மதம் என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வதை நிஜ வாழ்க்கையிலும் வலைதளங்களிலும் தினமும் பார்க்கிறோம். ஒவ்வொரு மதத்திலும் சொல்லப்பட்ட கருத்துகள் பொதுவாக ஒரே மாதிரி இருப்பினும் சொல்லப்பட்ட விதம் வேறு வேறாகத்தான் இருந்திருக்கிறது.கருத்து சொல்லபடுகிற மனிதர்களும் வேறுபடுகிறார்கள்.....பிரம்மச்சாரிகள், சம்சாரிகள், பெண்கள், குழந்தைகள்....என்று அவரவர்களுக்கு என்று தனி தனியாக போதித்திருக்கிறார்கள்.பெரும்பாலும் அதை கடைபிடிக்கவும் வற்புறுத்தப்படுகிறார்கள். அதுவும் பெண்கள் சில மதத்தில் மிகவும் கட்டாயபடுத்தபடுவதாகவும் கேள்விபட்டிருக்கிறோம்....அது பெரும்பாலும் உண்மை இல்லை என்பது நான் சந்தித்த ஒரு முதிய பெண்மணியிடம் இருந்துதான் தெரிந்து கொண்டேன்.
அவர் என் தோழியின் ஆசிரியை, ஒரு இஸ்லாமியர், அந்த காலத்து BA...Madras University....தலைமை ஆசிரியையாக பனி செய்து ஓய்வு பெற்றவர். அவருடைய மதத்தில் பெண்களின் கட்டுபாடுகள் குறித்த பல தவறான கருத்துகளை திருத்தினார்.
இப்போது இருக்கும் பெண்களுக்கு சுதந்திரம் படிப்பில் மட்டும் அல்லாமல், உடை விஷயத்திலும் வழங்கபடுகிறது. ஒரு கட்டுப்பாட்டுக்குள் நம் சமுகத்தையும் அதில் நம் பெண்களையும் பாதுகாக்கவே பர்தா போன்ற உடைகளை வைத்திருப்பதையும் சொன்னார். ஒரு பெண் உள்ளே லோ-கட் ஜாக்கெட், லோ-ஹிப் சாரி, லோ-ஹிப் ஜீன்ஸ் என்று எதை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். ஆனால் நாம் அணியும் இந்த உடைகள் ஆண்களின் கவனத்தை கலைக்கவோ ஈர்க்கவோ கூடாது. அதனால் தான் இந்த பர்தா போன்ற மேல் அணிகலன் என்றார். நாம் உடுத்தும் உடைகள் எல்லோராலும் பாராட்டப்படவும் ஆண்களை கவர்வதற்காகவும் தானே என்று பெண்கள் நினைக்கலாம். வெளியே காண்பித்தால்தான் பெண் அழகா? காண்பிக்காவிட்டாலும் பெண் அழகுதான். உன் சுதந்திரம் உனக்குத்தான். அதை உன்னை தவிர யாராலும் உன்னிடம் இருந்து பறிக்க முடியாது. ஆனால் உன் இளவயதுக்கு உன் சுதந்திரத்தை பாதுகாக்க தெரியாது. அதனால் தான் மதம் அதை செய்கிறது. அது ஓர் ஒழுக்க கட்டுப்பாடுதான். அதற்காக இப்போது படிக்கும் பெண் பிள்ளைகள் எல்லாம் உடன் படிக்கும் பிள்ளைகள் போல் நாகரிகமாக இல்லாமல் செல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மற்றவர் கண் உறுத்தாமல் உடை உடுத்த வேண்டும். அதுவே போதும். திருமணம் முடிந்தாலே பெண்கள் பலரும் உடை விஷயத்தில் கவனம் இல்லாமல் feeding nighties போட்டுக்கொண்டே கடைக்கு போவதும் வருவதும் நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை நாம் தவறாக பயன்படுத்துவது போலதானே. பெண்களிடம் சுயகட்டுபாடு குறைந்துகொண்டே வருகிறது என்று வருத்தப்பட்டார் அந்த முதிய பெண்மணி.
அவர் சொல்லிய சில விஷயங்கள் நம் மனதோடு இயைந்து போனாலும் இயைந்து போகாவிட்டாலும் அவர் அதை சொன்ன விதமும், அந்த அழகான கட்டுப்பாட்டுக்குள் அவர் படித்து வளர்ந்த விதமும், மற்ற வயோதிகர்களை போல இப்போதிருக்கும் பெண் பிள்ளைகளைபற்றி குறை பேசாததும், அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொண்டதும், இந்த வயதான காலத்திலும் அவரின் தெளிவான சிந்தனையும் என்னை ஆச்சிரியபடுத்தியது.
ஒரு கட்டுபாடான மதத்தினுள்ளும் ஒரு அருமையான பெண்மணி. மதம் தாண்டி அவர் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பும் மதிப்பும் ஏற்பட்டது உண்மை. என் பள்ளி காலம் இவரின் கீழ் அமையவில்லையே என ஒரு சிறு வருத்தம் கூட தோன்றியது. நல்ல மனிதர்கள் எங்கிருந்தாலும் நம் முன் வருவார்கள். நாம் அவர்கள் சொல்லும் கருத்துகளை உள்வாங்கிகொண்டு நம் வாழ்க்கை பாதையில் சரியாக நடக்க பழக வேண்டும். மதத்தை தாண்டியும் நாம் நேசக்கரம் நீட்டுவோம்.......
ஒரு கட்டுபாடான மதத்தினுள்ளும் ஒரு அருமையான பெண்மணி. மதம் தாண்டி அவர் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பும் மதிப்பும் ஏற்பட்டது உண்மை. என் பள்ளி காலம் இவரின் கீழ் அமையவில்லையே என ஒரு சிறு வருத்தம் கூட தோன்றியது. நல்ல மனிதர்கள் எங்கிருந்தாலும் நம் முன் வருவார்கள். நாம் அவர்கள் சொல்லும் கருத்துகளை உள்வாங்கிகொண்டு நம் வாழ்க்கை பாதையில் சரியாக நடக்க பழக வேண்டும். மதத்தை தாண்டியும் நாம் நேசக்கரம் நீட்டுவோம்.......
உங்கள் கருத்து ஏற்கக் கூடியதாக இல்லை. அது பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஒரு யுக்தி. பழமை பேசுபவர்கள் அப்படித்தான். ஆனால் நமது ஆடை அணியும் விதம் மற்றவர்களை உறுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பர்தா தேவையா?
ReplyDeleteநான் வசிக்கும் பகுதியில் கூட சிறு பெண் குழந்தைகள் பர்தாவுடன் பள்ளிகூடத்திற்கு செல்வதை பார்த்திருக்கிறேன்....அந்த மாதிரி கட்டுபாடுகளுக்கு இடையும் 'வற்புறுத்தல் தவறு' என்று வேறுபட்டு யோசிக்கிற ஒரு முதிய பெண்மணியை பார்த்ததும் அவர்களை பற்றி எழுதினேன்....
Deleteநன்றி ஞானசேகரன் அவர்களே...
எந்த இஸ்லாமிய சட்டத்திலும்... பெண்கள் பர்தா தான் அணிய வேண்டும் என்று இடம்பெறவில்லை...
Deleteஅது இஸ்லாமிய பெண்களின் சீருடையும் இல்லை...
அது போல தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது..சகோ...
கண்ணை உறுத்தாத....
உடம்பை இறுக்கி பிடித்து ஒரு பெண்ணின் அங்கங்களை வெளிபடுத்தாத...
கண்ணாடி போல உடம்பை காட்டகூடியதாக இல்லாமல்... உடலை முழுவதும் மறைக்க கூடிய எந்த உடையும் இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை.......!!!
// உடலை முழுவதும் மறைக்க கூடிய எந்த உடையும் இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை //
Deleteஉங்களின் பதிலை வரவேற்கிறேன் ஷர்மிளா....
நன்றி சகோதரி :)
Delete//ஒரு பெண் உள்ளே லோ-கட் ஜாக்கெட், லோ-ஹிப் சாரி, லோ-ஹிப் ஜீன்ஸ் என்று எதை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். ஆனால் நாம் அணியும் இந்த உடைகள் ஆண்களின் கவனத்தை கலைக்கவோ ஈர்க்கவோ கூடாது. அதனால் தான் இந்த பர்தா//
ReplyDeleteநல்ல கருத்து வாழ்த்துக்கள்...
நன்றி கிளியனூர் இஸ்மத் அவர்களே....
Delete//ஒரு பெண் உள்ளே லோ-கட் ஜாக்கெட், லோ-ஹிப் சாரி, லோ-ஹிப் ஜீன்ஸ் என்று எதை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். ஆனால் நாம் அணியும் இந்த உடைகள் ஆண்களின் கவனத்தை கலைக்கவோ ஈர்க்கவோ கூடாது. அதனால் தான் இந்த பர்தா//
Deleteமுஸ்லீம் அல்லாத ஏனைய மதத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் முன்னேறாமால் பெண்களால் கவனம் சிதறடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? நீங்கள் சொல்வதை பார்த்தால் பர்தா இல்லாது முஸ்லீம் சமூகத்தில் நடமாடும் பெண்களை முஸ்லீம் ஆண்கள் வெறி கொண்டு கடித்து குதரிவிடுவார்கள் போல அல்லவா உள்ளது.. நீங்களே முஸ்லீம் இன ஆண்களை இவ்வாறு கேவலப்படுத்தலாமா?
ஆண்களின் கவனத்தை ஈர்க்க கூடாது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள்... நீங்கலாக முஸ்லிம் ஆண்கள் எல்லாம் வெறிபிடித்தவர்கள் என்று தவறாக அர்த்தம எடுத்து கொள்ள கூடாது...!!!
Deleteஒரு உண்மையான முஸ்லிம் ஆண் அந்நிய பெண்ணை பார்த்தால் தன பார்வையை தாழ்த்திக்கொள்ளுவான் .... அப்படிதான் இஸ்லாமிய ஆண்களுக்கு போதிக்கப்பட்டுளது....!!
மேலும் அறிவியல் வளர்ச்சி அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் அந்நிய பெண்களை செல்போன் கேமரா மூலம் படம் பிடிப்பது, அதை வக்கிரமாக மார்பிங் செய்து இணையதளங்களில் உலாவர விடுவது என்று எத்தனை விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.....எந்த சுயமரியாதை உடைய ஆணும தன குடும்ப பெண்ணின் படம் இது போன்ற வலைதளங்களில் வருவதை விரும்ப மாட்டான்...!!
இது போன்ற வக்கிர புத்தி கொண்ட ஆண்களிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கான அருமையான கேடயம் தான் இந்த ஹிஜாப்...!!!
ஹிஜாப் பெண்களின் அடைத்து வைக்கும் சிறை அல்ல... எங்களை தற்காத்து கொள்ள இஸ்லாம் அளித்துள்ள கேடயம்!!!!!!
ஹிஜாப் பற்றி மேலும் தகவல்கள் பெற.....
http://ariviyalputhaiyalalquran.blogspot.com/2012/04/blog-post_18.html
சொல்வதை மிக தெளிவாகவும் அதே நேரத்தில் குறை கூறாமலும் எதையும் புரியும்படி அதன் பலன்களை காரண காரியத்தோடு விளக்கினால் புத்தியுள்ளவர்கள் ஏற்று கொள்வார்கள் என்பது என் கருத்து. இது பர்தாவுக்கு மட்டுமல்ல எல்லாவற்றிர்கும் பொருந்தும்
ReplyDeleteதங்கள் கருத்து எனக்கு உடன்பாடானதாக இல்லை
ReplyDeleteஇது குறித்தான கருத்தை இளம் வயதுப் பெண்களிடம்
கேட்டிருந்தால்தான் சரியாக இருக்கும்
எல்லா மதங்களிலும் உள்ள நல்ல விஷயங்களைப் போலவே
சில நெருடலான விஷயங்கள் உண்டு
அதனை ஏற்றுக்கொள்வது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம்
எனக் கொள்வதே சமூக நல்லிணக்கம் என்பது என் கருத்து
உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை, ரமணி அவர்களே....அதே சமயம் பெண்களின் மேல் கட்டுபாடுகள் அதிகம் கொண்ட சமுகத்தில் ஒரு முதியவர் இவ்வளவு புரிதலோடு இருப்பதும், மற்ற மதத்தவர் அந்த சமுகத்தின் மீது கொண்டிருக்கும் பார்வையை சற்று நேர்ப்படுத்தி அவர் காட்டயதைதான் நான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்...மற்றவர்களையும் நாம் புரிந்து கொள்ளுதல் கூட ஒரு வகையில் சமூக நல்லிணக்கம் தானே... நன்றி....
Deleteஅந்த இஸ்லாம் பெண்மணி சொல்வதை கேட்டு அதை மனதில் வாங்கி அதை மிக தெளிவாக புரிந்து கொண்டு ஒரு நல்ல மனுசியை அறிமுகப்படுத்தி அவர்களின் கருத்தை ஒரு நல்ல பதிவாக வழங்கிய உங்களை பாராட்டுகிறேன்
ReplyDeleteஉங்களின் பாராட்டுகள் அவர்களையும் போய் சேரட்டும்.....வருகைக்கு நன்றி....
Deleteதமிழகத்தில் நான் பார்த்தவரையில் உருது முஸ்லிம்கள் மட்டும் ப்ர்தா அணிவதை பார்த்து இருக்கிறேன். மற்ற முஸ்லீம்கள் ப்ர்தா அணியாவிட்டாலும் தான் கட்டும் சேலையை மிகவும் கண்ணியமான முறையில் கட்டி அழகாகவும் அதே நேர்த்தில் உடலை அங்கங்கள் வெளி தெரியா வண்ணம் வருகிறார்கள்.
ReplyDeleteநாம் அணியும் உடை மட்டுமல்ல நமது செயல்களும் மற்றவர்களை கெடுக்கா வண்ணம் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்
சகோ அவர்கள் உண்மைகள்,
Deleteதவறான புரிதல். தமிழகத்தை பொறுத்த வரை உருது பேசும் முஸ்லிம்கள் மிகக் குறைவு. குறிப்பாக தென் மாவட்டங்களில் ரொம்பவே குறைவு.
உருது பேசும் முஸ்லிம்கள் புர்க்கா அணிவார்கள், தமிழ் பேசுபவர்கள் அணிய மாட்டார்கள் என்பதெல்லாம் உங்களின் அறியாமையே.
எங்கள் ஊர் 99 % முஸ்லிம்கள் வாழும் ஊர். ஒருவர் கூட உருது பேச மாட்டார்கள், யாருக்கும் தெரியாது. அனைவரும் புர்க்கா அணிவார்கள்.
பிறரை கை காட்டாமல் எனது புறத்தில் இருந்தே உதாரணம் தந்துவிட்டேன்.
இனியாவது உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா??????
உண்மை என்னவென்றால் சகோ, இஸ்லாத்திற்கும் மொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இஸ்லாத்திற்கும் நிறத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இஸ்லாத்திற்கும் நாட்டு பேதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு உலகளாவிய சகோதரத்துவம்.
@சிராஜ்
Deleteஎனது சொந்த ஊர் செங்கோட்டை எனது நெருங்கிய உறவினர்தான் அங்குள்ள "பள்ளி' தலைவர் அது போல தென் காசி கடையநல்லூர், சங்கரன் கோவில். திருநெல்வேலி, போன்ற ஊர்களில் வாழும் எனது சகோதர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்கிறார்கள் அவர்கள் அனைவரும் உடலை மறைத்தவண்ணம் தலையில் முக்காடு போட்டுதான் வாழ்கிறார்கள். இது கடந்த நான் இந்தியா வரும் வரை பார்த்த சம்பவங்கள் தான். இப்போது அது மாறிவிட்டது என்பது எனக்கு இந்த நிமிடம் வரை தெரியாது சகோதர் சிராஜ் அவர்களே.
அடுத்தாக நான் சொல்ல வருவதும் ஆஸிக் அகம்மது சொன்னதும் ஓன்றே
//இஸ்லாம் கூறும் உடையானது, உடல் அங்கங்கள் வெளியே தெரியா வண்ணம் அணியும் உடையே ஆகும். அதுபோல முகத்தை மறைப்பதும் இஸ்லாம் சொல்லாத ஒன்று. பெண்கள் அப்படியாக உடையணிந்தால் அது அவர்களுக்கும் இறைவனுக்குமானது. //
மீண்டும் நான் சொல்ல விரும்புவது இது மட்டுமே
நாம் அணியும் உடை மட்டுமல்ல நமது செயல்களும் மற்றவர்களை கெடுக்கா வண்ணம் இருக்க வேண்டும் என்பதுதான்
மதுரை தமிழ் ஹை
Deleteநலமா இருக்கீங்களா?
சிராஜ் சொல்ல வந்தது உருது முஸ்லீம்கள் மட்டும்மல்ல எல்லாரும் புர்கா அணிய கூடியவர்கள் தான் என்று!
அப்பறம் நீங்க சொன்னது சரி தான்! புர்காவை இஸ்லாம் கட்டாயப்படுத்தவில்லை... கண்ணியமா ஆடை உடுத்துங்க என தான் சொல்லியிருக்கு. சோ நீங்க சொன்ன உங்க ஊர் பெண்மணிகளே சாட்சி இஸ்லாம் கட்டாயப்படுத்தி திணித்து பெண்களை அடிமைப்படுத்தவில்லை என்பதற்கு :-)
இப்ப வருவாங்க பாருங்க நம்ம தோஸ்த்துங்க! "இல்ல இஸ்லாம் அடிச்சு,ஒதைச்சு பெண்களை புர்கா போட சொல்லுதுன்னு ஒப்பாரி வைக்க!" அவர்களுக்கு நீங்க சொன்னது தான் பதில் ஹி...ஹி..ஹி..
தோஸ்த்துக்களுக்காக இஸ்லாம் மதம் மட்டுமல்ல எந்த மதமும் கட்டுபாடுகளை விதிக்க வில்லை. எல்லா மதங்களும் நல்ல ஒழுக்க நெறிகளையே பின்பற்ற வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறது. அதை கடைப்பிடிப்பதும் பிடிக்காதது அவரவர் இஷ்டமே
Deleteஉடைகள் அவரவர் இஷ்டம் என்றாலும் மதம் அதனை நல்வழிப்படுத்துகிறது. டீன் ஏஜ் என்பது பல இளசுகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும். அதில் தவறியவர்கள் திரும்ப திருந்த சான்ஸ் கிடைப்பதேயில்லை. உடைகள் நம் உடலை மறைக்கவே. நம் உடம்பினை வெளிக்காட்ட இல்லை.
ReplyDeleteசரியாகத்தான் சொன்னீங்க... இப்போதிருக்கும் பெண்கள் அணியும் உடைகள் எல்லாமே விளம்பரத்திற்காக மட்டுமே...நன்றி விச்சு...
Deleteஅன்பு சகோதரி அவர்களுக்கு,
ReplyDeleteஉங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக்..
//அதுவும் பெண்கள் சில மதத்தில் மிகவும் கட்டாயபடுத்தபடுவதாகவும் கேள்விபட்டிருக்கிறோம்....அது பெரும்பாலும் உண்மை இல்லை என்பது நான் சந்தித்த ஒரு முதிய பெண்மணியிடம் இருந்துதான் தெரிந்து கொண்டேன்.//
உண்மை. இங்கே பதிவுலகத்திலேயே நிறைய முஸ்லிம் பெண்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றார்கள். இஸ்லாமிய வரையறைக்குள் செயல்படும் அவர்களுக்கு அவர்களது முன்னேறத்திற்கு மார்க்கம் தடையாக இருந்ததில்லை. இதனை பலமுறை தங்கள் எழுத்துக்கள் வாயிலாக அவர்கள் வெளிப்படுத்தியும் இருக்கின்றார்கள்.
இஸ்லாம் கூறும் உடையானது, உடல் அங்கங்கள் வெளியே தெரியா வண்ணம் அணியும் உடையே ஆகும். அதுபோல முகத்தை மறைப்பதும் இஸ்லாம் சொல்லாத ஒன்று. பெண்கள் அப்படியாக உடையணிந்தால் அது அவர்களுக்கும் இறைவனுக்குமானது.
அழகான பகிர்வுக்கு நன்றி..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நான் இதை ஆமோதிக்கிறேன், ஆஷிக்...நிறைய இஸ்லாமிய பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட துறையில் முன்னேறி இருப்பதை நானும் கண்டிருக்கிறேன்....மதம் என்பது ஒரு தடைகல் அல்ல, நாம் ஒழுக்கமாக இருந்தால்...அதை கட்டுபாடாக எடுத்துக்கொள்ளாமல் நம்மை வழிபடுத்தும் நெறிமுறையாக கொள்ளலாமே....நன்றி
Deleteஅன்பு சகோதரி.,
ReplyDelete== அது பெரும்பாலும் உண்மை இல்லை என்பது நான் சந்தித்த ஒரு முதிய பெண்மணியிடம் இருந்துதான் தெரிந்து கொண்டேன். ==
உங்களின் புரிதலுக்கு மிக்க மகிழ்ச்சி
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோ
எதையுமே நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது....உங்களின் வருகைக்கு நன்றி குலாம் அவர்களே....
Deleteசுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?
ReplyDelete1.>>> இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் <<<
2. >>> புர்கா போட்டுண்டா என்ன? - THIRU VIDHOOSH <<<<<
3. >>> போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு சிந்தி. எது பெண்ணுரிமை?
4. >>>
25. "நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா? <<<
5.>>>
24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா? <<<
6. >>>
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம் <<<
7.>>> இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்? <<<
8. >>> ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா <<<<
.
.
அருமையான பதிவுகள்...நன்றி உங்களுக்கு...
DeleteThis comment has been removed by the author.
Deleteஹிஜாப் ஆணாதிக்கமா..? பெண்ணடிமைத்தனமா ? இல்லை பெண்மைக்கு கொடுக்கப்படும் கௌரவமா?
Deletehttp://ariviyalputhaiyalalquran.blogspot.com/2012/04/blog-post_18.html
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் ஒருபோதும் புர்க்காதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தியது இல்லை. முகம் மற்றும் கைகளைத்தவிர மற்றவற்றை மறைத்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்கிறது. அப்படிபார்த்தால் இந்திரா காந்தி, அன்னை தெரசா போன்றவர்கள் அவர்கள் அணிந்த உடைகளினால் தாழ்ந்து போய்விட்டார்களா? அவர்கள் அணிந்த உடை முற்றிலும் இஸ்லாம் அணியச்சொன்ன ஆடைகள்தானே! இறுக்கமான ஆடை அணிவதும், உடல் அங்கங்களை காண்பிக்கும் விதமான ஆடை அணிவதுதான் சுதந்திரமா?
ReplyDeleteஅன்பு சகோதரி அவர்களுக்கு,
ReplyDelete// ஒரு கட்டுபாடான மதத்தினுள்ளும் ஒரு அருமையான பெண்மணி. மதம் தாண்டி அவர் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பும் மதிப்பும் ஏற்பட்டது உண்மை. என் பள்ளி காலம் இவரின் கீழ் அமையவில்லையே என ஒரு சிறு வருத்தம் கூட தோன்றியது. நல்ல மனிதர்கள் எங்கிருந்தாலும் நம் முன் வருவார்கள். நாம் அவர்கள் சொல்லும் கருத்துகளை உள்வாங்கிகொண்டு நம் வாழ்க்கை பாதையில் சரியாக நடக்க பழக வேண்டும். மதத்தை தாண்டியும் நாம் நேசக்கரம் நீட்டுவோம்.......//
அழகான பகிர்வுக்கு நன்றி..
--
நன்றி நாசர் அவர்களே....
Deleteஹாய் அகிலா
ReplyDeleteஅருமையான பகிர்வு
ரொம்ப நன்றிங்க
நானும் புர்கா பற்றி பதிவிட்டிருந்தேன். நேரம் கிடைக்கும் போது பாருங்க http://www.akasiyam.com/2011/11/2_29.html?m=1
ஆமினா,
Deleteஉங்க பதிவை படித்தேன்....நிறைய புதிய(எனக்கு) தகவல்கள் இருந்தது.
ஜம்ஜம் தண்ணீர் பற்றி கூட என் தோழி ஒருத்தியிடம் இருந்து சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
கத்துகிறதுக்கு தினமும் வாழ்க்கை நமக்கு ஏதாவது காட்டிக்கொண்டே இருக்கிறது.
நன்றி தோழி....
அந்த முதிய பெண்மணியின் கருத்துக்களை சரியான வகையில் உள்வாங்கி, அழகிய முறையில் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றிகள் சகோதரி!
ReplyDelete//நாம் அணியும் இந்த உடைகள் ஆண்களின் கவனத்தை கலைக்கவோ ஈர்க்கவோ கூடாது. அதனால் தான் இந்த பர்தா போன்ற மேல் அணிகலன் என்றார்//
பர்தாவின் பாதுகாப்பையும், அது பெண்களுக்கு தரும் சுதந்திரத்தையும் ரத்தினச் சுருக்கமாகச் சொன்ன அவர்களை நீங்கள் மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், எனது நன்றியினை தெரிவித்துவிடுங்கள்.
உங்களின் பகிர்வுக்கு நன்றி அஸ்மா....அவர்களிடம் உங்களின் அன்பையும் கண்டிப்பாக தெரிவிக்கிறேன்...
Delete. உன் சுதந்திரம் உனக்குத்தான். அதை உன்னை தவிர யாராலும் உன்னிடம் இருந்து பறிக்க முடியாது
ReplyDeleteஅருமையான கருத்துப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி ராஜேஸ்வரி.....
Deleteஅருமையான பகிர்வு சகோதரி!,
ReplyDeleteஒழுக்கமான ஆடை அணியவேண்டும் என்பது மிகப்பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயம்.
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....
Deleteஅன்பு தோழிக்கு
ReplyDelete//அதுவும் பெண்கள் சில மதத்தில் மிகவும் கட்டாயபடுத்தபடுவதாகவும் கேள்விபட்டிருக்கிறோம்//.
முதலில் உங்களின் அழகான புரிதலுக்கு நன்றி..இந்த ஒரு வரியை தவிர..நீங்கள் நினைப்பது தவறு தோழி..உண்மையில் இஸ்லாம் மார்க்கம் பெண்களை மிக பெருமை படுத்துகிறது.கண்ணியப் படுத்துகிறது. அவளுக்கான உரிமைகளை கடமை ஆக்கி இருக்கிறது..
பெண் என்பவள் ஒரு பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம் என்பதால் தான் அவளின் பாதுகாப்பு கருதி சில கட்டு பாடுகளை விதிக்கிறது .அந்த கட்டுபாடுகள் அவளின் வளர்ச்சிக்கோ,அவளின் அறிவுக்கோ ஒரு போதும் தடையாக இருந்தது இல்லை..மேலும் எங்களுக்கு அவை பாதுகாப்பையும்,கண்ணியத்தையும்,சுதந்திரத்தையும் கொடுக்கிறது.இங்கு எப்படி பெண்ணுக்கு ஆடையில் வரைமுறை உண்டோ அதே போல ஆணுக்கும் உண்டு.
//நாம் அவர்கள் சொல்லும் கருத்துகளை உள்வாங்கிகொண்டு நம் வாழ்க்கை பாதையில் சரியாக நடக்க பழக வேண்டும். மதத்தை தாண்டியும் நாம் நேசக்கரம் நீட்டுவோம்.//
அழகான வரிகள்..பரந்த புரிதல் இருந்தால் தான் இந்த வரிகள் சாத்தியம்..உங்களின் நல்ல பதிவுக்கு நன்றி தோழி..:-))
நன்றி ஆயுஷாபேகம்.....
Deleteதேவையும் தேவை இன்மையும் தேவைகளின் அடிப்படையிலும் மனம் ஏற்றுக் கொள்கின்ற வாழ்வின் அடிப்படையிலும் அமைகிறது என்பதே உண்மை .
ReplyDeleteநன்றி சசி...
Deleteஉங்கள் மீது உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டவதாக..
ReplyDeleteமிக அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் சகோதரி.
ஒருபக்க நியாயம்..
ஆடையில் தான் உள்ளது நாகரிகம் - டாக்டர் டி. நாராயண ரெட்டி!
ReplyDeletehttp://www.muslimpenmani.com/2011/12/blog-post_16.html?utm_source=BP_recent
நன்றி உங்கள் வரவுக்கும் உங்கள் வலையில் என் எழுத்தை பகிர்ந்ததற்கும்....
Deleteஅருமையான பகிர்வு...
ReplyDeleteஇஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு இந்த பதிவை எழுதி இருக்கிறீர்கள்...
நன்றி சகோதரி
ஹிஜாப் பற்றிய எனது பதிவு... நேரம் இருக்கும் பொது அவசியம் பார்க்கவும் :)
http://ariviyalputhaiyalalquran.blogspot.com/2012/04/blog-post_18.html
நன்றி ஷர்மிளா ஹமித்....
Deletesister can u go to www.youtube.com,type (sister mateen Important of veil)watch the clips and give u r reply.
ReplyDeletesaw the clip....and I am thankful to u for the video clip that explains the importance of hijab.....
ReplyDeletegood post
ReplyDeletethanx...
Deleteநல்ல பதிவு தோழி..நாம் அணியும் ஆடை ஆண்கள் கவனத்தை உறுத்தாமல் அணிவது நல்லது ...அதனால் தான் ஈவ்டீசிங் என்ற பெயரில் வன்முறை அதிகளவில் நடக்கிறது ...இப்போது கல்லூரி செல்லும் பெண்கள் நியூ பேஷன் என்கிற பெயரில் அணியும் ஆடைகளை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை .....
ReplyDeleteஉண்மைதான் சுதா...அந்த பெண்மணி சொல்லும்போது மதம் தாண்டிய ஒரு பெண்மையின் அவதாரமாக அவர்களை நான் பார்த்தேன்....
Delete