பெண் தெய்வம்.....
எனக்கு நீ மாற்றியதென்ன....
உன்னை மறக்க பல வருட
அவகாசம் தந்த பிறகும் முடியவில்லையே.....
உன் வயதில் பார்க்கும் அனைவரும்
என் தாயாகி போனதென்ன....
உன் சேலையை உடுத்திய போது
உன்னையே உணர்ந்ததென்ன....
முகம் காட்டும் கண்ணாடி கூட
உன் முகத்தையே என் முகமாக காட்டியதென்ன....
உன் சமையல் எனக்கு தெரியாது
உன் வேலை நேர்த்தியும் என்னிடம் கிடையாது
உன் பொறுமை என்னிடம் இல்லை
உன் தைரியம் மட்டுமே என்னிடம்
அதுவே என் பொக்கிஷமும்......
உன் பெயர் பொறித்த என் வீட்டு பாத்திரங்கள்
உன் வாசனையுடன் என் பொன் நகைகள்
உன் விருப்பத்துடனான என் படிப்பு - மொத்தத்தில்
உன் அடையாளங்களுடன் எப்போதுமே நான்......
Doris Day's 'Que Sera Sera...' song
This song is one of my childhood favorites
and i used to sing it to my mother
Dedicating to my mother...
Watch in YouTube
Lyrics
அம்மாவை வணங்குகிறேன். "உன் அடையாளங்களுடன் எப்போதுமே நான்...... "
ReplyDeleteஅன்னையை நினைத்து அற்புதமான கவிதையை வடித்துள்ளீர்கள்.
நன்றி விச்சு.....
Deleteஉன் சேலை உடுத்திய போது உன்னையே உணர்ந்தேன். அருமை அகிலா. அன்னையின் ஏக்கத்தை அழகுற உரைத்தது கவிதை. மிக ரசித்தேன்.
ReplyDeleteபடிக்கும் காலத்திலேயே இதே நாளில் என் தாயை இழந்த நினைப்புதான் இந்த கவிதை.....
Deleteநன்றி கணேஷ்......
நமது பண்பாட்டில் தாய்க்கு தான்
ReplyDeleteஉச்ச ஸ்தானம். அம்மாவே தெய்வம் என்று நமது சாத்திரங்கள் கூறும். அம்மாவைப் போல எதையும் திரும்ப எதிர்பாராத அன்பு செலுத்தக் கூடியவர்கள் எவரும் இலர் என்பதே என் கருத்து.
தாய் இருக்கும் வரை கவலை என்பதே மனிதனுக்கு இல்லை. செல்வம் அனைத்தும் அழிந்த பின்னும் அம்மா என்று அழைக்க வீட்டில் தாய் இருந்தால் போதும் அன்னம் அளிக்கும் தெய்வமே இருப்பதாக பொருள்.
தாயின் அன்பு தூய்மையானது. பிள்ளையிடம் குறை காணாதது. சமர்த்தோ, அசமர்த்தனோ ஒல்லியோ குண்டோ எப்படி இருந்தாலும் தாய் தன் பிள்ளையை ரட்சிக்கிறாள். அவளுக்கு ஈடாக வேறு எவராலும் இதை செய்ய முடியாது.
ஒரு நல்ல ஆசான் (வழிகாட்டி) பத்து (கல்வி போதிக்கும்) ஆசிரியர்களுக்கு சமம். ஒருவருடைய தந்தை நூறு ஆசான்களுக்கு சமம். ஆனால் தாயின் அன்பு தந்தையின் அன்பை விட பத்து மடங்கு அதிகம். நம்மைத் தாங்கும் நிலத்தை விட தாய் பெரியவள். தாயை விட பெரியவர் எவரும் இலர்.
தாயை போற்றிப் பாதுகாக்காமல் விட்டுவிடுகிற பிள்ளைகளை நமது கலாசாரம் ஏற்றுக் கொள்வதில்லை. மிகவும் பாவமான காரியம் தாயை அவமதிப்பது
தாயின் அன்பு தூய்மையானது. பிள்ளையிடம் குறை காணாதது. சமர்த்தோ, அசமர்த்தனோ ஒல்லியோ குண்டோ எப்படி இருந்தாலும் தாய் தன் பிள்ளையை ரட்சிக்கிறாள். அவளுக்கு ஈடாக வேறு எவராலும் இதை செய்ய முடியாது.//
Deleteஉண்மைதான் ராஜன்.....
அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதர் இல்லை பட்டை முழுசாக்கேட்டாலே கண்ணீர் பொத்துகிட்டு ஊற்றும்....நேரில் பார்க்க முடிந்த ஒரே தெய்வம்....அம்மா......
ReplyDeleteஉண்மைதான் குரு...
Deleteஎத்தனை வருடங்கள் அவள் இல்லாமல் கடந்தாலும்
அவளின் ஞாபகங்களை மட்டும் கடக்க முடியவில்லை.....
கடைசிவரை நம் தாய் நம்முடன் வேண்டும் என்கிற ஆதங்கம் மனதுள் இருக்கிறது. அந்த கொடுப்பினை இல்லாதபோது என் செய்வது?.....