என்னுள்ளே
தடுமாறுகிறேன் எனக்குள்ளே
தார்மீகம் தப்பா என்று....
கருவண்டுகள் கண் முன்னே
காற்றுகூட காப்பாற்றாதா என்று....
மனத்தடத்தில் தேடுகிறேன்
மானுடன் மயங்குவது எதற்கென்று....
போனவேகத்தில் திரும்பிவந்து
போனதை நினைத்து மருகுவேனேன்று....
மனந்தந்த போதை நினைத்ததில்லை
மாயை புரியுமென்று....
பேதலித்த காதல் அறியவில்லை
போகமாய் விளையுமென்று...
உன்னுயிர் சிலிர்க்கவில்லை
என் மெய்யில் உள்ளதென்று....
விடை தெரியா பாதையில்
வினவுகிறேன் கேள்வியொன்று....
விடை தெரியா பாதையில்
வினவுகிறேன் கேள்வியொன்று....
பேதலித்த காதல் அறியவில்லை
ReplyDeleteபோகமாய் விளையுமென்று.. இன்றைய காதல் (காமம்)இப்படித்தான் உள்ளது.
நன்றி விச்சு.....
Deleteவார்த்தைகளை மீறி உணர்வுகள்
ReplyDeleteவழிந்தோடுவதைத்தான்
கவிதைகள் எனச் சொல்லமுடியும்
இந்தக் கவிதையில் வார்த்தைகள் வெறும்
கடத்தியாக இருக்க
படைப்பின் உணர்வுகள் சிந்தாமல் சிதறாமல்
முழுமையாக படிப்பவனைத் தொட்டுப் போவது அருமை
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
உங்களின் அருமையான கருத்துக்கு நன்றி....இந்த கவிதை புரியவில்லை என்றவர்கள் அதிகம்....நன்றி ரமணி...
ReplyDelete