கிளியும் கிண்ணமும் எதற்கு மகளே?
Reproduction of Ravi Varma's by me.... |
செப்பு உதடும் செதுக்கிய மூக்கும்
சுருள் முடியும் சுறுசுறு கண்களும்
காது கடுக்கணும் கால் கொலுசும்
என் அழகு தேவதையே
என் குட்டி பதுமையின்
தலைவாரி பொட்டிட்டு
அலங்கார ஆடை உடுத்தி
உச்சி முகர்ந்து திருஷ்டியும் கழித்து
உன் பிஞ்சு கன்னத்தில் முத்தமிட்டு
வா மகளே, உலகம் பார்க்க செல்வோம்.....
இந்த உலகம் பார்க்க செல்வோம்.....
ரவி வர்மாவின் ஓவியத்தை
ReplyDeleteஅதன் அழகும் நேர்த்தியும் குறையாது
மிக அழகாக வரைந்தும் அதனைப் பதிவாக்கித்
தந்தமைக்கும் மனமார்ந்த நன்றி
கவிதையும் அதற்கான விளக்கமாக அமைந்த பதிவும்
மிக மிக அருமை
சரியாகச் சொன்னால் சொக்கிப் போனது மனது
எனத்தான் சொல்லவேண்டும்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர்ந்து தர வேண்டுகிறோம்
உங்களின் பாராட்டுக்கு நன்றி, ரமணி அவர்களே....
Deleteஉங்களின் கை வண்ணத்தில் உருவான ஓவியத்தைக் கண்டு ரசித்தேன், வியந்தேன். அருமை. கவிதையும் மனதைக் கொள்ளை கொண்டது. அவ்வப்போது உங்கள் (ஓவிய) கைவண்ணத்தை வெளியிடுங்கள் தோழி.
ReplyDeleteநன்றி கணேஷ்....
Deleteநன்றி தோழி
ReplyDeleteஆனா இப்ப செப்பு உதடுகள் இல்லையே சாயம் பூசிய பொய்மை இல்லை பெண்மைகள் இல்ல இறுக்கு,செதுக்கிய மூக்கு அது என்னவோ சரிதான் இப்ப எல்லோர் மூக்கிலும் செதுக்கி செதுக்கி நிறைய ஓட்டைகள் அதுல மூகுதியா இல்லை சீரியல் பல்புனே தெரியல தலை வாரி பூசுடி, உண்மையில் அப்படி எல்லாம் இருக்கா எனக்கு என்னமோ டவுட் நீங்க டைம் மெசின் ஏறி 19 நூறு ட்டண்டுல இருந்து தப்பா வந்திடீன்களோ
அன்பு சகோதரி..
ReplyDeleteஓவியத்தின் வித்தகர் ரவி வர்மாவின்
ஓவியப்படைப்பின் சிந்தை தவறாத
அழகிய ஓவியம்..
அதற்கேற்ற நெஞ்சில் நிற்கும்
இனிய பாடல்..
படித்து படித்து
பார்த்து பார்த்து ரசித்தேன்..
நன்றி மகேந்திரன்...
Deleteரவிவர்மாவின் இந்த படைப்பை இதுவரை கண்டதில்லை! கவிதை நன்று! இன்னும் மெருகேற்றுங்கள்!வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்கு நன்றி....
Deleteஉங்கள் ஓவியம் அழகு. அதுவும் குட்டிக் குழந்தை குனிந்து கண்ணாடி பார்ப்பது கொள்ளை அழகு.
ReplyDeleteமிக்க நன்றி, விச்சு....
Deleteஉலகைப் பார்க்க மகளை கிளப்பும் தாயின் பாடலும்,ஓவியமும் ந்ன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி விமலன் அவர்களே...
Deleteஉங்கள் ஓவியம் அருமை...ரவி வர்மாவின் படைப்பும் அருமை...தொடரட்டும் உங்கள் ஓவியபணி..
ReplyDeleteநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...
நன்றி ராஜா.....
ReplyDelete