பெண் பிள்ளைகளும்.....
இன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு சென்றிருந்தேன். வண்ண வண்ண தோரணங்களும் பூக்களும் தேசிய கொடிகளும் ஹெலிகாப்டேர்களும் கொடி ஏற்றலும் கொடி வணக்கமும் அரசின் செயல்களை விளக்கும் ஊர்திகளும் ஆட்டம் பாட்டமும் அசத்தலாகத்தான் இருந்தது.
இதில் கடைசியாக குறிப்பிட்டிருந்த ஆட்டத்தில் பெண்பிள்ளைகள் ஆடியது கண்ணுக்கு விருந்தாகத்தான் இருந்திருக்கும் நிறைய பேருக்கு....காமெராக்களும் செல் போன் விடியோக்களும் படம் பிடித்து கொண்டிருந்தன. பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண் பிள்ளைகளை இப்படி ரோட்டில் ஆட வைக்க வேண்டிய கட்டாயம்தான் என்ன....எனக்கு முன்னே அமர்ந்திருந்த இருவர் அழகாக எதிராஜ் கல்லூரி மாணவிகள் குனிந்து ஆடும் காட்சிகளை விடியோவில் படம் பிடித்து கொண்டிருந்தார்கள். ஆடிய பெண் பிள்ளைகளின் இடுப்பு மற்றும் அனைத்தும் அவர்களின் செல் போனில்.... clear cleavage ... அதே போல் நூறு பேர் படம் பிடிக்கலாம். ஆடிய பாடல் என்னவோ தமிழ்த்தாய் வாழ்த்துதான்
தயவு செய்து இந்த மாதிரி குடியரசு தினம்,சுதந்திர தினம் போன்ற கொண்டாட்டங்களில் பள்ளி கல்லூரி பெண்களை ஆட விடுவதை விடுத்து அந்த கலையை செய்து கொண்டிருப்பவர்களை ஆட சொல்லுங்கள். அவர்கள் உடை விஷயங்களில் கவனமாக இருப்பர். அழகான தமிழ் தாய் வாழ்த்து அப்பட்டமாக துகில் உரிக்கப்பட்டது இன்று.....
அகிலா....இப்போது தான் என் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவள் பரிசுகள் வாங்கும் வரை இருந்து வந்தேன்.....இது எனக்கு நல்ல எச்சரிக்கை.....இப்போதிருந்தே இந்த விஷயத்தில் கவனமாக இருக்கணும்.....இந்த மேட்டரை இதற்க்கு முன் பல பேர் எழுதியும் பேசியும் கூட இன்னும் தொடர்வதன் அர்த்தம் தான் புரியவில்லை....வேற ஐடியாவே இவங்களுக்கு கிடைக்காதா?
ReplyDeleteகுரு.... ரொம்ப வேதனையாக இருந்தது....
ReplyDeleteகூடவே ஆசிரியர்கள் வேறு....public function எல்லாம் ஆடும்போது அடக்கமாக உடை உடுத்த சொல்லி தரமாட்டார்களா....
இந்த மாதிரி விழாக்களில் கண்டிப்பாக ஆண் குழந்தைகளோ அல்லது பெண் குழந்தைகளோ கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் குறிப்பாக பெண் குழந்தைகளளின் ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்பவர்கள் காஸ்ட்யூம் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். உடல் முழுவைதையும் மறைக்கும் இந்திய கலாச்சார ஆடைகலள் பல உண்டு. பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்தி அந்த ஆட்டம் ஏற்பாடு செய்பவர்களுக்கு நல்ல யோசனைகள் தர வேண்டும்.
ReplyDeleteஉங்கள் பதிவில் உள்ள படங்களின் மூலம் குடியரசு தினவிழாவில் நேரில் கலந்து கொண்ட அனுபவம் ஏற்பட்டது. கலர் புல்லான இரு பதிவு.
உங்களுக்கு நேரம் கிடைத்தால் மட்டும் நான் போட்ட குடியரசு தின பதிவை வந்து படியுங்கள் http://avargal-unmaigal.blogspot.com/2012/01/blog-post_25.html தலை குனிந்த இந்தியர்கள்....இவர்களில் நீங்களும் ஒருவரா ? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
நன்றி மதுரை தமிழனுக்கு......
Deleteகுடியரசு தின மற்ற புகைப்படங்களை என் FB யில் பார்க்கலாம்....
https://www.facebook.com/media/set/?set=a.3188282992440.162485.1426795980&type=1
நல்லா சொல்லியிருக்கீங்க. மாணவர்கள் கலந்து கொள்வதின் நோக்கமே அவர்களின் திறமையும் வளர்க்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில். பார்ப்பவர்களில் சிலபேர் இந்த மாதிரி தவறான கோணத்தில் பார்க்கலாம்.
ReplyDeleteபார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்....நன்றி விச்சு.....
Deleteசமூக சிந்தனையுடன் கூடிய
ReplyDeleteஅருமையான பொறுப்பான பதிவு
தங்கள் படங்கள் அனைத்தும்
மிக நேர்த்தியாக நாகரீகமாக உள்ளன
பதிவுக்காகக் கூட பதிவின் கருத்தை நிரூபிக்க
என்பதற்காகக் கூட தாங்கள் குறிப்பிடுகிறார்ப்போன்று
உள்ள படங்களை பதிவில் சேர்க்காதது
தங்கள் உயர் பண்பை காட்டிப் போகிறது
பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
நீங்கள் குறிப்பிட்டு உள்ளபடி இன்னும் சில புகைப்படங்களும் என்னிடம் இருக்கிறது. நானும் ஒரு பெண் என்பதால் அதை போட விரும்பவில்லை....நன்றி ரமணி......
Delete