பெண்களை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு நம் வீட்டில் இருக்கும் ஆண்களை பற்றி எழுதலாமே. நாம் ஆண்களை சார்ந்தும் அவர்கள் நம்மை நம்பியும் தானே வாழவேண்டியிருக்கிறது. அதனால் இன்று என் பேனா மையில் ஆண்கள். பெண்களை வன்முறையில் அடிமைபடுத்தும் ஆண்களை பற்றி இங்கே எழுதவரவில்லை. அது அடுத்த வலையில்.
ஆண்கள் இரண்டு வகைப்படுவார்கள். முதல் வகை, கால்கட்டு போட்டாதான் சரியாவான் என்று பெரியவங்க சொன்னதிற்கு ஏற்ப கல்யாணம் முடிந்தவுடன் கட்டுபட்டியாகி மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவன். உண்மையா இல்ல வெளிவேஷமா என்பதை அவங்கவங்க விட்டுக்கார அம்மாகிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்.
இன்னொரு வகை ஆண்கள் கல்யாணத்திற்கு பிறகுதான் ரொம்ப முறுக்கிக் கொள்வார்கள். தொட்டதுக்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கிறது, திட்டுறது, குடும்பத்து ஆளுங்க முன்னாடியே நக்கலடிகிறது, இப்படின்னு எல்லாம் செய்வாங்க. ஆனால் உள்ளே பாசமா தான் இருப்பாங்க. அதனால் அந்த பெண்களும் இவங்க வெளியே செய்கிற அலம்பல்களை சகிச்சுக்குவாங்க.
முதல் வகை ஆண்கள் பார்க்க பாவமா பொறுப்பான குடும்ப தலைவனா இருப்பாங்க. யாராவது வாசலில் வந்து குரல் கொடுத்தால் கூட, உள்ளே திரும்பி, 'ஏம்மா, இங்கே வந்து பாரு...யாரோ (!) வந்திருக்காங்க...' என்பார்கள். 'இந்த சேரில் வைத்திருக்கும் துணியை எடுத்து கொடுக்கவா?' அப்படிம்பாங்க. வெளியே நிற்கும் துணி அயர்ன் பண்ணுபவன் 'இந்த வீட்டு ஐயா எவ்வளவு நல்லவரு, அந்த அம்மாவை கேட்காம எதுவும் செயயமாட்டருன்னு' நினைப்பான். நமக்கு தானே தெரியும் பப்பிர மிட்டாயி வாங்க எல்லாம் நம்மளை கேட்பாங்க. அவங்க தங்கச்சிக்கு காசுமாலை வாங்க எல்லாம் நம்மளை கேட்கமாட்டங்கன்னு...
நாம பேசிக்கிட்டே இருப்போம், ஏதோ ஒரு வேலை - பேப்பரோ, பைலோ பார்த்துகொண்டே 'உம்' கொட்டிக்கொண்டே இருப்பாங்க. ஏதாவது திருப்பி கேட்டால், 'என்ன சொன்னே' அப்படிம்பாங்க. இதுல சில பொம்பளைங்க வேற என் வீட்டுக்காரருக்கு என்ன சொன்னாலும் தலையிலே ஏறாது என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் பெருமை(!) பட்டுக்கொள்ளுவார்கள். ஆனா நமக்கு தெரியும், எல்லாம் அவங்க தலைக்குள்ளே தான் இருக்கும். யாரு எதை சொன்னாங்கங்கிற விவரம் மட்டும் சரியா database ல லிங்க் ஆகியிருக்காது.
அதுமாதிரி ஏதாவது டிஸ்கஸ் பண்ணும் போது உங்களுக்கு தோன்றும் புத்திசாலிதனமான ஐடியாவை எல்லாம் முதலிலேயே சொல்லாதீங்க. ஆண்களின் மனதுக்குள் கருத்து மட்டும் தான் போகும், யார் சொன்னார்கள் என்பது போகாது. நாம சொன்ன விஷயமே அவங்க சொன்னதா வெளியே சொல்லிக்கிட்டு அலைவாங்க.
சரி, யாருக்கு பெருமை சேர்ந்தால் என்ன என்று இருக்கலாம் தான். அப்புறம் வீட்டில் நமக்கு என்ன மரியாதை இருக்கும். அதனால், ரெண்டு ரவுண்டு டிஸ்கஷன்க்கு அப்புறம் சொல்லுங்க....'ஆஹா நல்ல ஐடியா....உனக்கு தான் இப்படி எல்லாம் சரியாய் தோணும்...' இந்த டைலாக் கேட்டபின்தான் ஓகே ன்னு இருக்கலாம். சில ஆண்கள் சொல்லுவாங்க தெரியுமா, ' என் மனைவி மாதிரி யோசனை சொல்ல யாராலேயும் முடியாது' என்று. அந்த ஆம்பளைங்க பின்னாடி இந்த மாதிரி பெண்கள் தான் இருப்பாங்க.
பெண்கள் எப்போதுமே உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். ஒரு விஷயம் கேள்விப்பட்ட உடனே படபடவென பொரிந்து தள்ளி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, மாமியார், நாத்தனாருடன் எல்லாம் சண்டை போட்டு, ஒரு சினிமா ஓட்டிவிடுவார்கள். அதில் குளிர் காய்ந்து, அந்த படத்தை ஐம்பது நாள் ஓட்டிவிடுவார்கள் நம் ஆண்கள். இதை புரிந்து கொள்ள முடியாமல் நம் பெண்கள் இன்னும் அழுது பிரச்சனையை பெரிதுபடுத்தி, அதை நூறாவது நாள் விழா எடுக்க வைத்து விடுவார்கள்.
பல சமயங்களில் பிரச்னை நடக்கும்போது பெரும்பாலான ஆண்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம் என்றும், விஷயம் தானே நிதானப்பட்டுவிடும் என்றும் நினைப்பாங்க. அதுவே நம் பெண்கள் உடனே அது தீர்க்கப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பாங்க. இது இரண்டுமே நடக்காது. அதை தீர்க்க ஆண்கள் முயற்சிக்கவே மாட்டாங்க. அப்போது அந்த பெண்களின் மனதில் தன் கணவன் தன்னோட பிரச்னையை தீர்க்கவில்லை என்பது ஒரு பெரிய வடுவாக தங்கிவிடும். எத்தனை வருடம் கழிந்தாலும் யானை மாதிரி நினைவில் வைத்து பழிவாங்குவார்கள் பெண்கள்.
அதனால் எப்போவும் வீட்டில் சண்டை லைவ்வா நடந்துகிட்டே இருக்கும். சில மணி துளிகள் அல்லது சில நாட்கள் கழித்தாவது அந்த பிரச்சனையை அலசி ஆராய்ந்து சரிபண்ண வேண்டும் ஆண்கள். விட்டுவிட்டு நகர்வது என்பது மிக மூர்க்கமான செயல். அப்படிப்பட்ட ஆண்கள் இருக்கும் வீட்டில் பெண்கள்தான் முயற்சி செய்து உறவுகளுக்கிடையே தோன்றும் விரிசல்களை சரிசெய்ய வேண்டும்.
அடுத்ததாக, ஆண்கள் செய்யும் பெரிய காமெடி என்னன்னா...அவங்க சொந்தத்தில் இருந்து யாராவது வீட்டுக்கு வராங்கன்னா, 'உனக்கு தெரியாததா...நீயே பார்த்துக்கோ' என்று ரொம்ப சமர்த்தாக சொல்வார்கள். நம்பவே நம்பாதீர்கள். இது சமர்த்து இல்ல சாமர்த்தியம்....நாளைக்கு ஏதாவது குறைன்னா ஆள்காட்டி விரலை அழகாக நம் பக்கம் திருப்பிவிடுவார்கள்.
யாராவது அவங்க பக்கம் இருந்து உறவுக்காரங்க, 'கல்யாணத்துக்கு வந்தேன்', 'ஆஸ்பத்திரிக்கு வந்தேன்', 'சாவு வீட்டுக்கு வந்தேன்'னு சொல்லிக்கிட்டு நம்ம வீட்டுக்கு ஒரு எட்டு எட்டி பார்க்க (tour package... i.e...two days and a night) வருவாங்க. அதில் ஒருத்தி 'அண்ணே' அப்படிம்பா, இன்னொரு நண்டு 'மாமா' ங்கும், இன்னொன்னு 'சித்தப்பா' ங்கும். நம்ம வீட்டு ஐயா அப்படியே உருகிருவாங்க.
ஏகப்பட்ட கதை பேசி நம்ம வீட்டு விஷயத்தை நம்ம வீட்டு ஆம்பளைங்க (நாம சொல்ல மாட்டோம்னு தெரியும்) வாயிலிருந்தே பிடுங்கி ஊரில போய் மைக் கட்டி ஒலிபரப்பிருவாங்க. அந்த ஊர் தமிழ்நாட்டில ஒரு கோடியில இருக்கும். அது அப்படியே திருச்சி, தஞ்சாவூர், சென்னைன்னு 'செல்'லுல இல்லைன்னா பஸ்ல ஒரு ரவுண்டு அடித்து கடைசியில் நம்மகிட்டேயே 'இப்படியா நடந்துச்சு?' என்ற கேள்வியுடன் வந்து நிற்கும். அதனால் பெண்களே யாராவது ஊரிலிருந்து வந்தா வாயடக்கம் (நம்ம விட்டு ஆம்பளைங்களின்) ரொம்ப முக்கியம்.
அது மாதிரி அவங்க சைடில் இருந்து யாரவது போன் பண்ணுன விஷயத்தை அவங்க சொல்லும் போது, 'அவளுக்கு எவ்வளவு திமிரு' என்று இடையிடையில் கமெண்ட் கொடுத்தால் அவங்க உஷாராகி சொல்ல வந்த விஷயத்தை மறைச்சிருவாங்க. கொஞ்சம் பொறுமையா இருந்து முழுசா கேளுங்க. அப்படி நாம கேட்டும் போதும் அவங்களுக்கு டவுட் வரும் 'என்னடா கத்தாம கேட்டுகிட்டு இருக்கானு' நம்ம முகத்தை ஒரு லுக் விடுவாங்க. உள்ளே எவ்வளவு BP raise ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் முகத்தில் கதை கேட்கிற ஆர்வத்தை தக்க வைத்துக்கொண்டு விவரம் கேட்கனும். கொஞ்சம் பொறுமையும் புத்திசாலித்தனமும் இருந்தால் ஆண்கள் எப்போவும் நம் கைக்குள்தான்.
அப்புறம் ரொம்ப பொது நலவாதியா காமிச்சுக்குவாங்க. ஆட்டோகாரருக்கும் நமக்கும் வாக்குவாதம் என்றால், துணிஞ்சு ஆட்டோக்காரரை சப்போர்ட் பண்ணுவாங்க. காய்கறிக்காரனை, பால்காரரை இப்படி வர்றவங்க போறவங்க எல்லோரையும் சப்போர்ட் பண்ணுவாங்க, நம்மளை தவிர. பார்க்கிறவங்க கண்ணுக்கெல்லாம் அவங்க காந்தியாவும் நாம கோட்சேயாவும் மாறியிருப்போம்.
இரண்டாவது வகை ஆண்களுக்கு, தான் ஆண் என்கிற ஆணவம் அதிகம் இருக்கும். அவங்க வீட்டு பொம்பளைகளை அடிமை மாதிரி வைத்திருப்பார்கள். காலையில் பிரஷ்ஷிலிருந்து குளிக்க சோப்பு, டவல், கர்சீப், சாக்ஸ், ஷு, வண்டி சாவி எல்லாம் அவர் கைக்கு வந்துகிட்டே இருக்கணும். எங்க சொந்தத்தில ஒரு அம்மா இப்படிதான் அவர் முன்னாடி ஒவ்வொன்னா கையில ஏந்திகிட்டே நிப்பாங்க. பார்க்க பரிதாபமாக இருக்கும். அவர், 'அவளை தவிர யாராலும் என்னை சமாளிக்க முடியாது' என்று எல்லோரிடமும் பெருமைபட்டு கொள்வார்.
ஆண்கள் ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். கலயாணம் ஆன புதிதில் நம்ம கூட உரசிகிட்டே வருவாங்க. கைல ஒன்னு, இடுப்புல ஒன்னு பத்து வருஷம் ஓடிரும். அதுக்கு அப்புறம் வரக்கூடிய பத்து வருஷமும் default. அதாவது தானே அட்ஜஸ்ட் ஆகணும்னு நினைப்பாங்க. அப்போதான் அவங்க சம்பாதிக்க ஓடிக்கிட்டே இருப்பாங்களாம். அடுத்த பத்து வருஷம் திருப்பி நம்மகிட்டே வந்து ஒட்டுவாங்க. பிள்ளைங்க கல்யாணம் எல்லாம் இருக்கே. விவரமாதான் இருப்பாங்க....அதனால் இந்த மூன்றாவது பத்து வருஷம் முதல் இருபது வருஷத்தின் 2 volume புத்தகத்தோட தொகுப்புதானே தவிர, அது தனி 3 volume இல்லை.....அதனால் 30 வருஷம், 40 வருஷம் என்பதெல்லாம் volume ஆ இல்லை வெறும் தொகுப்பா என்கிறது நம்ம கிட்டதான் இருக்கு.
எழுதினா எழுதிக்கிட்டே இருக்கலாம். எங்கே போக போறோம். அடுத்த எபிசொட்டில் பார்ப்போம்.
டிஸ்க் : இதை படித்துவிட்டு யாரும் இதெல்லாம் என் சொந்த கதை, சோக கதைன்னு எல்லாம் நினைக்காம இருந்தா, நான் ரொம்ப சந்தோஷபடுவேன்...நிறைய பெண்களிடம் கதை கேட்டதால் வந்த வினைதான் இந்த பதிவு....அவங்கவங்க மனசாட்சிக்கே தெரியும் இது உண்மையா பொய்யான்னு...ஆளை விடுங்க சாமி....
டிஸ்க் : இதை படித்துவிட்டு யாரும் இதெல்லாம் என் சொந்த கதை, சோக கதைன்னு எல்லாம் நினைக்காம இருந்தா, நான் ரொம்ப சந்தோஷபடுவேன்...நிறைய பெண்களிடம் கதை கேட்டதால் வந்த வினைதான் இந்த பதிவு....அவங்கவங்க மனசாட்சிக்கே தெரியும் இது உண்மையா பொய்யான்னு...ஆளை விடுங்க சாமி....
:)
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete:)ஃஃஃஇவளவு இருக்கா???நான் சின்னபிள்ள...!மீ எஸ்கேப்.....!
ReplyDeleteஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!
ஹாஹா....நன்றி அதிசயா....
Deleteஆண்களை மிக நல்லாகவே புரிந்து வைத்திருக்கீறிர்கள் போல இருக்கிறது. இப்போது உங்க வீட்டுகாரரை நினைத்தால்தான் பாவமாய் இருக்கிறது. ஹூம்ம்ம்ம்ம்
ReplyDeleteஇப்படி சொல்லுவிங்கன்னு தெரிஞ்சா முதலிலேயே Disc போட்டிருப்பேன்....பரவாயில்லை, இப்போ படிச்சிருங்க.....
Deleteநிறைய உண்மைகளை சொல்லிவிட்டீர்கள். மனைவியை அமரவைத்து வீட்டு வேலைகள் செய்யும் ஆண்களும் இருக்கிறார்கள்தானே..
ReplyDeleteவிதிவிலக்குகள் எல்லாவற்றிலும் உண்டே விச்சு...நன்றி...
Deleteநல்லா ஆராய்ச்சி பண்ணி எழுதி இருக்கீங்க, எதையும் மறுக்க முடியாத உண்மை.
ReplyDeleteநன்றி ஆனந்தி....
Deleteநல்லா ஆராய்ச்சி பண்ணி எழுதி இருக்கீங்க, எதையும் மறுக்க முடியாத உண்மை.
ReplyDelete