அதிகாரமான பெண்கள்....
இதே பெயரில் உள்ள பழைய 'பூவா தலையா' படத்தை எத்தனை தடவை டிவி யில் பார்த்திருப்போம். அந்த படத்தை நினைத்தாலே முதலில் மனதுக்கு வருவது அதிகாரம் பண்ணும் அந்த பர்வதம்மாள் (வரலக்ஷ்மி) கதாபாத்திரம் தானே. அவங்க எவ்வளவு அழகா அதிகாரம் பண்ணுவாங்க. அதிகாரம் பண்ணும் பெண்கள் ஒரு அழகுதான்.....
சும்மா ரோட்டில் நடக்கும் போது சுத்தும் முத்தும் பார்த்தாலே தெரியும். மேல் மட்டமோ கீழ்மட்டமோ எத்தனை பெண்கள் அதிகாரமா அலைவாங்க தெரியுமா....மார்க்கெட்டு உள்ளே போய் பாருங்க, 'இவ எங்கடி போனா, நீ வந்து அவ கடைல இருக்கே....ஏய் மல்லிகா, இவளே....உன் கடைல இவ இருந்தா, அவ கடையை யாரு பார்ப்பா...சின்ன கிழவியா...' என்று அதிகாரம் பண்ணும் பொம்பளையை பார்க்கலாம்.
எங்க ஊருல எனக்கு தெரிஞ்ச ஒரு அம்மா சாவி கொத்து இடுப்பில் சொருகி பந்தாவா அலையும். எப்படியும் பீரோவுக்குல ஒரு 200 பவுனாவது தேறும். பொண்ணுங்களை எல்லாம் கட்டி கொடுத்த பிறகு ஒரு 20 பவுனுதான் உள்ளே இருந்திருக்கும். ஆனாலும் பந்தாவை விடாம நடப்பாங்க. சாவி கொத்துன்னா சாதாரணமா இருக்காது.
அவங்க விசாலமான இடுப்புல அதுவும் விசாலமா இருக்கும். பெரிய பூ மாதிரி டிசைன் போட்டிருக்கும். அவங்க நடக்கும் போது ஜங் ஜங் ன்னு சத்தம் கேட்கும். வீட்டை விட்டு வெளியே போகும் போது யார் கண்ணுலயும் சாவி கொத்து உறுத்தாம இருக்க, அதுக்கு மேல ஒரு பெரிய கைக்குட்டையை நாலாய் மடித்து இடுப்பில் சொருகி இருப்பாங்க...அவங்க இறந்தப்போ அதே மாதிரி ஒரு சாவிகொத்து செய்து கைக்குட்டையை மடித்து சொருகிதான் அவங்களை காட்டுக்கே அனுப்பினாங்க. கடைசி வரை அதிகாரமா அழகாவே இருந்தாங்க.
ஒரு தடவை சென்னையில் உள்ள landmark கடைக்கு போயிருந்தேன். ஒரு பெண்மணி ஒரு சின்ன பையனை வேலைக்காரன் cum கைத்தடியாக கூட்டிவந்திருந்தார். அவன் பொருட்கள் எடுத்து வைக்கும் கூடையை தூக்கி கொண்டு பின்னாடியே செல்ல, இந்த அம்மா அவன் பத்தாது என்று, அங்கு கடையில் இருக்கும் இன்னும் இருவரை அழைத்து, 'இந்த பைலை எடுப்பா, அந்த நோட்புக்கை எடு, என்னால் குனிய முடியாது....'என்றெல்லாம் ஏக பந்தா....
நான் வெளியே வரும்போது பார்த்தால், அந்த அம்மா அவரோட டிரைவர் கிட்டே கத்திக்கிட்டு இருந்தாங்க. 'உனக்காக wait பண்ணிக்கிட்டு இருக்கேன்...எங்கே போனே' என்று. அவன் அதற்கு கூலாக, 'வீட்டுக்கு தானே போகணும்...ஏதோ பெரிய ஆபீஸ்க்கு போற மாதிரி...' என்று கூறினான். வெளிய இவ்வளவு பந்தா பண்ற அவங்களுக்கு வீட்டில் மரியாதையே இல்லை என்பது தெரிந்தது. இப்போ அவங்களை பார்த்தா அதிகாரமா தெரியலை...பாவமாக தெரிந்தது....
என் தோழி ஒருத்தி இருக்கா. எப்போவுமே சேலை முந்தானை float ல - அதாவது pleats வைக்காம - விட்டுருப்பா. சேலை முந்தானையின் ஓரத்தை இந்த பக்கமாக சுத்தி பிடிக்கவும் மாட்டா. அது தரை எல்லாம் பெருக்கிகிட்டே வரும். குண்டா இருக்கிறதுக்கு pleat வைச்சா நல்லா பந்தாவா இருக்காதுன்னு சொல்லுவா. நாங்க friends எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டா.
ஒரு தடவை ரிசப்ஷன் ஒன்றுக்கு போயிருந்தோம். இதே மாதிரி ஸ்டைலா அலைஞ்சிகிட்டு இருந்தா. மேடைக்கு போய் மணமக்களை வாழ்த்த போனோம். மேடையின் மேல் படிக்கட்டு ஏறும்போது பின்னால் வந்த பெண்மணி இவளின் தரையில் கிடந்த சேலையின் மீது கால் வைத்திருக்க, இவள் மேலே நகர, சேலை இழுத்து கீழே விழுந்துட்டா. ரொம்ப கஷ்டமா போச்சு. கைல அடி வேற. ஒரு வாரம் கைகட்டோட கஷ்டப்பட்டா. இப்போ ஒழுங்கா முந்தானை ஓரத்தை கைக்குள்ளே பிடிச்சிகிட்டு போறா. ஆனாலும் சேலை எப்போவும் போல float தான்.....அதிகாரமா ஸ்டைலா...மாத்தவே முடியாது அவளை....
ஆனா அதிகாரம் பன்றவங்க எல்லாம் ஆணவம் பிடிச்சவங்கன்னு அர்த்தம் இல்லை. அவங்களும் சாதாரணமானவங்க தான். என்ன கொஞ்சம் பந்தா பண்ணுவாங்க. அதுகூட ஒரு அழகுதான்.....
- இன்னும் எழுதுவேன்
நம்மை பற்றி எழுதினா இன்னும் பல அத்தியாயம் தேவை என்று உணர்ந்து எழுதறீங்க போல அருமை நானும் பார்த்தேன் என்னதான் சொல்ல வராங்கன்னு கடிசிவரை அந்த படத்தில் ஒன்னுமே சொல்லவில்லை .........சரியான பதிவு செய்யபடாத படம் தலைப்பை தவிர
ReplyDeleteஅந்த 'பூவா தலையா' படத்தை தொடர்ந்து முழுசா வேற பார்த்திங்களா.உங்களுக்கு ஒரு பெரிய கோவில் கட்டி கும்பிடலாம்....முழுசா பார்த்த உங்களுக்கே புரியலைன்னா, விட்டு விட்டு பார்த்த எனக்கு எப்படி புரியும்....
Delete//சரியான பதிவு செய்யபடாத படம் தலைப்பை தவிர// உண்மைதான்....
நன்றி சரளா...
சகோ, பெண்கள் பலவிதம் சரி சொல்லுங்கோ தெரிஞ்சுக்குறோம்
ReplyDeleteஇன்னும் எழுதுறேன்....தெரிஞ்சிக்குங்க....
Deleteநன்றி...
எல்லா பெண்களுமே நல்லவங்கதான்!ஒவ்வொரு விதத்துல அழகானவங்க தான்! ஆனா பாருங்க.. மத்தவங்க கண்ணோட்டம் தான் சரியில்ல!
ReplyDeleteஎங்களை நல்லவங்க, அழகானவங்க சொன்னதுக்கே உங்களுக்கு நன்றி.....
Deleteமனதின் ஆழத்தில் உள்ள தாழ்வு மனப்பான்மைதான் அவர்களை பந்தா என்ற முகமூடிக்குள் பதுங்கச் செய்கிறதோ என எண்ணுகிறேன். நான் பார்த்த சில பந்தா பேர்வழிகளிடம் நன்கு பழகிய பின் உணர்ந்தது இது சரியா தோழி.
ReplyDeleteநூற்றுக்கு நூறு சரிதான்....அந்த பந்தாவை கழிச்சிட்டா ஒண்ணுமே இல்லாதவங்களா தான் இருப்பாங்க...
Deleteஉங்கள் பதிவு என் பெரியம்மாவை ஞாபகப்படுத்தியது.நன்றி.
ReplyDeleteஅப்போ நிறைய பேர்க்கிட்டே அந்த சாவிகொத்து பழக்கம் இருக்கிறது போல...நன்றி.....
Deletegood
ReplyDeletetnanx friend...
Deleteசாவிக்கொத்து பந்தா பேர்வழிகளை நானும் பார்த்திருக்கிறேன். பெண்களில் இவர்களும் ஒரு ரகமோ!
ReplyDeleteஇன்னும் நிறைய ரகத்தில் இருக்கிறார்கள்...வெறுக்கும்படியாக இல்லை...ரசிக்கும்படியாக....
Deleteபெண்களைப் பற்றிய நீங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டுதான் நான் பெண்களை காதலிக்க போறேன்...ஹீ.ஹீ. சீக்கிரமா எல்லா பதிவுகளையும் போட்டுவிடுங்கள்
ReplyDeleteஎதுக்கும் உங்க வீட்டம்மா காதுலையும் இதை போட்டு வைக்கலாம்னு பாக்கிறேன்...எதுக்கும் ஒரு safety க்குதான்....
Deleteபெண்கள் என்ன செய்தாலும் அழகுதான் ...
ReplyDeleteரசிங்க..வரவேற்கிறோம்....
Deleteமுகமூடி அணிய சில சமயம் நிர்பந்திக்கவும் படுகிறார்கள் பெண்கள்...
ReplyDeleteநல்லாணிருக்கு தொடர்ந்து எழுகதுங்க சொந்தமே படிச்சிட்டே இருப்பம்..சந்திப்போம்.
அன்புடன் அதிசயா
காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!
அதுவும் உண்மைதான்....அப்போதானே நெருங்க முடியாதவர்களாக இருக்கமுடியும்...நன்றி அதிசயா...
Deleteதிமிர் பிடித்த பெண்களும் அதிகார போதையில்தான் இருக்கின்றனர்
ReplyDeleteபெண்கள் எது பண்ணினாலும் அழகு தாங்க அகிலா... உங்கள் பதிவைப்போல!!!
ReplyDeleteஹாஹா...நன்றி அருணா...
Deleteநானும் கண்டேன் இப்படியான பந்தாவான பெண்களை.நீங்கள் சொன்னது போலவே சிரலுக்கு இந்தபந்தா தான் அழகு.விரலுக்கு சிரிப்பாக இருக்கும்.நல்லா அவதானித்துள்ளீர்கள.
ReplyDeleteவாழ்த்துக்கள்.