சுகங்கள்...
கதிரவனே நான்தான் என்னும் சில விடியல்கள்
காப்பிகோப்பையுடன் பால்கனியில் சில விடியல்கள்
கனவுகளின் தாக்கத்துடன் சில விடியல்கள்
தூக்கம் சுகம் என்னும் சில விடியல்கள்
தூக்கம் கெட்டு தலைவலியுடன் சில விடியல்கள்
முன்றைய நாளின் முறைப்புகளுடன் சில விடியல்கள்
மனக் கசப்புகளுடன் சில விடியல்கள்
புரியாத உணர்வுகளுடன் சில விடியல்கள்
புரியவைக்கும் முயற்சிகளுடன் சில விடியல்கள்
புன்சிரிப்பை எதிர்பார்த்து சில விடியல்கள்
விடியுமா என்ற கேள்விக்குறியுடன் சில விடியல்கள்
விடிந்தால்தான் உண்டு என்று சில விடியல்கள்
இன்று விடிந்தது எப்படி என்று இன்றே பார்போம்...
இன்று புதிதாய்ப்ப் பிறந்தோம் என்கிற
ReplyDeleteபாரதியின் செவ்வரிகளை நினைவுறுத்திப் போகும்
அருமையான பதிவு
ஒரே நதி நீரில் இருமுறை குளிக்க
எவருக்கும் சாத்தியமில்லை என்பது போல
இன்றைய காலைப் பொழுதைவாழ் நாளில்
என்றும் சந்திக்க சாத்தியமில்லை தானே ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
// ஒரே நதி நீரில் இருமுறை குளிக்க
Deleteஎவருக்கும் சாத்தியமில்லை என்பது போல
இன்றைய காலைப் பொழுதைவாழ் நாளில்
என்றும் சந்திக்க சாத்தியமில்லை தானே ?///
உண்மைதான்....இன்றைய பொழுது இன்றைக்கு மட்டும்தானே....
இன்றைய விடியல் இன்றோடு - நித்தம் வரும் வித விதமாக விடியல்கள்,.... சரியா சொன்னீங்க சகோ
ReplyDeleteஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு நாளும் நம்முள் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.நன்றி...
Deleteகம்மாக் கரையில் காத்துவாங்க குளிச்ச விடியலைத் தேடுகிறேன் சகோ . அருமை .
ReplyDeleteலிஸ்ட்ல சேர்த்திருவோம் சசி....
Deleteஎல்லோருக்குமான நல்லதொரு மனமகிழ்ச்சியான விடியல் கொஞ்சம் கஷ்டம்தான். முந்தைய இரவின் சோகம் விடியும்போது சிலருக்கு மறக்கவும் செய்யும். அழகான விடியல் கிடைக்க பழசெல்லாம் மறந்தால்தான் உண்டு.
ReplyDeleteதினமும் இன்பமான விடியல் கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்...நன்றி விச்சு...
Deleteமிக ரசித்தேன்..
ReplyDeleteநன்றி நண்பரே....
Deleteஅகில் இதே வலை வேட் பிறெஸ்லும் உள்ளதா? நான் ஒரு கருத்துப் போட்டேனே , அது அங்கே உள்ளதா?. நல்ல கரு உள்ள கவிதை. நல்வாழ்த்து. சகோதரி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
same vedha.....thanx...
Deleteநல்ல விடியலை எதிர்பார்க்கும் அழகான கவிதை. பாராட்டுக்கள்.
Deleteநன்றி கோபாலகிருஷ்ணன் அவர்களே...
Delete