டைரக்டர் : விக்னேஷ் மேனன்
ஒளிப்பதிவாளர் : ஆனந்த் ஜீவா
கண்ணில் பட்ட விண்மீன்கள் :
ராகுல், அனுஜா, விஷ்வா, ஷிகா, பாண்டியராஜன்
'விண்மீன்கள்'
திரையில் பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பெயரின் காரணம்தான் தெரியவில்லை. விதவிதமான கதாபாத்திரங்கள் இருந்து ஒவ்வொருவருடைய செயல்களும் படத்தின் கதையில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் பெயர் ஒகே ஆகியிருக்கும். சரி, தலைப்பை விடுவோம்....
செரிபரல் பால்சி (cerebral palsy)
இந்த நோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்ற ஒரு மாற்று திறனாளியின் கதைதான் இது.புதிதான ஒரு முயற்சிதான்.முற்றிலும் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே 'அஞ்சலி' திரைக்கு வந்து 22 வருடங்கள் உருண்டோடிவிட்டது. அந்த திரைப்படம் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையை பற்றியது. அக்கால கட்டத்தில் அந்த திரைப்படம் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியது. ஆனால் இப்போது ஏதாவது ஒரு நோயை வைத்துகொண்டு படம் பண்ணுவது சகஜமாகிப் போனது.
நம் நடைமுறை வாழ்க்கையில், அக்கம் பக்கங்களில், உறவினர் வீடுகளில் என்று இந்த மாதிரி குழந்தைகளை பெற்றவர்கள் அருமையாக ஆதரித்து கொண்டிருப்பதால் இந்த படத்தில் காண்பிக்கும் பெற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் அழுகையும் தியாகமும் புதிதாகவோ பெரியதாகவோ தெரியவில்லை. இல்லையென்றால் நம்மை பாதிக்கும் வண்ணம் திரையில் கண்பிக்கபடவில்லை எனக் கொள்ளலாம்.அதனால் தான் இதை முற்றிலும் புதுமையான முயற்சி என் பாராட்ட தோன்றவில்லை.சரி, செரிபரல் பால்சியை விடுவோம்....
காதல்
இந்த கதையில் காதல் என்பது காதல் மாதிரியும் இல்லாமல் நட்பு மாதிரியும் இல்லாமல்.....டைரக்டருக்கே வெளிச்சம்.அனுஜா ஐயர் எந்த மாதிரி உணர்வை காண்பிக்க என்று தெரியாமல் தடுமாறி 'ஏதோ ஒன்று' என்று வந்து போகிற மாதிரி நமக்கு தோன்றுகிறது. சில காட்சிகளில் ஹீரோயின் ஹீரோவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார்.
எடுத்தவுடன் ஹீரோ காதல், கல்யாணம் என்று சொல்ல,ஹீரோயின் 'no' சொல்ல, ஹீரோ 'friends' என்று சொல்ல(ஹீரோயினை காதலிக்க வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில்), நினைத்தபடியே ஹீரோயின் காதலில் விழ, இப்போது ஹீரோ பல்டி அடிக்க - இதெல்லாம் சாதாரணமாக காதலிப்பவர்களுக்கு பொருந்தும். இவ்வளவு குறுகிய கால கட்டத்தில்,இந்த மாதிரி உடலும் மனமும் ஒருசேர ஊனமுற்றவர்களுக்கு மாறுவது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
செரிபரல் பால்சியின் intensity ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி இருக்கும் என்று டைரக்டர் ஒரு இண்டர்வியுவில் சொல்லி இருந்தார். அதற்காக இவ்வளவு சீக்கிரமா frameக்கு frameமா? ரொம்ப அநியாயம். சரி, இப்போது காதலையும் விடுவோம்...
கேமரா
இந்த ஒன்றைப்பற்றி தான் என்னால் சொல்ல முடிகிறது. மூடுபனி படம் பார்த்த உணர்வு. ஒளிப்பதிவாளர் ஆனந்திற்கு பாராட்டுகள். இந்த படத்தை பொறுத்தவரை காட்சிகளின் தத்ரூபம் நம்மை பிரமிக்கவைக்கிறது. இங்கு கேமராதான் கதையை அழகுபடுத்தியிருக்கிறது.
வானத்திற்கு வெளிச்சம் கூட்டாத வெறும் மீன்கள்
இந்த கதையை இன்னும் நேர்ப்படுத்தி இருக்கலாம். ஒன்று சிறுவனின் கதையை மட்டும் சொல்லி இருக்கலாம். இல்லை, சிறுவயது கதையை சுருக்கி இருக்கலாம்.டைரக்டர் விக்னேஷ்க்கு ஏறுவதற்கு இன்னும் படிகள் உள்ளன.இளைஞன் தானே...ஏறலாம்... ஆனாலும் துணிந்து இப்படி ஒரு திரைகதையை அமைத்ததற்கு பாராட்டலாம்.
விமர்சனத்தினை உங்கள் பாணியில் சொன்ன விதம் அழகு.
ReplyDeleteநன்றி விச்சு
Deleteஅருமையான விமர்சனம் சகோதரி..
ReplyDeleteபொதுவாக இனம் மாற்றம் பெறும் ஊனமுள்ள
குழந்தைகள் தவிர மற்ற அனைத்துவிதமான
ஊனமுள்ள குழந்தைகளையும் பெற்றோர்கள் கண்ணுக்குள்
வைத்து தான் பார்க்கிறார்கள்..
உண்மைதான் மகேந்திரன்....
Deleteவிமர்சனம் வித்தியாசமானதாகவும் சுருக்கமாகவும் மிகச்
ReplyDeleteசொல்ல வேண்டியதை மிகச் சரியாக சொல்லிப் போவதாகவும் இருந்தது.தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே....
Delete