Skip to main content

நம்ம ஊரு BSNL.....


நம்ம ஊரில இருக்கிற கவர்மென்ட் ஆபீஸ் பக்கம் கொஞ்சம் போனீங்கன்னா தெரியும், தினமும் வேலைக்கு போய்வருகிற அலுவலகத்தை ( அந்த ஆபிஸ் இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடிதான் நம்ம வரிப்பணத்தில கட்டினதா இருக்கும் ) எப்படி கேவலமாக வைத்திருப்பது, உட்கார்ந்திருக்கிற நாற்காலிக்கு பக்கத்தில் ஒரு மலை மாதிரி குவியலா, குப்பை மாதிரி பைல்களை எப்படி சேர்த்து வைக்கிறது, கரண்ட் போச்சுனா அதுலேருந்து ஒன்றை உருவி எப்படி விசிறியா பயன்படுத்திறது, வேலையே பார்க்காம, customer வந்ததைக் கூட கவனிக்காம எப்படி ஆபீசுக்குள்ளேயே சுத்துறது அப்படின்னு எல்லாம் நமக்கு சொல்லிக் கொடுப்பாங்க...

நம்ம ஊரு BSNL ஆபீசுக்கு போகிற நிலைமை எனக்கு வந்துச்சு....என்னன்னா....நான் ஒரு புது செல் வாங்கி அதுல என்னோட BSNL சிம் கார்டு ஒண்ணை போட்டேன். அதுக்கு இந்த GPRS, WAP, MMS.....இப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் சேர்க்க வேண்டுமே. நானே நெட்லே இருந்து செட்டிங்க்ஸ் எல்லாம் சேர்த்துவிட்டேன். (http://forumz.in/174-cellone-excel-gprs-edge-settings-all-major-handsets/).

வேலை முடிஞ்சுதுன்னு பார்த்தா, மெயில் update ஆகுது ஆனா நெட் மட்டும் வேலை செய்யலை....நானும் settingsல APN எல்லாம் மாத்தி பார்த்தேன்...ஒண்ணும் வேலை செய்யலை...சரி நம்ம BSNL க்கு போன் பண்ணி கேட்டா அவங்க ஆபீசுக்கே கொண்டுவர சொன்னாங்க. நான் எங்க ஏரியாவில இருக்கிற ஆபீசுக்கு என் செல்லோட போனா அங்கே ஒரு பெரிய போர்டு என் கண்ணுல பட்டுது.






நம்ம வாய் சும்மா இருக்காதே....எங்க ஏரியா புதுசா உண்டானது, அதனால் BSNL landline connection இன்னும் இல்லை...இந்த போர்டை பார்த்ததும் அதை பற்றி கேட்டேன். கஸ்(ஷ்)டமர் கேரில் உட்கார்ந்திருந்த அந்த பெண்மணி 'நீங்க முதலில் landline phone க்கு அப்பிளிக்கேஷன் கொடுங்க...நாங்க போன் கொண்டு வைப்போம். அப்புறம் வந்து நெட் (broadband) கனெக்ஷனுக்கு எழுதி கொடுங்க.' சொன்னாங்க.

நான் அந்த போர்டை காமிச்சு broadband புக் பண்ணினா, நீங்க landline free ன்னு போட்டு இருக்கீங்களே...நான் அப்போ broadbandயே புக் பண்ணிக்கிறேனே' என்று கேட்டேன்...அதுக்கு அவங்க 'ஏங்க இதெல்லாம் இங்கே இல்ல...சென்னை, பெங்களுரூ மாதிரி பெரிய சிட்டிக்கு தான்' அப்படின்னு சொன்னாங்க. நான் சும்மா இல்லாம, 'அப்போ ஏன் இங்கே போர்ட் வச்சிருக்கீங்க...எடுத்திருங்க...' என்று சொல்ல அவ்வளவுதான் என்னை முறைச்சு பார்த்து, 'உங்களுக்கு என்ன வேணும்' ன்னு கேட்டாங்க....ஐயோ நம்ம வந்த மேட்டரை மறந்திட்டோமேன்னு அதை சொன்னேன். ஏற்கனவே இருந்த கடுப்பில இங்கே எல்லாம் அதை பார்க்க முடியாது. கலெக்டர் ஆபிஸ் பக்கத்தில இருக்கிற எங்க ஆபிஸ் போய் கேளுங்கன்னு சொல்லிட்டாங்க....வேற வழி....இதுதான் வாய் கொழுப்பு....

சரின்னு அங்கே போய், முன்னாடி உட்கார்ந்திருந்தவரிடம் கேட்டால், 'அந்தா இருக்காரே ஒரு ப்ளூ கலர் சட்டை போட்டுக்கிட்டு அவர்கிட்டே கேளுங்க'...ஓகே...அங்கே போயாச்சு....

அவர், 'அதோ அங்கே ஓயிட் சுடிதார் போட்டிருக்காங்களே அவங்களை கேளுங்க' என்றார்....ஓகே...அங்கேயும் போயாச்சு...

அந்த அம்மா,' உட்காருங்க, ஒரு ஐந்து நிமிடம்...' என்று இங்கேயும் அங்கேயுமாக நடக்க போய்ட்டாங்க. அப்புறம் வந்து விஷயத்தை கேட்டுவிட்டு, 'அந்த கிரீன் சாரி கட்டி இருக்காங்களே அவங்க கிட்டே போங்க'...போயாச்சு....இப்படியே ஒரு அரை மணி நேரமும் போயாச்சு....

அடுத்தது ஒரு ரெட் ஷர்ட் போட்டவர்....அவர் மேஜை முன் அமர்ந்தேன். அவர் இன்னொருவருக்கு ஏதோ சொல்லி கொண்டிருந்தார். என்னிடம் விஷயம் கேட்டு வெயிட் பண்ண சொன்னார். ஒரு பத்து நிமிடம் காவல். நான் அதற்குள் என் செல்லில் மறுபடியும் APN எல்லாம் மாற்றி பார்த்து கொண்டிருந்தேன்....

என்ன ஒரு ஆச்சரியம்...நெட் வேலை செய்தது.....ஆஹா...BSNL ஆபிசுக்குள் வந்தால் தான் அவங்க நெட்வொர்க் வேலை செய்யும் போல.....அவர்கிட்டே சொன்னேன்....'கரெக்ட் ஆகிடுச்சா....' அவருக்கு ஒரே சந்தோசம். நம்ம கை வைக்காமலே நம்ம நெட்வொர்க் வேலை செய்யுதே, நம்ம ஆபிஸ் ராசி என்று....நல்ல வேளை....என்ன செய்து சரி பண்ணுனீங்கன்னு என் கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்காம விட்டாங்களே, அதுவரைக்கும் ஓகே தான். ஓடியே வந்துட்டேன்..... 

Disc :
இது வெறும் என்னோட அனுபவம் தான். அதுக்காக நம்ம BSNL ஆபிசுல இருப்பவங்க எல்லாம் இப்படித்தான்னு நீங்க யாரும் முடிவுக்கு வந்திடக்கூடாது.....
BSNL Logoவை பாருங்க....Indiaவையே Connect பன்றாங்க...பார்த்து...escape.....  



Comments

  1. கலெக்டர் ஆபீஸ் கிட்டே போயி கேட்க சொன்னது நிஜம்...ஏன்னா...எந்த ஆபீஸ்ல இருப்பவங்களுக்கும் பிராட்பேண்டு பற்றி ஒரு மண்ணும் தெரிவதில்லை...இந்த கன்றாவி அனுபவத்தாலேயே ரெண்டு முறை அப்ப்ளிகேஷன் வாங்கியும் பி. எஸ்.என்.எல் கனெக்ஷன் வாங்கலை....டிஸ்க்ளைமர் எல்லாம் வேறையா? இப்போ ஊரு இருக்கிற நிலைமையில் இது ரொம்ப முக்கியம் தான் கேசு கீசுன்னு வந்தா கஷ்டம் தான்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் குரு....ரொம்ப lethargic.....ஆனா சிரிச்சிகிட்டே சொல்றாங்க....அதை மட்டும் யாரோ சொல்லி கொடுத்திருக்காங்க....நீங்க வேலை செய்யாட்டியும் பரவாயில்ல, சிரிச்சிகிட்டே கஸ்டமரை சமாளிங்கன்னு....

      Delete
  2. avanga bsnl i uthimudivittu poravaraikkum ippadiyethan iruppanga

    ReplyDelete
  3. அப்படிங்களா..

    என்னத்தை சொல்றதுங்க....இது எல்லாம்....

    ReplyDelete
    Replies
    1. நம்ம தலையெழுத்து......
      நன்றி....

      Delete
  4. அது சரி ACTIVATE பண்ணிய வுடன் வேலசெய்யுதோ இல்லையோ துட்டு கரையுமே அது இல்லையோ தப்பிச்சீங்க, !ஆனா இப்படி கிண்டலடிக்க கூடாது, இந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு ஒரு 5 வருடத்திர்க்கு முன்பு இப்போதெல்லாம் எங்க ஆளுங்க எள்ளுன்னா எண்ணைதான் பொங்கொ? 4 ஆம் தேதி BROADBAND OUT 1800 COMPLAINT REGISTER பண்ணினேன் கடைசியா DOCKET NUMBER கேட்டவுடன் கொஞ்சம் SHOCK ஆன மாதரி தெரிஞ்சது, BUT ITS MAJOR BREAK DOWN ABT 6000 CONNECTION GONE DUE TO CABLE FAULT REINSERTED ON 9TH MAY '12 இப்போ பாருங்க தினமும் சராசரியா 3 CALLS PER DAY TILL TODAY சார் BROAD BAND வேலை செய்யுதா? "" "" "" ஆனா நீங்க எல்லாம் ஐயொ பாவம்தான்? ஒரு 100 வருஷம் பொருத்துக்கொங்க இந்தியா சரி ஆயிடும் , இப்போ தானெ சுதந்திரம் வாங்கியிருக்கோம்> அவசர படுரீங்களெ அகிலா மேடம்.

    ReplyDelete
  5. அது சரிதான்......

    ReplyDelete
  6. \\அதுக்காக நம்ம BSNL ஆபிசுல இருப்பவங்க எல்லாம் இப்படித்தான்னு நீங்க யாரும் முடிவுக்கு வந்திடக்கூடாது.....\\ if am not wrong at right now private sector having a 49% of sharing property in BSNL, in some point/location/seat who ever is working senior guys are most efficient guys because past time we dont have any equipments like fax or electronic equipments, they made a message using the sounds from other end .

    babu selvan

    ReplyDelete
    Replies
    1. babu, if i am right, that 49%(privatization share) of them are efficient and working, others are not...they become lazy once they join the G service, no updating work.....

      Delete
  7. அகிலா மேடம் எங்க ஊர் BSNL ஆபிஸ் சூப்பர். போனா பொறுமையா விசாரிச்சு ஒரு தீர்வு சொல்லிடறாங்க.வேலை பார்க்கும் ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் அனுபவம்தான் நிறைய கவர்மெண்ட் ஆபிஸ்களில் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அவங்களே இப்போதான் வேலை கத்துக்கிட்டு இருக்காங்க.....பார்ப்போம் எப்போதான் சரியாவங்கன்னு....

      Delete
  8. ஓ... இப்படியெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கிறதா....?

    கருணாகரன் சார் சொன்னது போல... இப்பொழுது தானே சுதந்திரம் கிடைத்தது... என்று மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் இல்லை, இப்படிதான் நடக்கிறது.....
      உங்களின் வருகைக்கு நன்றி....

      Delete
  9. சொல்ல வேண்டியவைகளை நாசூக்காக நகைச் சுவை உணர்வுடன்
    அதே சமயம் நச்சென மனதில் பதியும் சொல்லிப் போனது
    மனம் கவர்ந்தது
    மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே.....

      Delete
  10. BSNL performance depends mainly on Division Manager. I am a customer of BSNL Tirunelveli.
    When I want to get broadband connection, I just called them, their agent came to my home and asked my plan preferences. He collected the money, payed on my behalf, and also selected a fancy landline number for me without my request.
    Customer Care section is working good. 8 A/C's, 12 Counters and all are maintained well. If I am having any line problems, my line man comes within 36 hours of registering my complaint.
    I feel satisfied with BSNL Tirunelveli

    ReplyDelete
    Replies
    1. Last year when my hubby was Addl. SP of Thirunelveli, I once went to solve the same problem in my hubby's phone... In Vannarpettai BSNL Office, only one person knows the technical details and he who is the most wanted person in that office.....so. it happens everywhere, my friend....

      Delete
  11. எப்படியோ BSNL அலுவலகத்துக்கு போனா நல்ல "கலரு" பாக்கலாமுன்னு தெரிய படுத்துட்டீங்க

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...