நானும் அப்படிதான் செய்து கொண்டிருந்தேன். எனக்கு ரயில் சிநேகிதிகள்/சிநேகிதர்கள் என்று ஒரு கூட்டம் உண்டு.குடும்பத்தில் ஒவ்வொரு உறவுகளும் ஒவ்வொரு ஊரில் போய் வசிப்பதால் வரும் சுற்றல்தான் இது. ஓரிரு ரயில் சிநேகிதங்களை தவிர மற்றவர்கள் யாரும் என்னுடன் போனில் தொடர்பில் இல்லை. சில சமயங்களில் அந்த தொடர்புகளை contact list இல் இருந்து நீக்கி விடலாமா என்று கூட யோசித்ததுண்டு.
இன்று காலையில் இருந்தே சமையல் வேலைகளுக்கு இடையில் சுற்றமும் நட்புமாக போன் மேல் போன் செய்து கொண்டிருக்க அல்லாடி கொண்டிருந்தேன். செடிகளுக்கு பூச்சி மருந்து அடிப்பவன் வேறு. இன்று வந்தால் தானே அவனும் ஐம்பது ரூபாய் சம்பாதிக்க முடியும். அவனுக்கு வடை எல்லாம் கொடுத்து அனுப்பிவிட்டு வந்தால் மறுபடியும் போன்.
இந்த முறை என்னை ஆச்சிரியபடுத்தியது அந்த அழைப்பு - எதிர்பாராத ஒரு ரயில் சிநேகிதியிடம் இருந்து. ஒரு வருடத்திற்கு முன் சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் போது ஏற்பட்ட ரயில் சிநேகிதம். என்னைப்போல நிறைய பெண்களை என் ரயில் பயணத்தின் போது சந்தித்திருக்கிறேன். கணவர் ஒரு ஊரிலும் வேலையில் இருக்கும் பிள்ளைகள் சென்னையிலும் சொந்த ஊர் வேறு பக்கமாகவும் இருக்கும். பெண்கள்தான் பெரும்பாலும் இந்த முக்கோணத்தில் பயணித்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த மாதிரி பயணித்து கொண்டிருந்தவர்தான் இந்த சிநேகிதியும். ஒரே அலைவரிசையில் (இருக்கையில் அல்ல ) இருவரும் இருந்ததால் விஷயங்களை பறுமாறிக்கொள்ள வசதியாக இருந்தது. ரயில் நிலையத்தில் இறங்கியுடந்தான் நான் அனைத்தையுமே மறக்க நம் வீட்டில் இருக்கும் ஆண் மக்கள் பல கவலைகளை ரெடியாக வைத்திருப்பார்களே.... புண்ணியவான்கள்....அப்படி மறந்து போனதுதான் இந்த சிநேகிதமும். இதை தான் 'ரயில் சிநேகிதம்' என்பார்களோ.
இன்று அவர்கள் பேசி எனக்கு வாழ்த்து சொன்னதும், நான் அவர்களுக்கு சொல்லவும் எங்கள் உரையாடல் ஒரு மூன்று நிமிடம் தான் நடந்தது. பிறகு பேசுவதாக சொல்லி வைத்தோம். மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது அந்த நிமிடங்கள். காலையில் இருந்தே, சரியாக சொல்ல போனால் நேற்றிலிருந்தே, சம்பிரதாயத்திற்காக பேசி பேசி வலித்த தலைவலி காணாமல் போயிருந்தது. என்னையே புதுப்பித்த உணர்வு வந்தது. நானும் முடிவு செய்தேன் - ரொம்ப நாள்களாக புதுப்பிக்கபடாமல் இருந்த நட்போ உறவோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு இன்று புத்தாண்டு வாழ்த்து கூறுவதென்று.
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே....
வாழ்வினில் துன்பங்கள் அகலும்
ReplyDeleteநாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
ஆண்டிது பிறந்தது 2012.
உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteவித்தியாசமான புத்தாண்டு சிறப்புப்பதிவு அருமை
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ஹலோ மேடம்.. வீட்டுக்கு வந்தா எல்லாத்தையும் மறக்கடிக்க பெண்களும் பல கவலைகளை உற்பத்தி பண்ணி வச்சுக்கிட்டு ஆண்களுக்காக காத்துட்டிருக்காங்கன்றதை மறந்துடாதீங்க... நானும் உங்களைப் போல பல பேரோட உறவைப் புதுப்பிச்சுக்கிட்டேன். அதனால எனக்கு உங்க பதிவு பிடிச்சிருந்தது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் அருமை சொன்ன விதமும் ..
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் .
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி....கணேஷ் அவர்களுக்கு, முன்னே எல்லாம் நீங்க சொன்ன மாதிரி நாங்க மட்டும்தான் கவலையை உற்பத்தி பண்ணிக்கிட்டிருந்தோம். இப்போது எல்லாம் ஆண்களும் எங்களுக்கு சரிசமமா ஆரம்பிச்சிட்டாங்க...அதுதான் எங்களுக்கு கவலையா இருக்கு....
ReplyDeleteஅனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்...உங்களின் கருத்துகளை பதித்தமைக்கு நன்றி...
ReplyDelete