கரையோடு....
ஒழுகல்கள் அடைக்கப்பட்டு
சீராக்கி வலை திணிக்கப்பட்டு
மீனவர்களோடு கடலுக்குள் கட்டுமரம்...
ஆடும் அலைகளில் அதன் அசைவுகளில் ஆடி
வீசும் காற்றில் அதன் போக்கில் ஓடி
நம்பியவர்களை பத்திரப்படுத்தி
வலையுடன் மீன்களை சுமந்து
காரிருள் நெருங்கும் முன்
கரை நோக்கி விரைந்து
மீன்கள் கடைத்தெருவுக்கும்,
மீனவன் குடிலுக்கும் செல்ல,
கட்டுமரம் மட்டும் கரையில்
அலைகளோடு உரசிக்கொண்டு.....
இப்படித்தான் சொந்தமே!இங்கு எத்தனையோ கட்டுமரங்கள் இடைவெளிகளில்.அருமையான கரு .வாழ்த்துக்கள் !
ReplyDeleteஏணி மாதிரி.....நன்றி அதிசயா....
Deleteநல்ல கருப்பொருள்... கட்டுமரங்கள் கவனிக்கப்படுவதில்லை என்ற உருவகம் சிறந்த சிந்தனை...
ReplyDelete''வலையுடன் மீன்களை சுமந்து
காரிருள் நெருங்கும் முன்
கரை நோக்கி விரைந்து'' - சிறிய திருத்தம் சகோதரி... கட்டுமரங்கள் கரையேறுவது விடியலில்தான்...
ஆஹா....திருத்தத்திற்கு நன்றிகள்....
Deleteநல்ல கவிதை அக்கா அருமை!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி சகோ...
Delete// ஆடும் அலைகளில் அதன் அசைவுகளில் ஆடி
ReplyDeleteவீசும் காற்றில் அதன் போக்கில் ஓடி
நம்பியவர்களை பத்திரப்படுத்தி
வலையுடன் மீன்களை சுமந்து
காரிருள் நெருங்கும் முன்
கரை நோக்கி விரைந்து
//
அழகான வரிகள்
மிக்க நன்றி ராஜா.....
Deleteகொண்டு சேர்ப்பதற்கும் கொண்டு வருவதற்கும் கட்டுமரம்தான்... இதுவும் சில மனிதர்களைப் போலவே...
ReplyDeleteநிஜம்தான் நண்பா.....
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி கோவி.....
Deleteஅருமை!
ReplyDeleteஎன் நன்றிகள்...
Deleteதங்கள் ஆழமான சிந்தனையும்
ReplyDeleteஅற்புதமான கவிதை நடையும்
பிரமிப்பை ஏற்படுத்திப்போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
என் நன்றி ரமணி அவர்களே.....
Delete