வானை தொட்டு திரும்பினால் மட்டுமே
நிலவை நம் வசப்படுத்தினால் மட்டுமே...
உனக்குள் நான் தொலைந்தால் மட்டுமே
உரசல்கள் மன்னிக்கபட்டால் மட்டுமே...
மூடும் கண்களுக்குள் உறுத்தினால் மட்டுமே
மனதுள் தேடி தவித்தால் மட்டுமே...
உயிரின் துடிப்பை உணர்ந்தால் மட்டுமே
உருக்கும் இரவை மறந்தால் மட்டுமே...
சாத்தியபடாததை சாத்தியபடுத்தினால் மட்டுமே
சத்தியமாய் கனவில் வாழ்ந்தால் மட்டுமே...
காதல்......
மொட்டுக்கள் உடைய காத்திருந்தாலோ...
முடிச்சுகள் அவிழ பார்த்திருந்தாலோ...
மூச்சின் வெப்பம் உணர காத்திருந்தாலோ...
மொத்தமாக கரைய காத்திருந்தாலோ...
காதல் இல்லை....அக்மார்க் காமம் தான்...
அருமை அருமை
ReplyDeleteஇப்போதெல்லாம் ஆத்திகம் நாத்தீகத்தைவிட
காதலும் காமமுமே அதிகம் குழப்பப்படுகிறது
அனைவரும் குழம்பியும் தவிக்கின்றனர்
அதனை வேறுபடுத்திக்காட்டிய விதம்
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சரியாக சொன்னீர்கள்....இரண்டுக்கும் இடையில் வேறுபாடு தெரியாமல் காமம் தான் காதல் என்று குழம்பிக் கொள்கிறார்கள்....
Deleteஉங்களின் வாழ்த்துக்கு நன்றி, ரமணி அவர்களே....
அருமை தோழி
ReplyDeleteகாதலும் காமமும் சம விகிதத்தில் கலந்தால் மட்டுமே
வாழ்வு ருசிக்கும்
ஓன்று மிகையானாலும் குப்பையில் போடும் பண்டமாகிவிடும் .........
உங்கள் ரசனை ரசிப்பிற்குரியது
எங்கே சரி விகிதத்தில் கலக்கிறார்கள்?...ஓன்று மட்டுமே மிகையாகி கொண்டிருக்கிறது சரளா....
Deleteநன்றி....
”மூடும் கண்களுக்குள் உறுத்தினால் மட்டுமே
ReplyDeleteமனதுள் தேடி தவித்தால் மட்டுமே...”
அருமையான வரி. சிலபேருக்கு கனவு வரவே வராதாம். மனம் தேடினால் மட்டுமே உண்மையான காதல். நச்சுனு சொல்லிட்டீங்க.