விளையாட்டு
கண்ணை கட்டி சுற்றிவிடப்பட்டு
நிமிட நேரம் நின்று நிதானித்து
பின் தேட கைகளை நீட்டும்போது
தொடும் இடமெல்லாம் காற்றாய்
தோழிகள் எங்கேயென்று மனம் தேடும்
சிரிப்பொலிகளில்
கொலுசுகளின் சிணுங்கலில்
வளையோசைகளில்
தாவணியின் சரசரப்பில்
எங்கும் தோழிகளின் வாசம்
கட்டை அவிழ்த்து பார்க்கும்போது
காணவில்லையே யாரையும்
வெகு நாட்களாய் சுற்றிவிட்டேனோ?
கையில் கிடைப்பதும் காணாமல் போவதுமாக
வாழ்க்கை முழுவதுமே இந்த
கண்ணாமூச்சி விளையாட்டு...
வாழ்க்கை முழுவதுமே இந்த
ReplyDeleteகண்ணாமூச்சி விளையாட்டு...
ரசிக்க தகுந்த வரிகள் கவிதை அருமை தோழி
நன்றி நண்பரே....
Deleteகண்ணை கட்டி சுற்றிவிடப்பட்டு
ReplyDeleteநிமிட நேரம் நின்று நிதானித்து
பின் தேட கைகளை நீட்டும்போது ...
கையில் கிடைப்பதும் காணாமல் போவதுமாக
வாழ்க்கை முழுவதுமே இந்த
கண்ணாமூச்சி விளையாட்டு. //
.
எவ்வளவு பெரிய விசயத்தை எத்தனை அருமையாக
எளிமையாக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்
தங்கள் சிந்தனையின் ஆழத்தையும் மொழி லாவகத்தையும்
கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி ரமணி அவர்களே...
Deleteகையில் கிடைப்பதும் காணாமல் போவதுமாக
ReplyDeleteவாழ்க்கை முழுவதுமே இந்த
கண்ணாமூச்சி விளையாட்டு...
என் பள்ளித் தோழிகள் கண்ணில் கிடைப்பதே இல்லங்க . அருமையான பகிர்வு .
அதே வருத்தம்தான் இங்கேயும், சசி....
Deleteமிக நன்று! கண்ணாமூச்சி விளையாட்டில் தோழிகள் மட்டுமல்ல... நான் சில தோழர்களையும் தொலைத்துவிட்டு இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கிறேன். மனதில நின்றது உங்கள் கவித்திறன்!
ReplyDeleteகிடைத்தால் சொல்லுங்கள்....
Deleteநாங்கள் தொலைத்துவிட்டு தேடுகிறோம்
கிடைக்கமாட்டார்கள் என்று தெரிந்தும்...
பெண்தோழிகளை கண்டுபிடிப்பது கடினம்....
நன்றி கணேஷ்....
காலத்தால் அழிந்த விடயங்களை
ReplyDeleteகண்ணாமூச்சியுடன் ஒப்பிட்டமை
அருமை சகோதரி..
தொலைந்து போனவை கிடைப்பதும்
ReplyDeleteமறுபடியும் தொலைப்பதுமாக தானே
வாழ்க்கை கண்ணாமூச்சி ஆடுகிறது.....
நன்றி மகேந்திரன்....
வாழ்க்கைச் சக்கரத்தில் நிறைய நண்பர்கள் வருகிறார்கள்... போகிறார்கள்... வாழ்க்கை முழுவதும் வரும் நண்பர்கள் வெகு சிலராகவே இருக்கிறார்கள்... அதற்கு காரணம்... கவிதையில் நீங்கள் சொல்வது போல், நாம் ரொம்ப நாட்கள் கண்ணை கட்டிவிட்டு சுற்றியிருப்போம்... அல்லது அவர்கள் சுற்றியிருப்பார்கள்...
ReplyDeleteஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் பதிவு எழுதுறீங்க... அடிக்கடி பதிவு எழுதுங்கள்... தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்...
அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்
Deleteநன்றி.....
இந்தக்கவிதையை வாழ்க்கைக்கு ஒப்பாக எடுத்துக்கொண்டாலும், ஒரு முதிர்கன்னியின் மன உளைச்சலாகவும் கொள்ள முடிகிறது. ஆம், பால்யகால, பருவகால விளையாட்டுகள் முடிந்துவிட்டன. தோழிகள் சென்றுவிட்டனர். அறியாதவளாய் இவள் இன்னும் காத்திருக்கிறாள், வாழ்க்கை விளையாட்டில். மனத்தைச் சுண்டியிழுத்தக் கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteஅழகான மற்றுமொரு விளக்கம் கீதமஞ்சரி. அப்படியும் இருக்கலாம்.....
Deleteநன்றி....
தோழிகளின் வாழ்க்கையும்,அது அலாத வாழ்கையும் இப்படித்தான் கண்ணாமூச்சு காட்டிக்கொண்டே இருக்கிறது.
ReplyDeleteஉண்மைதான் விமலன் அவர்களே.....
Delete