திருமணத்திற்கு பின் பெண்...
பெண்கள்......ரொம்ப வித்தியாசமானவர்கள். எதையும் 90% குறுக்கு புத்தியுடன் தான் யோசிப்பார்கள்...அதுதாங்க Critical Reasoning ..இதையெல்லாம் நீங்க கேம்பஸ் இன்டர்வியூக்கோ , CAT எக்ஸாமுக்கோ தான் இதை படிப்பீர்கள்.....படித்த பெண்களை விட படிக்காத பெண்களின் மூளை ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும்.
தன் கணவரை எப்போதும் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிறைய காமெடி செய்வார்கள் வீட்டில். கல்யாணம் முடிந்து வரும் போதே ரொம்ப தெளிவா வருவாங்க. அவங்கம்மா நாலு தங்க வளையல் போட்டு அனுப்பிச்சா இவங்க கூட ஒரு நாலு கண்ணாடி வளையலையாவது வாங்கி மாட்டிக்குவாங்க....அப்போதானே வீட்டுக்காரர் பைக் ஸ்டார்ட் பண்ற சத்தத்தை மீறி இவங்க டாட்டா சொல்ற சத்தம் கேட்கும். இல்லேன்னா அவன் திரும்பிபார்க்காம போயிருவானே....
அவன் என்ன செய்வான்னா, அவனோட எல்லா பிரெண்ட்சையும் இவ கண்ணுலே காட்டமாட்டான். ஒண்ணு இவன் ஹிஸ்டரி அவன்கிட்டே இருக்கும், இல்லை இவன் பொண்டாட்டி கொஞ்சம் அழகா இருப்பாள். ஆனா அவ பயங்கர சமர்த்தியசாலியா இருப்பா. இவனோட அவ்வளவு பிரண்ட்ஸ் பேரையும் தெரிஞ்சி வச்சிருப்பா. எப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது. வெள்ளிக்கிழமை ராத்திரி எவன் கூப்பிடுவான், சனிக்கிழமை எவன் கூப்பிடுவான்னு, எதுக்கு கூப்பிடுவான்னு அவளுக்கு தெரியும். அதனாலே கல்யாணமான நண்பர்களின் மனைவிகளின் செல் நம்பர் அத்தனையும் அவளுக்கு அத்துபடி. இவன் ஒருபக்கமும் எஸ்கேப் ஆகமுடியாம முழிப்பான்.
பிள்ளை பிறந்த பிறகு அடுத்த வஸ்திரத்தை உபயோகிப்பாள். அதுதாங்க, 'அப்படியே உங்களையே உரிச்சி வச்சிருக்கான்' என்பாள். இவன் அப்படியே flat. ஐயோ... பய புள்ள நம்ம செஞ்ச வித்தை எல்லாம் ஆரம்பிச்சிருவானோ என்று தினமும் பயந்து ஒழுங்கா பொறுப்பான அப்பனாகிவிடுவான். வேற வழி....
பிள்ளையை ஸ்கூல் சேர்த்த பிறகு, ரொம்ப தெளிவாகி, சும்மா தானே இருக்கேன், நிறைய செலவு இருக்கு, வேலைக்கு போறேனே என்பாள். கையில் ஒரு ஸ்கூட்டியுடன் சுதந்திரத்தையும் சேர்த்து வாங்கிக் கொள்வாள். இப்போ எக்னாமிக்களாகவும் அவகிட்டே சரண்டர் ஆகிடுவான். ஆல் அவுட்.......
அப்பாடா எவ்வளவு போராட்டம் ஒரு பெண்ணுக்கு..........ஒருத்தனை அடிமை ஆக்கிறதுக்குள்ள மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிடுது. இது வீட்டுக்காரருக்கு மட்டும்தான். மாமியார், மாமனார், நாத்தனார் இவங்களுக்கு எல்லாம் வேற வேற strategy யை பின்பற்றணும். என்ன பண்றது.... பொண்ணா பிறந்தாலே இப்படிதான் கஷ்டப்படணும்னு எங்க தலையில எழுதி இருக்கு......
..........இன்னும் எழுதுவேன்
பொண்ணா பிறந்தாலே இப்படிதான் கஷ்டப்படணும்னு எங்க தலையில எழுதி இருக்கு......// உண்மைதான் சகோ இதுக்கு எல்லாம் கூட மசியாத ஆண்கள் இருக்காங்க .
ReplyDeleteஅதுக்குத்தானே சசி நாம இன்னும் போராடிக்கிட்டு இருக்கோம்.....
Deleteஏங்க இப்படி உண்மையெல்லாம் போட்டு உடைச்சிட்டீங்க. கணவரை மடக்கவே இம்புட்டு கஷ்டம்னா?ஆனாலும் பெண்கள் படும் கஷ்டம் அதிகம்தான்.
ReplyDeleteஇப்போதாவது புரிஞ்சிக்கிட்டிங்களே....thanx.....
Deleteஇது பாராட்டா இல்ல தாக்குதலா, தாக்குதல் என்னும் அர்த்தம் அழகாய் மாறி பாராட்டு போல் தெரிந்தாலும் உண்மையில் இது ஆண் இனத்தின் அறியாமை மற்றும் புத்தியில்லாத தனத்தை படம்பிடித்து காட்டிவிடீர்கள் ..
ReplyDeleteஇதுதான் 'கால்கட்டு' என்பது. இதை அறியாமை என்று கொள்வதைவிட, உங்களின் வாழ்க்கை பாதையை சீரமைப்பதாக கூட எடுத்துக் கொள்ளலாமே.....
Deleteநல்ல ஆராய்ச்சி !
ReplyDeleteராஜேஸ்வரி....நாம செய்றதை தானே எழுதுவோம்....
Delete//கையில் ஒரு ஸ்கூட்டியுடன் சுதந்திரத்தையும் சேர்த்து வாங்கிக் கொள்வாள்.//
ReplyDeleteரொம்ப பிடிச்ச வரி. எத்தனை சாகசங்களுக்குப் பிறகு, இந்த வரி சாத்தியமாகிறது என்பதுதான் வாழ்க்கையின் விசித்திரம். வாழ்க்கை நம்மீது நிகழ்த்தும் விளையாட்டிற்கான ஒரு பெண்மனதின் பதிலாக இந்த வரியைப் பார்க்கிறேன்.
இன்னும் கூட அலசி ஆராய்ந்து, இன்னும் அழுத்தமாக பதிவு செய்யப்படும் அடுத்தப் பதிவை எதிர்பார்க்கிறேன்! ;))
வாழ்த்துகள்!
//எத்தனை சாகசங்களுக்குப் பிறகு, இந்த வரி சாத்தியமாகிறது என்பதுதான் வாழ்க்கையின் விசித்திரம்///
Deleteஉண்மைதான் பாலு...இலகுவாக சொல்லி செல்கிறோம் சில விஷயங்களை, அதன் உள்ளிருக்கும் அழுத்தத்தையும் சுமையும் மறந்து.....
நன்றி பாலு.....
//அவகிட்டே சரண்டர் ஆகிடுவான். ஆல் அவுட்......./// எப்படி ...இப்படி... இதுதான் அனுபவம் என்கிறது சொல்லாமல் சொல்லிவிடேர்கள் ஒரு சில மந்திரங்களும் உண்டு ......... கோவை அகிலா
ReplyDeleteஎல்லாம் ஒரு அனுபவம்தான்....வீட்டு சாவிகொத்து கையில் எப்போதும் இருப்பதற்கு தான் இந்த முன் ஏற்பாடுகள் எல்லாம்....
Delete