படகு....
பயணத்தின் தூரம் அதன் சுமை எதுவும் தெரியாது...
பயணம் நீரின் மேலா உள்ளா என்பதும் தெரியாது....
சந்தோஷமான முகங்களை ஏற்றிச் சென்று
அப்படியே கரை சேர்ப்போமா சவமாய் சேர்ப்போமா
அதுவும் தெரியாது....
அப்படியே கரை சேர்ப்போமா சவமாய் சேர்ப்போமா
அதுவும் தெரியாது....
கடலின் ஆழம் அதன் விலங்குகள்
மோதும் பாறைகள் வீசும் புயல்கள்
எல்லாம் பயமில்லாமல் தாண்டலாம்....
சுடும் மனிதர்களை மட்டும் பயமில்லாமல்
தாண்ட முடியுமா என்பதும் தெரியாது....
ஈரமான பயணம் தான் ஒவ்வொரு முறையும்
உப்பு நீரா சிவப்பு நீரா என்பது மட்டும் தெரியாது....
பயணிக்க தயாராகிறது படகு.....
கவிதையின் மறை பொருளும்
ReplyDeleteஅதிகமான வற்றுடன் இணைத்துப்பார்க்கும்படியான
கழுகுப்பார்வை சிந்தனையும் பிரமிக்கவைக்கிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
என் நன்றிகள் உங்களுக்கு....
Deleteநல்ல வரிகள்..!!!
ReplyDeleteவருகைக்கு நன்றி...
Delete''..உப்பு நீரா சிவப்பு நீரா என்பது மட்டும் தெரியாது....''
ReplyDeleteபல கதைகள் கூறும் வரிகள் .
நல்வாழ்த்து.
அந்த வரியை மட்டும் உணரத்தானே முடியும்....
Deleteநன்றி....