பார்த்துக்கொள்ள சொல்லுவேன். நான் சும்மா பார்த்திட்டு வருவேன்' என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்.
சரி...திருமணமும் முடிந்து மகனும் மருமகளும் இவர்கள் வீ ட்டிலேயே. கேட்டால்,
'உறவுக்காரர்கள் வந்து செல்வார்கள்...அதுவரைக்கும்'
'அவ M.Phil எக்ஸாமுக்கு இங்கேதான் பக்கம்'
'கொஞ்ச நாள் இருந்து சமையல் கத்துகிட்டும்...'
இப்படி ஏகப்பட்ட காரணங்கள்.
இதற்குள் நிறைய பிரச்னை, சண்டை, சமாதானம் என்று குடும்பம் களைக்கட்டி கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் தனிக்குடித்தனம் வைத்துவிட்டார். அப்புறம் எங்களிடம், 'இது முதலிலே செய்திருப்பேன். அவ சமைக்க கத்துக்கணுமேன்னு தான் கூட வச்சிருந்தேன். இப்போ நல்ல சமைக்கிறா' என்று சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு இருந்தார்.
கொஞ்சம் நாள் ஆச்சு. அவளும் குழந்தை உண்டாகியிருந்தா. இந்த அம்மாவும் சும்மா இல்லாமல் முறுக்கு சுட்டேன், அதிரசம் செஞ்சென்னு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டும் விசிட் அடிச்சு அங்க இது சரியாய் இல்ல, அது சரியில்லன்னு குத்தம் சொல்லி அடுத்த ஒரு வாரத்துக்கு கட்டில பிரிச்சி போட்டுட்டு வந்துரும்.
அவளுக்கு அஞ்சு மாதம் ஆகியும் வாந்தி நிக்கலைன்னு தலையை உருட்டி யோசிச்சி தனிக்குடித்தனத்தை கட் பண்ணி பொது குடித்தனம் ஆக்கிட்டாங்க.
பகல் முழுவதும் ஒரே ஜூஸ் மயம்தான். சண்டையெல்லாம் எங்கேன்னு தேடனும்.....அப்படி ஒரு பாசம். அவ அம்மாகிட்டே இருந்து வர்ற போன் எல்லாம் கட். அந்த பிள்ளையும் ஏதோ அமைதியா இருந்துச்சு குழந்தை பெத்துக்கிறவரை.
குழந்தை வந்தபிறகு தினம் தினம் சண்டை. அந்த அம்மாவின் மகனோ காலையில் போனா ராத்திரிதான் வரனும்ன்னு ஒரு பாலிசி வச்சிருந்தான். அப்போதானே ஆண் இனத்தின் சுயத்தை காப்பாத்திக்க முடியும்.
அவள் மறுபடி தனிக்குடித்தனத்திற்கு அடிபோட, அந்த அம்மா இப்போ விடமாட்டேன். என் பேரன் தலை நிமிரனும், தவழனும், உட்காரணும், நடக்கணும் என்று ஸ்டேஜ் பை ஸ்டேஜ்ஜா கணக்கு போட.....இன்னும் சண்டை சத்தம் ஸ்டாப் ஆகலை....
வடிவேலு காமெடி மாதிரி வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் 'ப்பிளான்' எல்லாம் பண்ணி வாழமுடியாது. உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதன் உரிமைபட்ட நபர்களிடமே விட்டுவிடுவது நல்லது.
நாம பெரியவங்க.... அதனாலே நமக்குதான் குழந்தையை பற்றி நல்லா தெரியும்னு நாமளா முடிவு பண்ணக்கூடாது. அவளுக்கும் தெரிந்திருக்கலாம்.
அவள் அந்த குழந்தையின் அம்மா. குழந்தையை தூக்க தெரியாதா, சாப்பாடு ஊட்ட தெரியாதா, அழுதா முழிச்சிக்கமாட்டாளா....அவளுக்கு அவ குழந்தைகிட்டே கோபத்தை காட்ட உரிமை இருக்கு. வேணுமின்னா குழந்தையை அடிக்க கூடாதுன்னு சொல்லிகொடுக்கலாம். அதைவிடுத்து குழந்தையை தன்னிடம் அடை காப்பது எல்லாம் தப்பு. கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா?....இதை பெரியவங்களும் யோசிக்கணும் .
நம்ம ஊர் பொண்ணுங்களை எவ்வளவுதான் மாடர்ன் டிரஸ்ஸில முக்கி எடுத்தாலும் ஒரு பட்டு சேலையை பார்த்தாலே போதும் நம்ம ஊரு ஒரிஜினல் குணத்துக்கு மாறி சாமி ஆடிருவாங்க....மருமக பொண்ணு வெளிய பார்க்கத்தான் ஜீன்சும் டாப்ஸ்ஸுமா இருப்பா. செல்லுலே இங்கிலீஷல தான் பேசுவா. எப்போ பார்த்தாலும் சிஸ்டம்லேதான் உட்காந்திருப்பா. ஆனா உள்ளே மற தமிழச்சியாகத்தான் இருப்பா. அதை மறந்துறாதிங்க...
உங்களுக்கு இருக்கும் பிடிவாதம், திமிர், கதை கட்றது, சண்டை பிடிக்கிறது, நக்கல் பேசுறது போன்ற பெண்களுக்கே உரித்தான அத்தனை குணங்களும் அவளுக்குள்ளும் இருக்கும். அதனாலே கொஞ்சம் பார்த்து நடந்துகோங்க....
கல்யாண வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெண்கள், மருமக வந்தா, மருமகன் வந்தா இப்படிதான் இருக்கணும்ன்னு ஒரு கோடு போட்டுக்காதீங்க. எப்போவும் எப்படி நாம இருப்போமோ அப்படியே இருங்க. பிடிச்சா உதவி செய்ங்க. இல்லேன்னா புதுசா கல்யாணம் ஆனவங்களை தொந்தரவு பண்ணாதீங்க.
அவங்களுக்கு தெரியும். எந்த சண்டைக்கு உங்களை உள்ளே கூப்பிடனும் என்று. பிள்ளையோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனுமதி இல்லாம அவங்க விஷயங்கள்ல தலையிடாதீங்க . விட்ருங்க.....அவங்களும் கொஞ்சம் முட்டி மோதி எந்திருச்சி வரட்டும்.....
அவங்களை கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு, இத்தனை வருஷம் தான் பிள்ளைகளுக்காக கஷ்டபட்டாச்சு....(எத்தனை பேர் கல்யாணம் ஆன உடனே பிள்ளையை பெத்துக்கிட்டீங்கன்னு தெரியாதா என்ன) இனிமேலாவது நாம நமக்கான வாழ்க்கையை வாழுவோம்ன்னு வாழுங்க. அதுலே நிம்மதியா இருங்க. சந்தோஷமா இருங்க. அதை விட்டுட்டு வீட்டுக்கு வாழ வந்த பிள்ளைகளை போட்டு பாடாபடுத்திக்கிட்டு.....
அவங்களுக்கும் வயசான பிறகு,
"ரெண்டு பேர் வேலைக்கு போயும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம்....50000 ரூபாய் சம்பளத்தில குடித்தனம் நடத்த...."
அப்படின்னு யோசிச்சு பார்க்க ஒரு பிளாஷ்பேக் வேண்டாமா......சொல்லுங்க பாப்போம்.....
இன்னும் எழுதுவேன்.........
nootril oru vaarthai.marumagalum oru jeeva raasi dhaane.avalukkum gobam dhavam undallava.
ReplyDeleteஉண்மைதான். இவங்க கொஞ்சம் விட்டு கொடுத்தா அவங்க நிறைய சந்தோஷமா இருப்பாங்க.....
ReplyDeleteவெளியுலக எக்ஸ்போஸர் அதிகம் இல்லாத அம்மா,மாமியார்களுக்கு...சூழ்நிலைகளுக்கும், மத்தவங்களுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகத் தெரியறதில்ல! அவங்களுக்கு இன்னமும் அந்த காலத்தை விட்டு நிகழ்காலத்துக்கு வர்றதுக்கே பிடிக்கிறதில்ல! அதிலும் துணையற்ற பெண்கள்னா..ரொம்ப சிரமம் தான்..ஒரு வகையில் பாவம் தான் அவர்கள்! தன் அனுபவத்தில் சொல்லப் போக..புது உறவுகள் அவரை சரிவர கையாளாமல் விடுவதால்..ஏதாவது செய்து விட்டு கன்டனத்திற்கு ஆளாகின்றனர்!
ReplyDeleteகுடும்பத்திற்கு பிரச்சனைகள் இவரால் இருக்கு..இருந்தாலும் பலம் இவர் தான்!
ரமேஷ் வெங்கடபதி....
Deleteஇப்போ பெண்கள் சமையல் செய்றாங்க...எங்கேயோ ஒரு புது வகை உணவை உண்டால் அதை உடனே செய்து பார்கிறார்கள்...அதில் update ஆகும் போது சமுக வாழ்வியலிலும் update ஆக வேண்டாமா...
இதை நிறைய பெண்கள் உணர்வதில்லை....அங்கேதான் பிரச்சனைகளும் ஆரம்பிக்குது.
அய்யயோ எங்க வீட்டுக்கு எப்ப வந்திங்க நீங்க, நீங்க சொன்னது எல்லாம் எங்க வீட்டுல நடந்த மாதிரியே இர்ருகே, டவுட்டு....
ReplyDeleteஉங்க வீட்டுல மட்டும் இல்ல...எல்லா வீட்டுலேயும் இதுதான் நடக்குது...
Deleteஎதார்த்தமான உண்மை.
ReplyDeleteம்ம்ம்....
Deleteவிட்டு கொடுத்தோர் கெட்டு போவதில்லை - வீட்டுக்கு வீடு வாசப்படி ஆக, என்ன சொன்னாலும் மண்டையிலே ஏற மாட்டேங்குதே
ReplyDeleteஎன்ன செய்ய....பாசத்தையும் நிஜ வாழ்க்கையையும் பிரித்து பார்க்க தெரிவதில்லை அவங்களுக்கு.....
Deleteஎல்லா அம்மாக்களும் அம்மாவா இருக்கும் வரை நல்லாத்தான் இருக்காங்க ஆனா பாருங்க மாமியார்ன்னு பதவி வந்ததும் அடேங்கப்பா - பெண்களின் சுய குணமோ??!!
ReplyDeleteஅப்படியெல்லாம் இல்லைங்க....எனக்கு தெரிஞ்ச சிலர் ரொம்ப அழகா இந்த பிரச்சனைகளை டீல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதனாலே குடும்பத்திலும் அவங்களை மரியாதையா நடுத்துறாங்க....
Deleteஅதீத பாசம் குடும்பத்தின் கழுத்துக்கு சுருக்கு கயிறுதான்....அதை இந்த மாதிரி பெண்கள் புரிந்து கொண்டால் சரிதான்....
Mikka arumai. Plan pannathu pola ethuvume nadakkathu. Sontha magal/magan vazhkaila prachinai vandhalum avanga kupidura varaikkum mookka nuzhaikka koodathu
ReplyDeleteநிஜமே....அந்த privacy யை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்....நாமளே எல்லாம் செய்து கொடுத்துகிட்டே இருந்து விட்டு, ரெண்டு பேருக்கும் பொறுப்பு பத்தாதுன்னு சொல்றது நல்லாயில்லை....
Deleteஅம்மாக்கள்னா கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்வாங்க.
ReplyDeleteமாமியாருன்னாலும் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்க
அம்மா + மாமியார் = பிரச்சனை...?
தொடருங்கள்..:)
அம்மா பையனா நீங்க?.....keep it up....
Deleteஎல்லாம் பழிக்குப் பழி தான்...
ReplyDeleteமகளாய் எற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்...
முன்பை விட இப்போது எவ்வளவோ மாறி விட்டது... மாற வேண்டும்...
தீர்வு : கல்வி...
கல்வி மட்டும் தீர்வாகாது தனபாலன்...
Deleteபடித்தவர்களும் இப்படிதான் நடந்து கொள்கிறார்கள். குணம்தான் மாற வேண்டும். மகளாக பார்க்கவேண்டாம். மகளாகவும் முடியாது. பர்சனல் விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே போதும்....
விக்கிரமாதித்தன் கதை போல மணல் குன்றின் மீது ஏறியதும் மாறிவிடுவது போல எல்லா பெண்களும் மாமியார் ஆனதும் மாறிவிடுவார்களோ கொஞ்சம் பயமாதான் இருக்கு நல்ல பகிர்வுங்க.
ReplyDeleteநன்றி சசி....நாம்தான் நம் குணத்தை கொஞ்சம் சரி பண்ணிக்கிட்டே இருக்கணும் பிரச்சனைகளை தவிர்க்க...
Deleteஎனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் குடும்பத்தில் திருமணத்திற்கு முன்பே ஒரே ஊரில் இருந்த
ReplyDeleteபோதும் மகனின் தனிக்குடும்பம் பற்றி யோசித்தனர் ,கேட்டதற்கு அவர்களுக்கு தனிமை அவசியம் விரும்பும்போது நம்முடன் இணையட்டும் என்றனர். நம் எண்ணங்களைத் திணிக்காதவரை எல்லாமும் இனிமைதான் வரும் தலைமுறை அதற்கு பழகிவிடும் என எண்ணுகிறேன் அகிலா.
கண்டிப்பாக...வளர்ந்துவிட்டால் சற்று பெரியவர்களாக அவர்களை நாமும் எண்ணுவதில் தவறில்லையே.....
Deleteநன்றி எழில்...