இன்று உன் ஞாபகம்...
என்னைவிட இளையவனாய் பிறந்து
என்னை முந்தி, நீ மாய்ந்து
உலக வாழ்க்கை நிஜமில்லை என்று
எனக்கு நீ உணர்த்திய தினம்
என்னருகில் உன்னை அமர வைத்து
உன் தலையில் குட்டு வைத்து
கணக்கு பாடம் ஏற்றிய ஞாபகம்
கிரிக்கெட் மட்டையை ஒளித்து வைத்து
உன் அழுகையினுடே
உன்னை படிக்க வைத்த ஞாபகம்
சாலையில் நடந்து போகும் போது
எதையாவது வாங்கி வரச்சொன்னால்
என் கைபிடிப்பை விலக்கி, ஓடிப்போய் வாங்கிவந்து
மீண்டும் என் கைப்பிடிக்குள் நீ வந்த ஞாபகம்
உன் பயம் போக்க
என் பயம் மறைத்து
நடு இரவில் வீட்டை சுற்றிய ஞாபகம்
வண்டி ஒட்டவே தெரியாத
உன்னை துணை வைத்து
நான் கார் ஓட்ட
கற்றுக் கொண்ட ஞாபகம்
ஊருக்குள் ஓடிய வதந்தியை நம்பி
நீ எனக்கு பச்சை புடவை
எடுத்து கொடுத்த ஞாபகம்
இனி நீ என்றும்
என் ஞாபகத்தின் சுவடுகளில் தான்
நிஜத்தில் இல்லை
என்பதும் என் ஞாபகம்....
அருமையான வரிகள் கண்ணீரை வரவைத்தது தோழி.......
ReplyDeleteநன்றி சுதா...என் சோகம் பகிர்ந்ததற்கு....
Deleteஉருக்கமான வரிகள் அகில். நினைவுகள் என்றும் மறையாதவை. பாராட்டுகள்.
ReplyDeleteநல்வரவு என் பக்கம்.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி வேதா....
Deleteஇழப்பின் நினைவுகள் என்றுமே வலி தருபவைதான்...
உணர்வுகளின் குவியல்! நெஞ்சை தொட்ட கவிதை! அருமை சகோ!
ReplyDeleteநன்றி சகோ...
Deleteபகிர்வில் வலி குறைதல் உண்மை...
சோகம், இழப்புக்கு தான் தெரியும் இழப்பின் வலி உணர்ச்சி பொங்கிய வரிகளில் படைப்பு.
ReplyDeleteநன்றி....
Deleteசகோதரன்... உணர்வுக்குளியல்...
ReplyDeleteநன்றி சங்கவி....
Deleteநெகிழ்வு.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி...
Deleteவரிகள் கண்ணீரை வரவைத்தது சகோதரி!
ReplyDeleteunmaivrumbi.
Mumbai
சில சமயங்களில் இழப்புகள் நம்மை மிகவும் பலகீனமாக்குகின்றன....
Deleteநன்றி சகோ...
This comment has been removed by the author.
ReplyDeleteகண்ணீர்தான் பேசுகிறதுஇவலிமிக்க இறுதி...!:(
ReplyDeleteஆமாம்...அவன் இல்லாத இந்த உலகம் வலிதான்....
Deleteசத்யத்தில் நமக்கு முன் வரிசையில் உள்ளவர்களை விட நமக்கு பின் வரிசையில் உள்ளவர்கள் இழப்பு தாங்க முடியாதது ஏனெனில் நம் கைகளுக்குள் அவர்கள் வளர்ந்து இருப்பார்கள் நாம் அவர்களுக்கு வழி காட்டியாகவும் அவர்கள் நமக்கு பின் நடந்து அந்த தைரியத்தில் நாம் முன்செல்லவும் சிறிய வயதில் நம் கைபிடித்து நடந்த அவர்கள் நமக்கு கைத்தாங்கலாக ....அதில் ஒரு இழப்பு என்றால் நம்மால் தாங்க முடிவதில்லை உண்மையில் நினைத்து பார்க்கும் போது மனது கனக்கிறது ... நிஜத்தை விட நினைவுகள் கொடியவை ...
ReplyDeleteஉண்மைதான் ராஜன்....
Deleteஉறவுகளின் இழப்பு...
ReplyDeleteநம் நினைவு தகட்டில்
எழும் போதெல்லாம்
இன்பமும்..
துன்பமும்..
கலந்த கலவை.
அதனுடன் வலிகளும்....
Deleteநன்றி...